தகவல் செயலாக்கம் | பருவம் 2 அலகு 6 | 5 ஆம் வகுப்பு கணக்கு - பெரிய செயலை எளிய சிறிய செயல்களாகப் பிரித்தல் | 5th Maths : Term 3 Unit 7 : Information Processing
பெரிய செயலை எளிய சிறிய செயல்களாகப் பிரித்தல்
சூழல்
கார்குயிலும் கயல்விழியும் சகோதரிகள். அவர்களின் தாய் அலமாரிகளை அடுக்கி வைக்குமாறு கூறுகிறார். கார்குயில் தன் அலமாரியை 10 நிமிடங்களில் அடுக்கினாள். ஆனால் கயல்விழியால் தன் அலமாரியை அடுக்க முடியவில்லை. கயல் விழி இதைப் பற்றி கார்குயிலிடம் கேட்டபோது அவள் அலமாரியை அடுக்கும் வேலையைப் பின்வரும் இரண்டு சிறிய செயல்களாக பிரித்து கொண்டதாக கூறினாள்.
1. பொருள்களை வகைப்படுத்துதல்
2. பொருள்களை அடுக்குதல்
இவ்வாறு கார்குயில் அந்த செயலைக் குறைந்த நேரத்தில் எளிமையாக செய்து முடித்துவிட்டாள்.
சூழல் 2
முகிலன் தன் பள்ளியின் கணித மன்ற செயலாளர் ஆவர். பள்ளியின் முதல்வர் ஒரு வினாடி வினாவை அறிவித்து அதற்கான ஏற்பாட்டைச் செய்யும் பொறுப்பை முகிலிடம் அளித்தார். முகிலன் செய்ய வேண்டிய செயல்களை எழுதுக.
செயல்பாடு 7
சூழலை கருதுக
விழியனின் பிறந்த நாள் புதன்கிழமை ஆகும். அவனுடைய தந்தை அவன் பிறந்த நாளின் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்யும் பொறுப்பை அவனின் சகோதரி பூவிழியிடம் அளித்தார். பூவிழிக்கு விழாவை ஏற்பாடு செய்வது மகிழ்ச்சியாக இருந்தாலும் அச்செயலை எப்படி செய்வது என்று தெரியவில்லை. அதற்கு அவளுடைய தந்தை இந்த நிகழ்ச்சியை சிறிய செயல்களாகப் பிரித்து ஒவ்வொன்றாக செய்து முடிக்குமாறு கூறினார். பூவிழி இவ்வாறு செய்யும் போது எளிமையாக அதனை செய்து முடிக்க முடியும் என நினைத்தார். நீங்கள் பூவிழியின் இடத்தில் இருந்தால் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு என்னென்ன செயல்கள் செய்வீர்கள்.
இரண்டு மூவிலக்க எண்களை உள்ளடக்கிய பெருக்கலின் சிக்கலைத் தீர்த்தல்
இரண்டு மூவிலக்க எண்களை பெருக்கும் முறையை பின்வரும் படிகளில் காண்போம்.
பின்வரும் படிகளை படிப்படியாக செய்யும்போது இரண்டு மூவிலக்க எண்களை பெருக்குவது எளிதாகும்.
படி 1 – முதல் எண்ணுடன் ஒன்றுகள் இடத்திலுள்ள எண்ணைப் பெருக்கும்போது
படி 2 − முதல் எண்ணுடன் பத்துகள் இடத்திலுள்ள எண்ணைப் பெருக்கும்போது
படி 3 − முதல் எண்ணுடன் நூறுகள் இடத்திலுள்ள எண்ணைப் பெருக்கும்போது
படி 4 – படி 1, படி 2 மற்றும் படி 3 ஆகிய மதிப்புகளை பின்வருமாறு எழுதிக் கூட்டும்பொழுது