Home | 12 ஆம் வகுப்பு | 12வது பொருளாதாரம் | தேசிய வருவாயின் அடிப்படைக் கருத்துருக்கள்

பொருளாதாரம் - தேசிய வருவாயின் அடிப்படைக் கருத்துருக்கள் | 12th Economics : Chapter 2 : National Income

   Posted On :  14.03.2022 09:38 pm

12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 2 : தேசிய வருவாய்

தேசிய வருவாயின் அடிப்படைக் கருத்துருக்கள்

தேசிய வருவாயை அளவிடுவதற்கு கீழ்கண்ட கருத்துருக்கள் பயன்படுகின்றன.

தேசிய வருவாயின் அடிப்படைக் கருத்துருக்கள்


தேசிய வருவாயை அளவிடுவதற்கு கீழ்கண்ட கருத்துருக்கள் பயன்படுகின்றன.

1. GDP

2. GNP

3. NNP

4. காரணிச் செலவில் நிகர தேசிய உற்பத்தி (NNP at factor cost)

5. தனிநபர் வருமானம் (Personal Income) 

6. செலவழிக்கக் கூடிய வருமானம் (Disposable Income)

7. தலா வருமானம் (Per capita Income)

8. உண்மை வருமானம் (Real Income) 

9. GDP 560) குறைப்பான் (GDP Deflator)



1. மொத்த உள்நாட்டு உற்பத்தி (Gross Domestic Product: GDP) 

ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இறுதிநிலைப் பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த சந்தை மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆகும். இதற்கு சந்தையில் நிலவும் விலை பயன்படுத்தப்பட்டால் இது சந்தைவிலையின் GDP என அழைக்கப்படுகிறது.

செலவு முறையைப் பயன்படுத்தி  கணக்கிடப்படும்  GDP = C + I + G + (X - M).

இதில் C = நுகர்வு பண்டங்கள்;

      I = முதலீட்டு பண்டங்கள்,

      G = அரசின் வாங்குதல்கள்;

(X - M) = நிகர ஏற்றுமதி (இது நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ இருக்கலாம்.

 (அ) நிகர உள்நாட்டு உற்பத்தி (Net Domestic Product: NDP)

நிகர உள்நாட்டு உற்பத்தி (NDP) என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் ஏற்படும் தேய்மானத்தை கழித்த பிறகு கிடைக்கும் நிகர உற்பத்தி ஆகும். ஒரு நாட்டில் உள்ள சில முதலீட்டுக் கருவிகள் உற்பத்தி செய்யும் போது தேய்மானம் அடையலாம், பழுதாகிப் போகலாம் அல்லது பயனற்று போகலாம். தேய்மானத்தின் மதிப்பை GDPயிலிருந்து கழித்துவிட்டால் கிடைப்பது NDP ஆகும்.

நிகர உள்நாட்டு உற்பத்தி = GDP - தேய்மானம்.



2. மொத்த தேசிய உற்பத்தி (Gross National Product) (GNP)

மொத்த தேசிய உற்பத்தி (GNP) என்பது ஒரு நாட்டில் ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட முடிவடைந்த பொருட்கள் மற்றும் பணிகளின் அங்காடி மதிப்பின் மொத்த கணக்கிடுதல் ஆகும். இதில் நிகர வெளிநாட்டு வருமானமும (நிகர ஏற்றுமதி) சேர்க்கப்படும். GNP - ல் கீழ்கண்ட ஐந்து வகையான முடிவடைந்த பொருட்கள் மற்றும் பணிகள் உள்ளன.

1. ஓர் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட முடிவடைந்த பண்டங்கள் மற்றும் பணிகளின் மதிப்பு. இவை மக்களின் நுகர்வுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக உற்பத்தி செய்யப்பட்டவை. இதனை நுகர்வு (Consumption: C) என்கிறோம்.

2. மொத்த உள்நாட்டு மூலதனப் பொருட்களின் தனியார் முதலீடுகளில் இதில் மூலதனத் திரட்சி, வீடுகட்டுதல், உற்பத்திக்காக வைப்பில் உள்ள முடிந்த மற்றும் முடியாத பொருள்கள் ஆகியவை அடங்கும். இதனை முதலீடு (I) எனக் குறிக்கிறோம்.

3. அரசால் வாங்கப்பட்ட அல்லது உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள் மற்றும் பணிகள் G எனக் குறிப்பிடப்படுகிறது.

4. உள்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு செய்யப்பட்ட ஏற்றுமதியிலிருந்து (X) வெளிநாட்டிலிருந்து வருவிக்கப்பட்ட இறக்குமதியை (M) கழித்தால் கிடைக்கும் (X - M) நிகர ஏற்றுமதி. இது நேர்மறையாகவோ (+) எதிர்மறையாகவோ (-) இருக்கலாம்.

