Home | 2 ஆம் வகுப்பு | 2வது சூழ்நிலையியல் | நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள்

பருவம்-1 அலகு 4 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் - நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் | 2nd EVS Environmental Science : Term 1 Unit 4 : Animals Around Us

   Posted On :  12.05.2022 07:11 pm

2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம்-1 அலகு 4 : நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள்

நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள்

நீங்கள் கற்க இருப்பவை * விலங்குகள், அவற்றின் வாழிடங்கள் * வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள் * விலங்குகளின் இளம் உயிரிகள்

அலகு 4

நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள்




நீங்கள் கற்க இருப்பவை

* விலங்குகள்அவற்றின் வாழிடங்கள்

* வீட்டு விலங்குகள்காட்டு விலங்குகள்

* விலங்குகளின் இளம் உயிரிகள்

 

வீட்டு விலங்குகள் - பண்ணை விலங்குகள்


சிக்குவும் டிக்குவும் சிட்டுக்குருவியின் இரண்டு குஞ்சுகள். ஒரு நாள் ...........


டிக்கு : அம்மாசிக்கு இன்று கூட்டிலிருந்து வெளியில் பறந்து சென்று வர ஆசைப்படுகிறது.

அம்மா : சரி. ஆனால் நீண்ட தூரம் பறந்து போகக் கூடாது.

சிக்கு மிகவும் மகிழ்ச்சி அடைந்தது. அது கூட்டிலிருந்து பறந்து விலங்குகளின் வாழிடத்தை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது.

விலங்குகளில் பல வகைகள் உள்ளன. அவற்றுள் சில விலங்குகள் நம்மோடு வீட்டிலும்பண்ணைகளிலும் வாழ்கின்றன (வீட்டு விலங்குகள்). சில விலங்குகள் காட்டிலும் (காட்டு விலங்குகள்)சில விலங்குகள் நீரிலும் வாழ்கின்றன.

 

படத்தில் உள்ள விவசாயியின் வீட்டில் என்னென்ன விலங்குகளைப் பார்க்கிறீர்கள்?

 


விடை : குதிரை, மாடு, நாய், எருது, ஆடு, சேவல், கன்று, காகம்

நம் வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் இந்த விலங்குகளைப் பார்க்க முடியும். நாம் அவற்றைப் பாதுகாக்கிறோம். இவை வீட்டு விலங்குகள் என அழைக்கப்படுகின்றன. இவை நமக்குப் பல வழிகளில் உதவி புரிகின்றன.

சில வீட்டு விலங்குகள் நமக்கு விவசாயத் தொழிலில் பயன்படுகின்றன. இவை பண்ணை விலங்குகள் என அழைக்கப்படுகின்றன.

சிக்குபண்ணையையும் பண்ணை விலங்குகளையும் பார்த்தது. தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவற்றுடன் பேச ஆரம்பித்தது.

 "நான் ஒரு சிட்டுக்குருவிஎன் பெயர் சிக்கு".



"சிக்கு! நான் ஓர் எருது. நான் விவசாய நிலங்களை உழுவதற்குப் பயன்படுகிறேன்". "சிக்கு! நான் ஒரு பசு. நான் பால் தருவேன். மேலும் எனது சாணம் உரமாகவும் எரிபொருளாகவும் பயன்படுகிறது. என் இளம் உயிரி கன்றுக்குட்டி என அழைக்கப்படுகிறது. விவசாயி எங்களை மாட்டுத் தொழுவத்தில் வைத்துப் பராமரிக்கிறார்".


"சிக்கு! நான் தான் குதிரை. மக்கள் வண்டி இழுக்கவும் பயணம் செய்யவும் என்னைப் பயன்படுத்துகிறார்கள். அவர்கள் என்னைக் குதிரை லாயத்தில் வைத்து பராமரிக்கிறார்கள். இது என் இளம் உயிரி குதிரைக்குட்டி".

"என்னால் நின்றுகொண்டும் படுத்துக் கொண்டும் தூங்க முடியும் என்பது உனக்குத் தெரியுமா?"


"சிக்கு! நான் ஒரு கழுதை. நான் சாம்பல் நிறத்தில் இருப்பேன். மக்கள் சுமைகளைச் சுமந்து செல்ல என்னைப் பயன்படுத்துகிறார்கள். இது என் இளம் உயிரி கழுதைக் குட்டி. என் வாழிடத்தைக் கழுதை லாயம் என்பர்".


விலங்குகளை அதன் வாழிடத்தோடும் அவற்றின் இளம் உயிரிகளோடும் கோடிட்டு இணைக்க.



