Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | தமிழகத்தில் ஆசீவகத் தத்துவங்கள்

மூன்றாம் பருவம் அலகு -3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - தமிழகத்தில் ஆசீவகத் தத்துவங்கள் | 7th Social Science : History : Term 3 Unit 3 : Jainism, Buddhism and Ajivika Philosophy in Tamil Nadu

   Posted On :  19.04.2022 02:13 am

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மூன்றாம் பருவம் அலகு -3 : தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்

தமிழகத்தில் ஆசீவகத் தத்துவங்கள்

ஆசீவகர்கள் வினைப்பயன்(கர்மா), மறுபிறவி, முன்தீர்மானம் ஆகிய கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆசீவகப் பிரிவின் தலைவர் கோசலா மன்காலிபுத்தா ஆவார்.

தமிழகத்தில் ஆசீவகத் தத்துவங்கள் 


ஆசீவகத் தத்துவம்

ஆசீவகர்கள் வினைப்பயன்(கர்மா), மறுபிறவி, முன்தீர்மானம் ஆகிய கோட்பாடுகளில் நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆசீவகப் பிரிவின் தலைவர் கோசலா மன்காலிபுத்தா ஆவார். ஆசீவகர்கள் மிகக் கடுமையான துறவறத்தைக் கடைபிடித்தனர். ஆசீவக சமயமும் அதன் தத்துவமும் வேதப்பாடல்களிலும் பிராமணங்கள், ஆரண்யங்கள் ஆகியவற்றிலும் பண்டைய சமஸ்கிருதத் தொகுப்புகளிலும் சமண பௌத்த சமயங்களுக்கு முந்தைய காலப்பகுதியைச் சேர்ந்த ஆய்வுகளிலும் காணக் கிடைக்கின்றன. ஆசீவகத்திற்கான இலக்கியங்கள் இல்லாது போனாலும் கோசலரின் தத்துவங்கள் ஏனைய மதங்களில் ஜீவித்திருக்கின்றன.

ஆறாண்டு காலங்கள் கோசலா மகாவீரருடன் நெருக்கமாக நட்புக் கொண்டிருந்தார். பின்னர் இருவரும் பிரிந்தனர். மௌரியப் பேரரசர் அசோகரும் அவருடைய பேரன் தசரதாவும் ஆசீவர்களை ஆதரித்தனர். மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் வட இந்தியாவில் ஆசீவகம் சரிவைச் சந்தித்தது. இதனிடையே தென்னிந்தியாவில் பரவியிருந்த ஆசீவகம் அங்கே பல நூற்றாண்டுகளுக்குத் தொடர்ந்து செயல்பட்டது.


வரலாறு முழுவதிலும் ஆசீவகர்கள் அனைத்து இடங்களிலும் அடக்குமுறையைச் சந்திக்க நேர்ந்தது. பல்லவர், சோழர், ஹோய்சாளர் ஆகியோரது ஆட்சிக் காலங்களில் கிராம சமூகத்தினர் ஆசீவகர்கள் மீது சிறப்பு வரிகளை விதித்தனர். இதுபோன்ற இடர்ப்பாடுகள் இருந்தபோதிலும் 14ஆம் நூற்றாண்டு வரை இன்றைய கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில், பாலாற்றின் பகுதிகளில் (வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்) ஆசீவகம் செல்வாக்கு பெற்றுத்திகழ்ந்தது. இறுதியில் ஆசீவகர்கள் வைணவத்தால் ஈர்த்துக்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.


சுருக்கம்

சமணத்தை அறிந்து கொள்வதற்கான சான்றுகளும் இலக்கியங்களும் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் சமணம் இருந்தமை குறித்துத் திறனாய்வு செய்யப்பட்டுள்ளது. 

தமிழகத்திலிலுள்ள சமண நினைவுச் சின்னங்களும் கலைகளும் முக்கியமாக சித்தன்னவாசலும் கழுகுமலையும் சித்தரிக்கப்பட்டுள்ளன. 

'பள்ளி' வாயிலாக கல்விக்கு சமணர்கள் ஆற்றிய பங்களிப்பு விளக்கப்பட்டுள்ளது.

பௌத்த போதனைகள் பகுத்தாய்வு செய்யப்பட்டுள்ளன. 

