ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் | உயிரியல் | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Biology : Nutrition and Health
உயிரியல்
அலகு - 21
ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம்
புத்தக வினாக்கள்
I. சரியான விடையைத்
தேர்ந்தெடு
1.
மனித
உடலின்
சில
தேவைகளைப்
பூர்த்தி
செய்ய
குறைந்த
அளவே
(மைக்ரோ)
தேவைப்படும்
ஊட்டச்சத்து.
அ) கார்போஹைட்ரேட்
ஆ) புரோட்டீன்
இ) வைட்டமின்
ஈ) கொழுப்பு
விடை:
இ) வைட்டமின்
2.
சிட்ரஸ்
வகை
பழங்களை
உணவில்
சேர்த்துக்
கொள்வதன்
மூலம்
‘ஸகர்வி'
நோயைக்
குணப்படுத்த
முடியும்
என்று
கூறியவர்.
அ) ஜேம்ஸ் லிண்ட்
ஆ) லூயிஸ் பாஸ்டர்
இ) சார்லஸ் டார்வின்
ஈ) ஐசக் நீயூட்டன்
விடை:
அ) ஜேம்ஸ் லிண்ட்
3.
வெங்காயம்,
உருளைக்கிழங்கு
போன்றவை
முளை
கட்டுவதைத்
தடுக்கும்
முறை
அ) அதிக குளிர் நிலையில் பாதுகாத்தல்
ஆ) கதிர் வீச்சு முறை
இ) உப்பினைச்சேர்த்தல்
ஈ) கலன்களில் அடைத்தல்
விடை:
ஆ) கதிர்வீச்சு முறை
4.
மத்திய
அரசின்
உணவு
மற்றும்
உணவுக்
கலப்படச்
சட்டம்
இயற்றப்பட்ட
ஆண்டு
அ) 1964
ஆ) 1954
இ) 1950
ஈ) 1963
விடை:
ஆ)
1954
5.
உணவு
கெட்டுப்போவதற்குக்
காரணமாக
உள்காரணியாகச்
செயல்படுவது
அ) மெழுகுப் பூச்சு
ஆ) சுகாதாரமற்ற சமையல் பாத்திரங்கள்
இ) உணவின் ஈரத்தன்மை
ஈ) செயற்கை உணவுப் பாதுகாப்புப் பொருட்கள்
விடை:
இ) உணவின் ஈரத்தன்மை
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
1.
உணவில்
………………………… எடுத்துக்கொள்வதன்
மூலம்
குறைபாட்டு
நோய்களைத்
தடுக்க
முடியும்.
விடை:
சரிவிகித உணவு
2.
உணவுப்
பொருட்களின்
இயல்பான
தன்மை
மற்றும்
அதன்
தரத்தைப்
பாதிக்கக்கூடிய
செயல்பாடு
…………………….. என்று அழைக்கப்படுகிறது.
விடை:
உணவு கலப்படம்
3.
சூரிய
வெளிச்சத்தின்
மூலம்
உடலில்
வைட்டமின்
D உற்பத்தியாவதால்
இதற்கு
…………….. வைட்டமின் என்று பெயர்.
விடை:
சூரிய ஒளி
4.
நீரை
வெளியேற்றுதல்
முறையில்
அடிப்படைக்
கொள்கையானது
………………….. நீக்குவதாகும்.
விடை:
நீரை
5.
உணவுப்
பொருள்களை
அவற்றின்
……………… தேதி முடிந்த நிலையில் வாங்கக்கூடாது.
விடை:
காலாவதி
6.
இந்தியாவில்
தயாரிக்கப்படும்
………………….. மற்றும் ……………….. பொருட்களுக்கு
விவசாயம்,
அக்மார்க்
தரக்
குறியீடு
சான்றிதழ்
பெற
வேண்டும்.
விடை:
கால்நடை உற்பத்திப்
III. சரியா? தவறா? தவறெனில்
திருத்துக
1.
தைராய்டு
சுரப்பியின்
செயல்பாட்டிற்கு
இரும்புச்சத்து
தேவைப்படுகிறது.
விடை:
தவறு
தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டிற்கு அயோடின் சத்து தேவைப்படுகிறது.
2.
மனித
உடலின்
இயல்பான
செயல்பாட்டிற்கு
வைட்டமின்
பெருமளவில்
தேவைப்படுகின்றது.
விடை:
தவறு
மனித உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு வைட்டமின் சிறிய அளவில் தேவைப்படுகின்றது.
3.
வைட்டமின்
C நீரில்
கரையக்கூடியது.
விடை:
சரி
4.
உணவில்
கொழுப்புச்சத்து
போதுமான
அளவில்
இல்லையென்றால்
உடல்
எடைக்
குறைவு
ஏற்படும்.
விடை:
சரி
5.
வேளாண்
உற்பத்திப்
பொருள்களுக்கு
ISI முத்திரை
கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
விடை: :
தவறு
தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களுக்கு ISI முத்திரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
IV. பொருத்துக
1.
கால்சியம் -
தசைச்சோர்வு
2.
சோடியம் - இரத்த சோகை
3.
பொட்டாசியம் - அஸ்டியோ போரோசிஸ்
4.
இரும்பு - முன் கழுத்துக் கழலை
5.
அயோடின் - தசைப்பிடிப்புகள்
விடை:
1. கால்சியம் - ஆஸ்டியோ போரோசிஸ்
2. சோடியம் - தசைப்பிடிப்புகள்
3. பொட்டாசியம் - தசைச்சோர்வு
4. இரும்பு - இரத்த சோகை
5. அயோடின் - முன் கழுத்துக் கழலை
V. பொருத்தமான ஒன்றைக் கொண்டு நிரப்புக.
VI. விரிவாக்கம் தருக
1. ISI - Indian
Standard Institution - இந்திய தரக்கட்டுப்பாடு நிறுவனம்
2 FPO - Fruit
Process Order - கனி உற்பத்திப் பொருட்கள் ஆணை
3 AGMARK -
Agricultural Marking - வேளாண் பொருட்களுக்கான தரக்குறியீடு
4 FCI - Food
Corporation of India - இந்திய உணவு நிறுவனம்
5 FSSAI . - |Food
Safety and Standard Authority of India - இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்
VII. கூற்று மற்றும் காரணம் வகை
வினாக்கள்.
சரியான
ஒன்றைத்
தேர்ந்தெடு
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல. இ) கூற்று சரி. காரணம் தவறு.
ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
1.
கூற்று
: ஹீமோகுளோபினில் இரும்பு உள்ளது.
காரணம் :
இரும்புக் குறைபாடு இரத்தசோகை நோயை ஏற்படுத்துகிறது.
விடை:
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம்.
2.
கூற்று
: அக்மார்க் என்பது ஒரு தரக் கட்டுப்பாட்டு நிறுவனம்.
காரணம் :
ஐஎஸ்ஐ என்பது தரத்தின் குறியீடு
விடை:
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கம் அல்ல
VIII. காரணம் கூறுக
அ) உணவுப் பாதுகாப்புப் பொருளாக உப்பு சேர்க்கப்படுகிறது.
ஏனெனில்
…………
விடை:
உணவிலுள்ள ஈரப்பதத்தை நீக்க
ஆ) காலாவதி தேதி முடிவடைந்த உணவுப் பொருட்களை நாம் உண்ணக்கூடாது.
ஏனெனில்
விடை:
உணவின் தரம் இழக்கப்படுகிறது.
இ. கால்சியம் சத்துக் குறைபாட்டால் எலும்புகளின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
ஏனெனில்
விடை:
கால்சியம் எலும்புகளின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.