வீட்டு விலங்குகள் - விலங்குகளிடமிருந்து நமக்குக் கிடைப்பவை....


வீட்டு விலங்குகளுள் சில நமக்கு பால்முட்டைஇறைச்சிதேன் போன்ற உணவுப் பொருள்களைக் கொடுக்கின்றன. சில விலங்குகள் கம்பளிதோல் போன்ற பொருள்களைக் கொடுக்கின்றன.


"சிக்கு! நான் ஒரு வெள்ளாடு. இது என் இளம் உயிரி ஆட்டுக்குட்டி. மக்கள் எங்களை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுபட்டியில் வைத்துப் பராமரிக்கிறார்கள். நான் மக்களுக்குப் பால்இறைச்சி போன்றவற்றைத் தருகிறேன்".

"சிக்கு! நான் ஒரு செம்மறி ஆடு. இது என் இளம் உயிரி ஆட்டுக்குட்டி. எங்களைப் பட்டியில் வைத்துப் பராமரிக்கிறார்கள். நான் மக்களுக்குக் கம்பளியைத் தருகிறேன். கம்பளியிலிருந்து கம்பளிச் சட்டைகையுறை மற்றும் காலுறை போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இவை குளிர் காலங்களில் உடலைக் கதகதப்பாக வைக்க உதவுகின்றன".



"சிக்கு! நாங்கள் தேனீக்கள். எங்கள் வாழிடம் தேன் கூடு. நாங்கள் அதிக எண்ணிக்கையில் ஒன்றாகக் கூடி வாழ்கிறோம். நாங்கள் பூக்களிலிருந்து தேனைத் தயாரிக்கிறோம்".



"சிக்கு! நான் ஒரு கோழி. இது என் இளம் உயிரி கோழிக்குஞ்சு. என் வாழிடத்தைக் கோழிக்கூண்டு என்பர். நான் முட்டை மற்றும் இறைச்சியைக் கொடுக்கிறேன்".

"வான்கோழி மற்றும் வாத்து போன்றவையும் முட்டை, இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன".


"உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி"என்று அனைவருக்கும் நன்றி கூறிசிக்கு பறந்து சென்றது.


 

இளம் உயிரிகளின் பெயர்களை எழுது.



 (கன்று, குஞ்சு, குட்டி)


வீட்டு விலங்குகள் - செல்லப் பிராணிகள்


வீட்டு விலங்குகளில் சில விலங்குகளை நம் வீட்டிலேயே வளர்க்கிறோம். அவை செல்லப் பிராணிகள் என அழைக்கப்படுகின்றன.

சிக்கு காட்டிற்குச் செல்லும் வழியில் சுரபிசெம்மலர் ஆகியோர் தங்கள் செல்லப் பிராணிகளுடன் இருப்பதைப் பார்த்தது.

சுரபி



இது எனது பூனைஇவை அதன் குட்டிகள். இவை எங்கள் வீட்டில் வளர்கின்றன".



"இது என்னுடைய நாய்இது அதன் குட்டி. நாங்கள் இவற்றை எங்கள் வீட்டில் உள்ள நாய்ப்பட்டியில் வைத்து வளர்க்கிறோம்".

"எனக்கு என் செல்லப் பிராணிகளை மிகவும் பிடிக்கும். நான் அவற்றுக்கு உணவு அளித்துஅவற்றோடு விளையாடுவேன். அவற்றுக்கும் என்னை மிகவும் பிடிக்கும். அவை என்னைப் பார்த்தவுடன் தன் வாலை ஆட்டும். நான் அவற்றை நலமாக வைத்துக் கொள்ள மருத்துவரிடம் அழைத்துச் செல்வேன்".

 

நீங்கள் ஏதேனும் செல்லப் பிராணிகளை வளர்க்கிறீர்களா? அவற்றைப் பற்றி .. உன் நண்பர்களுடன் / ஆசிரியருடன் கலந்துரையாடுக. 

நீங்கள் வளர்க்கும் செல்லப் பிராணி நாய்

உங்கள் செல்லப் பிராணியின் பெயர் பிட்டு

நீங்கள் அதற்குத் தரும் உணவு பால்சில நாய் உணவுகள்

அதைப் பாதுகாக்கும் விதம் அது ஆரோக்கியமாக இருக்க மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன்.


கோடிட்ட இடங்களை நிரப்புக.



சங்கரிடம் இரண்டு பூனைகள், மூன்று நாய்கள் உள்ளன.

ஆகவே சங்கரிடம் உள்ள செல்லப் பிராணிகளின் மொத்த எண்ணிக்கை ஐந்து

 

காட்டு விலங்குகள்


சிக்கு ஒரு காட்டிற்குள் நுழைந்தது. காடு என்பது பலவகை விலங்குகளின் வாழிடம் ஆகும்.


