நம்மைச் சுற்றியுள்ள தாவரங்கள் | பருவம்-1 அலகு 3 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல் - பதில்களுடன் கூடிய கேள்விகள் | 2nd EVS Environmental Science : Term 1 Unit 3 : Plants Around Us
நம்மைச்
சுற்றியுள்ள தாவரங்கள் (பருவம்-1 அத்தியாயம்
2 | 2வது EVS சுற்றுச்சூழல் அறிவியல்)
மதிப்பீடு
1. படங்களை அவற்றின் பெயர்களுடன் பொருத்துக
2. பொருத்துக.
அ. பூசணிக்காய் - ஏறு கொடி
ஆ. மிளகு – இழை
இ. வேப்பமரம் - படர் கொடி
ஈ. திராட்சை – நறுமணப் பொருள்
உ. பருத்தி – மரக்கட்டை
விடை :
அ. பூசணிக்காய் - படர் கொடி
ஆ. மிளகு - நறுமணப் பொருள்
இ. வேப்பமரம் - மரக்கட்டை
ஈ. திராட்சை – ஏறு கொடி
உ. பருத்தி – இழை
3. கோடிட்ட இடங்களை நிரப்புக.
அ.
தரைக்கு கீழ்
வளரக்கூடிய தாவரப்பகுதிகள் தண்டுத்தொகுப்பு எனப்படும். (கீழ் / மேல்)
ஆ.
தாவரத்தின் பச்சை நிறப்பகுதி இலைகள் ( வேர்கள் /
இலைகள் )
இ. பாக்கு
மரம் உணவருந்தும் தட்டுகள் தயாரிக்கப் பயன்படுகிறது.
(பாக்கு மரம் / வேப்ப மரம் )
ஈ.
மொட்டு மலராக
வளரும். ( மலராக / கனியாக)
4. சரியான பதிலைத் தேர்ந்தெடுத்து வட்டமிடுக.
அ.
நார் தரும் தாவரம்.
(i) வாழை
(ii) துளசி
(iii) ரோஜா
விடை : (i) வாழை
ஆ.
படர் கொடிக்கு எடுத்துக்காட்டு.
(i) புதினா
(ii) நெல்
(iii) முலாம்பழம்
விடை : (iii) முலாம்பழம்
இ. இது
ஒரு நறுமணப் பொருள்.
(i) பிரியாணி இலை
(ii) வாழை இலை
(iii) கீரை
விடை : (i) பிரியாணி
இலை
ஈ.
முறம் தயாரிக்கப் பயன்படும் தாவரம்.
(i) பனை மரம்
(ii) தென்னை மரம்
(iii) மூங்கில்
விடை : (i) பனை மரம்
தன் மதிப்பீடு
* என்னால் தாவரப் பகுதிகளின் பெயர்களைக் கூற
முடியும்
* என்னால் தாவர வகைகளை அடையாளம் காணமுடியும்
* எனக்குத் தாவரங்களின் சில பயன்கள் தெரியும்
* அனைத்து உயிரினங்களுக்கும் ஆதாரமாக உள்ள
தாவரங்களை நான் பாதுகாப்பேன்