ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் | உயிரியல் | அறிவியல் - பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்க | 9th Science : Biology : Nutrition and Health
IX. மிகச்
சுருக்கமாக
விடையளி
1.
வேறுபடுத்துக
அ) குவாசியோர்க்கர்
மற்றும்
மராஸ்மஸ்
ஆ) மேக்ரோ மற்றும் மைக்ரோ தனிமங்கள்
விடை:
அ) குவாசியோர்க்கர் மற்றும் மராஸ்மஸ்
குவாசியோர்க்கர்:
1. புரதக்குறைபாடு 1 - 5 வயது குழந்தைகள்
2. அறிகுறிகள் முகம், பாதம் வீக்கம், உப்பின் வயிறு - உடல் தசை இழப்பு
மராஸ்மஸ் :
1. புரதம் கார்போஹைடிரேட் மற்றும் கொழுப்பு குறைபாடு 1 வயதுக்குக் குறைவான குழந்தைகள்
2. வளர்ச்சி குறைபாடு, உடல் தசை இழப்பு, கடும் வயிற்றுப் போக்கு
ஆ) மேக்ரோ மற்றும் மைக்ரோ தனிமங்கள் :
மேக்ரோ தனிமங்கள் :
1. சீரான உடல் இயக்கத்திற்கு அதிகமாக தேவைப்படும் நுண்ணூட்டச் சத்துக்கள்
2. எ.கா. கால்சியம், சோடியம்
மைக்ரோ தனிமங்கள் :
1. சீரான உடல் இயக்கத்திற்கு குறைந்த அளவில் தேவைப்படும்
நுண்ணூட்டச் சத்துக்கள்.
2. எ.கா. இரும்பு, அயோடின்
2.
உணவுப்
பாதுகாப்புப்
பொருளாக
உப்பு
பயன்படுத்தப்படுவது
ஏன்?
விடை:
• உணவின் ஈரப்பதம் - சவ்வூடுபரவல் மூலம் நீக்கப்படுகிறது
• பாக்டீரியாக்களின் வளர்ச்சி - தடுக்கப்படுகிறது
• நுண்ணுயிரிகளின் நொதிகளின் செயல்பாடு குறைக்கப்படுகிறது
3.
கலப்படம்
என்றால்
என்ன?
விடை:
உணவில் வேறு பொருட்களைச் சேர்த்தல் அல்லது நீக்குதல்.
4.
உணவில்
இயற்கையாகத்
தோன்றும்
நச்சுப்
பொருட்கள்
இரண்டினைக்
கூறுக.
விடை:
• ஆப்பிள் விதைகள் - புரூசிக் அமிலம் காணப்படுகிறது
• மீன்கள் - கடலினை மாசுபடுத்திய 'மெர்க்குரி போன்ற நச்சுகள்' காணப்படுகிறது
5.
உணவில்
இருந்து
உடலுக்கு
வைட்டமின்
-D சிறுகுடலில்
உறிஞ்சப்படுவதற்குத்
தேவையான
காரணிகள்
யாவை?
விடை:
1. கால்சியம்,
2. வைட்டமின் D
3. காலை நேர சூரிய ஒளி
6.
கீழ்க்கண்ட
தாது
உப்புகளின்
ஏதேனும்
ஒரு
செயல்பாட்டை
எழுதுக.
அ) கால்சியம்
ஆ) சோடியம்
இ) இரும்பு
ஈ) அயோடின்
விடை:
அ) கால்சியம் - எலும்புகளின் வளர்ச்சி
ஆ) சோடியம் - நரம்பு உணர்த்திறன் கடத்தல்,
இ) இரும்பு - ஹீமோகுளோபினின் முக்கியக் கூறாகச் செயல்படுதல்
ஈ) அயோடின் - தைராய்டு ஹார்மோன் உருவாக்குதல்
7.
ஏதேனும்
இரண்டு
உணவுப்
பாதுகாப்பு
முறைகளை
விவரி.
விடை:
உப்பினைச் சேர்த்தல் :
1. உணவில் உள்ள ஈரப்பதம் சவ்வூடு பரவல் மூலம் நீக்கப்படுதல்.
2. இதன்மூலம் பாக்டீரியாக்களின் வளர்ச்சி தடைபடுகிறது.
3. நுண்ணுயிரிகளின் நொதிகளின் செயல்பாடு குறைதல்.
புகையிடுதல் :
இறைச்சி மற்றும் மீனை புகைத்தலுக்கு உட்படும் போது புகையின் உலர் செயல் உணவை பாதுகாக்கிறது.
8.
கலப்படம்
செய்யப்பட்ட
உணவை
உண்பதால்
ஏற்படும்
விளைவுகள்
யாவை?
விடை:
1. வயிற்றுப்போக்கு, குமட்டல், வாந்தி, வாயுக்கோளாறுகள்
2. நோய் எதிர்ப்புத்திறன் குறைதல்.
3. கல்லீரல், சிறுநீரகம் பாதிப்படைதல்
4. மலக்குடல் புற்றுநோய்
5. குறைபாடுகளுடைய குழந்தை பிறத்தல்
X. விரிவாக விடையளி
1.
நமது
உடல்
வளர்ச்சிக்கு
வைட்டமின்கள்
எவ்வாறு
பயன்படுகின்றன?
கொழுப்பில்
கரையும்
வைட்டமின்களின்
மூலங்கள்,
அதன்
குறைபாட்டு
நோய்கள்
மற்றும்
அதன்
அறிகுறிகளை
அட்டவணைப்படுத்துக.
விடை:
வைட்டமின்களின் பயன்பாடுகள் :
1. வைட்டமின்களின் மிக முக்கய ஊட்டச்சத்தாகும்.