"என் பெயர் சிக்கு. நான் ஒரு சிட்டுக்குருவி. நான் உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாமா?"



"சிக்கு! நான் ஒரு யானை. எனக்கு நீரில் விளையாட மிகவும் பிடிக்கும். இது என் இளம் உயிரி யானைக்கன்று".

யானைக்கு நீண்ட தும்பிக்கையும் பெரிய காதுகளும் உள்ளன. சில யானைகளுக்குத் தந்தங்களும் உண்டு. பற்களின் மாறுபட்ட அமைப்பே தந்தங்கள் ஆகும்.



'ஓ...... அது என்ன சத்தம்........ பயமாக இருக்கிறதே!


"ஓ....... அதுவா....... சிங்கத்தின் முழக்கம். சிங்கத்தின் வாழிடத்தை குகை என அழைப்பர். ஆண் சிங்கத்திற்குப் பிடரிமயிர் உண்டு".

"சிங்கமும் புலியும் கூட காட்டில் வாழ்கின்றன. அவற்றின் இளம் உயிரிகளை சிங்கக்குருளை, புலிப்பறழ் என்பர்".



"புலியின் வாழிடத்தையும் குகை என்பர். அதன் உடலில் கருப்பு நிறக் கோடுகள் காணப்படும். சில புலிகள் வெள்ளை  நிறத்திலும் காணப்படும்".



சிக்கு யானைக்கு நன்றி கூறிக் காட்டிலிருந்து பறந்து சென்றது.





 

விலங்குகள் பற்றிய உண்மைகள்



 

சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்துக் கோடிட்ட இடங்களை நிரப்புக.



அ. யானைக்கு தும்பிக்கை இருக்கும். (கோடு / தும்பிக்கை)

ஆ. தந்தம் என்பது பற்களின் மாறுபட்ட அமைப்பு ஆகும். (தந்தம் / தும்பிக்கை)

இ. இவை சிறிய கண்களையும் பெரிய காதுகளையும் பெற்றிருக்கும். (சிறிய / பெரிய)

 

நீர் வாழ் விலங்குகள்


சிக்கு கூட்டிற்குத் திரும்பும் வழியில் ஒரு நீர் நிரம்பிய குளத்தில் மீன், தவளை, ஆமை, நண்டு, கொக்கு போன்ற விலங்குகளைப் பார்த்தது.


இவற்றுள் தவளைநண்டுஆமை போன்றவை நீரிலும் நிலத்திலும் வாழ்பவை.

 

உங்களுக்குத் தெரியுமா?

மீனின் இளம் உயிரி மீன்குஞ்சு எனவும் தவளையின் இளம் உயிரி தலைப்பிரட்டை எனவும் அழைக்கப்படுகின்றன.


பறவைகளும் அவற்றின் கூடுகளும்


சிக்கு சில பறவைகளையும் அவற்றின் கூடுகளையும் பார்த்தது. ஒவ்வொரு பறவையின் கூடும் வெவ்வேறு மாதிரியாக இருக்கும். குச்சி, முட்கள், பஞ்சு, நார் போன்றவற்றைப் பயன்படுத்தி பறவைகள் கூடுகளைக் கட்டுகின்றன. மரங்கொத்தி, ஆந்தை, கிளி போன்ற பறவைகள் மரங்களில் காணப்படும் பொந்துகளில் வசிக்கின்றன.


உங்களுக்குத் தெரியுமா?

குயில் அதன் கூட்டைக் கட்டாமல் பிற பறவைகளின் கூடுகளில் அதன் முட்டைகளை இடும்.

 

சிக்கு அதன் கூட்டினை வந்து அடைந்தது. டிக்குவும் அதன் தாய்க் குருவியும் சிக்குவைப் பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சி அடைந்தன. சிக்குதான் கண்ட விலங்குலக அனுபவங்களைப் பற்றி அவர்களிடம் கூறியது.

 

பொருந்தாத ஒன்றைக் கண்டறிந்து உரிய கட்டத்தில் (குறி இடுக.


 

 

 

 

Tags : Term 1 Chapter 4 | 2nd EVS Environmental Science பருவம்-1 அலகு 4 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல்.
2nd EVS Environmental Science : Term 1 Unit 4 : Animals Around Us : Animals Around Us Term 1 Chapter 4 | 2nd EVS Environmental Science in Tamil : 2nd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம்-1 அலகு 4 : நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் : நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் - பருவம்-1 அலகு 4 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் : 2 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் : பருவம்-1 அலகு 4 : நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள்