நினைவில் கொள்க
• நெறிமுறை என்பது குறிப்பிட்ட செயலை முடிப்பதற்கான வரையறுக்கப்பட்ட
கட்டளைகளின் தொகுதியாகும்.
• நெறிமுறையாளர் என்பவர் நெறிமுறை எழுதுவதில் திறமையானவர் எல்லையுற்றது
(finiteness) - நெறிமுறை வரையறுக்கப்பட்ட படிநிலைகளின் எண்ணிக்கைக்குப் பிறகு நிறுத்தப்பட்ட
வேண்டும் என்பதை வரையறுக்கிறது.
• நிரல் என்பது நிரலாக்க மொழியில் நெறிமுறையை வெளிப்படுத்துதல்
ஆகும்.
• நெறிமுறை ஆய்வு (algorithm analysis) என்பது நெறிமுறையின்
நேர மதிப்பீடு மற்றும் இட சிக்கல்களை மாறுபட்ட உள்ளீட்டு அளவுகளுக்கு வரையறுப்பதாகும்.
• இடச்சிக்கல் என்பது நெறிமுறைக்குத் தேவைப்படும் இடத்தின் அளவீடு
ஆகும்.
• மேல் எல்லை என்பது நெறிமுறையின் மிகவும் மோசமான தீர்வு ஆகும்.
• கீழ் எல்லை (lower bound) என்பது கொடுக்கப்பட்டுள்ள சிக்கலுக்கான
கோட்பாட்டளவில் மிகச் சிறந்த தீர்வு ஆகும்.
• நெறிமுறை எடுத்துக்கொள்ளும் படிநிலைகளின் எண்ணிக்கையின் மூலம்
நெறிமுறையின் நேரச்சிக்கல் அளவிடப்படுகிறது.
• நெறிமுறையின் செயல்திறன் என்பது நெறிமுறையின் ஒரு பண்பாகும்.
நெறிமுறை பயன்படுத்தும் கணக்கீட்டு வளங்களின் எண்ணிக்கையோடு தொடர்புடையது.
• நெறிமுறையுக்தி என்பது நெறிமுறையை வடிவமைக்கும் முறையாகும்.
• நினைவிட நேரம் அல்லது நேரம் நினைவிட பரிமாற்றம் என்பது சிக்கலைத்
தீர்க்கும் அல்லது குறைந்த நேரத்தில் அதிக சேமிப்பு இடத்தை அல்லது நினைவிடத்தை கணக்கீடு
செய்யும் முறை ஆகும்.
• Asymptotic குறியீடுகளானது நேரம் மற்றும் இடச்சிக்கலுக்கான
அர்த்தமுள்ள கூற்றுகளைப் பயன்படுத்தும் மொழியாகும்.
• வரிசைமுறை தேடல் அல்லது தொடர் தேடல் என்பது பட்டியலில் ஒரு
குறிப்பிட்ட மதிப்பை கண்டுபிடித்து, வரிசையிலுள்ள ஒவ்வொரு உறப்பையும் சோதித்து, வேண்டிய
உறுப்பைக் கண்டுப்பிடிக்கும் வரை தேடும் முறையாகும்.
• இரும தேடல் நெறிமுறையானது பிரித்து கைப்பற்றுதல் தேடலைப் போல
இலக்கு மதிப்பின் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்கிறது.
• குமிழி வரிசையாக்கமானது எளிய வரிசையாக்க நெறிமுறையாகும். வரிசைப்படுத்தப்படாத
வரிசையாக இருத்தல் மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த உறுப்புகளை இடமாற்றம் செய்யும்.
• தேர்ந்தெடுப்பு வரிசையாக்கம் குமிழி வரிசையாக்கத்தைவிட மேம்பட்டதாகும்.
பட்டியலில் ஒவ்வொரு முறை நுழையும் போதும் ஒரே ஒரு இடமாற்றம் நடைபெறும்.
• ஒன்றிணைத்தல் வரிசையாக்கம் முதலில் அணியிலுள்ள மதிப்புகளை
சரிபாதியாக பிரித்து அனைத்தையும் வரிசையாக்கப்பட்ட அணியாக ஒன்றிணைக்கிறது.
• இயங்கு நிரலாக்கமானது சிக்கலைத் தீர்த்து சிறிய துணை சிக்கல்களாக
பிரித்து அதன்பிறகு மீண்டும் அதை பயன்படத்துவதற்கு பயன்படுகிறது.