நா. காமராசன் | பருவம் 1 இயல் 1 | 4 ஆம் வகுப்பு தமிழ் - அன்னைத் தமிழே! | 4th Tamil : Term 1 Chapter 1 : Annaith Tamilay
1. அன்னைத் தமிழே!
அன்னைத் தமிழே - என்
ஆவி கலந்தவளே!
என்னை வளர்ப்பவளே!
என்னில் வளர்பவளே!
உன்னைப் புகழ்வதற்கே
உலகில் பிறப்பெடுத்தேன்
சொல்லில் விளையாடச்
சொல்லித் தந்தவளே!
சொல்லில் உனது புகழ்
சொல்ல முடியலையே!
- நா. காமராசன்
பொருள் அறிவோம்
என் அன்னையாகிய தமிழே! என் உயிரில் கலந்தவளே! என்னை
வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், என்
உடன் சேர்ந்து வளர்பவளே! உன்னைப் புகழ்வதற்காகவே இவ்வுலகில் பிறந்துள்ளேன்.
சொல்லைக் கொண்டு விளையாடு வதற்குச் சொல்லிக் கொடுத்தவளே! அதே சொல்லினால் உனது
புகழை என்னால் கூற முடியவில்லையே!
ஓசை நயமும் கருத்தும் மிக்க பாடல்களைக் கேட்டுப் புரிந்துகொள்ளுதல்.