தமிழ் நாட்டில் பௌத்தம் செயல்பட்டது ஆய்வு செய்யப்பட்டுள்ளது 

தமிழகத்தின் பௌத்த மரபு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன. 

ஆசீவகத் தத்துவத்தின் சாரமும் அது தமிழ் நாட்டில் இருந்தமையும் விவரிக்கப்பட்டுள்ளன. 


மூலாதார நூல்கள் 

1. Glimpses of World Religions: Buddhism, Jaico, 2004.

2. Henry Thomas, Dana Lee Thomas, Living Biographies of Great Religious Leaders, Bharatiya Vidya Bhavan, 1996. 

3. Abraham Early, Gem in the Lotus, Penguin, 2002. 

4. P.C. Alexander, Buddhism in Kerala, Annamalai University, 1949. 

5. Times of India, 21 July 2014. 

6. The Hindu, 7 September 2014.


கலைச்சொற்கள்

1. பழமை சாராத, வழக்கத்திலுள்ள  மதக்கொள்கைக்கு மாறான – heterodox - not conforming to orthodox  beliefs, especially religious ones, unorthodox 

2. ஒரு விதி, பொது ஒழுங்கு – canon - a rule, an accepted principle

3. ஒருமனதாக - unanimous - all sharing the same view

4. துறவி, சந்நியாசி - ascetic - monk, hermit

5. சீர்கெடு, மோசமடை - deteriorate - to grow worse

6. தடங்கள், அடையாளங்கள், சுவடுகள் - vestiges - things left behind, remains, traces

7. அடிநில குகை - cavern - a large deep underground cave

8. சிறு குன்று - hillock - small hill, mound

9. கட்டடத்தின் முகப்பு - facade - the front of a building

10. சுவரில் அல்லது மேற்கூரையில் வரையப்படும் ஓவியங்கள் – frescoes - paintings done in water colour on a wall or ceiling

11. சுவரோவியம் – mural - a large picture painted on a wall

12. உத்வேகம், உந்துசக்தி - impetus - motivation, stimulus

13. இரட்சிப்பு, முக்தி, விமோசனம் - salvation - saving from harm, ruin or loss

14. ஐயுறவுவாத, சமய ஐயுறவாளர் - sceptic (skeptic) - someone who habitually doubts accepted beliefs 

15. அடக்கமுடியாத ஆசை, மிகு விருப்பம் - craving - a strong desire

16. துன்புறுத்தல், அடக்குமுறை – persecution - unfair treatment of a person or a group, especially because of their religious or political beliefs



இணையச்செயல்பாடு

புத்த மதம்

இச்செயல்பாட்டின் மூலம் புத்தமதத்தினரைப் பற்றின கதைகளை அறிந்து கொள்ளலாம்.


படிநிலைகள் : 

படி 1: கொடுக்கப்பட்டுள்ள உரலி (URL) அல்லது QR குறியீட்டினைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப்பக்கத்திற்கு செல்க. 

படி 2: அதில் Story of Buddha எனும் வண்ண மிகு பக்கம் ஒன்று தோன்றும். 

படி 3: திரையில் தோன்றும் புத்தரின் படத்தினை சொடுக்கவும். 

படி 4: கிழே கொடுக்கப்பட்டுள்ள ebook னை சொடுக்கி இந்த புத்தகத்திற்கான PDF வடிவமைப்பினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.


புத்த மதம் உரலி:

http://www.buddhanet.net/e-learning/buddhism/storybuddha.htm

** படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே. 

* தேவையெனில் Adobe Flash' ஐ அனுமதிக்கவும்.


Tags : Term 3 Unit 3 | History | 7th Social Science மூன்றாம் பருவம் அலகு -3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : History : Term 3 Unit 3 : Jainism, Buddhism and Ajivika Philosophy in Tamil Nadu : Ajivika Philosophy in Tamil Nadu Term 3 Unit 3 | History | 7th Social Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மூன்றாம் பருவம் அலகு -3 : தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள் : தமிழகத்தில் ஆசீவகத் தத்துவங்கள் - மூன்றாம் பருவம் அலகு -3 | வரலாறு | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : வரலாறு : மூன்றாம் பருவம் அலகு -3 : தமிழகத்தில் சமணம், பௌத்தம், ஆசீவகத் தத்துவங்கள்