2. இவை மிகச்சிறிய அளவில் தேவைப்படுகிறது.
3. இவை குறிப்பிட்ட உடற் செயலியல் மற்றும் உயிர் வேதியியல் செயல்பாடுகளுக்கு தேவைப்படுகிறது.
2.
இந்தியாவிலுள்ள
உணவுக்
கட்டுப்பாடு
நிறுவனங்களின்
பங்கினை
விவரி.
விடை:
1. நாடு முழுவதும் தானியங்களை விநியோகம் செய்தல்.
2. சந்தையில் விலையை ஒழுங்குபடுத்துதல்.
3. விவசாயம் பொருள்களுக்கு சரியான விலை கொடுத்தல்
4. தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய போதுமான தானியங்களைக் கொடுத்தல்.
உணவு தரகட்டுப்பாட்டு நிறுவனங்களின் பங்குகள்.
XI. உயர் சிந்தனை
வினாக்கள்
1.
படத்தைப்
பார்த்து
கீழ்க்கண்ட
வினாக்களுக்கு
விடையளி.
அ) கொடுக்கப்பட்டுள்ள
படத்தில்
நடைபெறும்
செயல்முறையின்
பெயரென்ன?
விடை:
பாலை பாஸ்டர் பதனம் செய்யும்முறை (Pasteurisation)
ஆ) மேற்கண்ட செயல்முறையின்
மூலம்
பாதுகாக்கப்படும்
உணவுப்பொருள்
எது?
விடை:
பால்
இ) மேற்கண்ட செயல்முறையானது
எந்த
வெப்பநிலையில்
நடைபெறுகிறது?
விடை:
63°C ல் 30 நிமிடங்கள் கொதிக்க வைத்தல்
2.
இரத்தச்
சோகையால்
பாதிக்கப்பட்ட
ஒரு
சிறுமியிடம்
இலை
வகைக்
காய்கறிகள்
மற்றும்
பேரீச்சம்
பழத்தை
அதிகளவில்
உணவில்
சேர்த்துக்
கொள்ளுமாறு
மருத்துவர்
ஒருவர்
அறிவுறுத்துகிறார்.
அவ்வாறு
அவர்
சொல்வதற்குக்
காரணம்
என்ன?
விடை:
1. இரும்புச் சத்துக் குறைபாட்டால் ஏற்படுகிறது.
2. இலை வகைக் காற்கறிகள் மற்றம் பேரீச்சம் பழத்தில் அதிக அளவு இரும்புச் சத்துள்ளது.
3. ஆதலால் இரும்புக் குறைபாடு நீங்குவதால் இரத்தச் சோகை குணமாகிறது.
3.
சஞ்சனா
ஒரு
மளிகைக்
கடையில்
ஜாம்
பாட்டில்
வாங்க
விரும்புகிறாள்.
அதை
வாங்குவதற்கு
முன்
அந்தப்
பாட்டிலில்
உள்ள
அட்டை.
குறிப்பானில்
(label) எதைக்
குறிப்பாகப்
பார்த்து
வாங்க
வேண்டும்?
விடை:
1. உணவின் பெயர்
2. காலாவதி நாள்
3. ISI; AGMARK அல்லது FPO பேன்ற முத்திரைகளை கவனித்து வாங்க வேண்டும்.
பிற நூல்கள்
1.
Swaminathan M (1995): "Food & Nutrition”, The
Bangalore Printing & Publishing Co Ltd., Vol
I, Second Edition, Bangalore
2.
Srilakshmi (1997): "Food Science", New Age International
(P) Ltd, Publishers, Pune.
3.
Mudambi .R. Sumathi & Rajagpal M.V (1983), "Foods
& Nutrition", Willey Eastern Ltd, Second Edition, New Delhi.
4.
Thangam .E. Philip (1965): Modern Cookery, Orient
Longman, II Edition. Vol II, Bombay
5.
Shubhangini A. Joshi, (1992)' "Nutrition and Dietetics"
Tata Mc Grow - Hill publishing Company Ltd, New Delhi.
6.
Srilakshmi. B- "Nutrition Science", V Edn, New Age
International (P) Ltd, Publishers, Chennai.
இணைய தளங்கள்
http://en.wikipedia.org>wiki>food
preservation
https://en.m.wikipedia.org/wiki/louispasteur
http://pfa.delhigovt.nic.in
www.
fao.org>fao-who-codeaxlimentarius
கருத்து வரைபடம்
இணையச்செயல்பாடு
ஊட்டச்சத்து குறைபாட்டு நோய்கள்
படி 1.
உரலியைப் பயன்படுத்தியோ விரைவுக்குறியீட்டைப் பயன்படுத்தியோ nutrition atlas என்னும் பக்கத்திற்குச் செல்லவும்.
படி 2.
"Nutri Guide" என்னும் பகுதியைச் சொடுக்கினால் அதில் Vitamins, Minerals Proteins ஆகிய பகுதிகள் தோன்றும்.
படி 3.
இப்போது 'vitamins
என்னும் பகுதியைச் சொடுக்கினால் பல்வேறு வைட்டமின் வகைகளை நீங்கள் காணலாம்.
படி 4.
ஏதேனும் ஒரு வைட்டமினைச் சொடுக்கினால் அந்த பகுதியில் Biochemical,
RDA, Dietary Sources மற்றும் Symptoms ஆகிய பகுதிகள் தோன்றும். அவற்றைச் சொடுக்கி அவை குறித்து அறிந்து கொள்ளலாம்.
உரலி: http://218.248.6.39/nutritionatlas/home.php