5. நிகர வருமானம் என்பது வெளிநாடுகளில் இருந்து பெற்ற காரணிகளின் வருவாய்க்கும் (கூலி, வட்டி, இலாபம்) நம் நாட்டில் குடியிருக்கும் வெளிநாட்டுகாரர்களுக்கு கொடுக்கப்பட்ட காரணிகளின் வருவாய்க்கும் இடையே உள்ள வேறுபாடு (R - P) ஆகும். சந்தை விலையில் GNP என்பது C + I + G + (X - M) + (R - P)

சந்தை விலையில் GNP = சந்தை விலையில் GDP + வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் நிகர வருமானம்.



3. நிகர தேசிய உற்பத்தி (NNP at Market Prices)

நிகர தேசிய உற்பத்தி என்பது ஒரு ஆண்டின், பொருளாதாரத்தின் நிகர உற்பத்தியின் மதிப்பு ஆகும். GNPயிலிருந்து தேய்மானத்தின் மதிப்பு, முதலீட்டு சொத்தின் மாற்று கழிவு ஆகியவற்றை கழித்த பின் கிடைப்பது நிகர தேசிய உற்பத்தி ஆகும்.

NNP = GNP - தேய்மான கழிவு

தேய்மானத்தை மூலதன நுகர்வு கழிவு (Capital Consumption Allowance) என்றும் கூறலாம்.



4. காரணி செலவில் நிகர தேசிய உற்பத்தி (NNP at Factor Cost)

NNP என்பது உற்பத்தியின் சந்தை மதிப்பு ஆகும். காரணி செலவில் NNP என்பது உற்பத்தி காரணிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த வருமான செலுத்துதல் ஆகும். காரணி செலவில் நிகர தேசிய வருவாயை பெறுவதற்கு, சந்தை விலையில் NNPயின் பண மதிப்பிலிருந்து மறைமுக வரியை கழிக்க வேண்டும். மேலும் மானியங்களை கூட்ட வேண்டும்.

காரணிசெலவில் NNP= சந்தை விலையில் 

NNP – மறைமுகவரி + மானியம்



5. தனிநபர் வருமானம் (Personal Income):

தனிநபர் வருமானம் என்பது ஒரு ஆண்டில் ஒரு நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு தனி நபருக்கும் பல வழிகளில் இருந்து கிடைக்க பெறும் மொத்த வருமானம் ஆகும். அவை வட்டியாகவோ, வாரமாகவோ, கூலியாகவோ இருக்கலாம். அவை அனைத்தையும் ஒவ்வொரு தனி நபருக்கும் கூட்டினால் அது தனிநபர் வருமானம் ஆகும். தனிநபர் வருமானம் தேசிய வருமானத்திற்கு சமமாக இருக்காது. ஏனெனில் மாற்று செலுத்துதல்கள் (Transfer Payment) தனிநபர் வருமானத்தோடு சேர்க்கப்படுகிறது. அரசிடம் இருந்து கிடைத்த ஓய்வூதியம் (Pension) தனிநபர் வருமானத்துடன் சேர்க்கப்படுகிறது. எனவே,

தேசிய வருவாயிலிருந்து பங்களிக்கப்படாத கார்பரேட் இலாபம் மற்றும் சமூக பாதுகாப்புத்திட்டங்களில் உழைப்பாளர்களின் பங்களிப்பு ஆகியவற்றை கழித்துவிட்டு, மாற்று செலுத்துதல்களை கூட்டி தனிநபர் வருமானம் கணக்கிடப்படுகிறது.

தனி நபர் வருமானம் = தேசிய வருமானம் - (சமூக பாதுகாப்பு பங்களிப்பு மற்றும் பகிரப்படாத கார்பரேட் இலாபம்) + மாற்று செலுத்துதல்கள் 



6. செலவிடக்கூடிய வருமானம் (Disposable Income):

செலவிடக்கூடிய வருமானம் என்பது தனிநபர் செலவிடக்கூடிய வருமானத்தை குறிக்கிறது. தனிநபர் வருமானத்திலிருந்து நேர்முகவரிகளைக் (Eg. Income Tax) கழித்தால் கிடைப்பது செலவிடக்கூடிய வருமானம். இந்த வருமானம் தான் தனிநபர்கள் நுகர்வுக்காக செலவிடக்கூடிய பண அளவு ஆகும்.

செலவிடக்கூடிய வருமானம் = தனிநபர் வருமானம் - நேர்முகவரிகள்



7. தலா வருமானம் (Per capita Income):

தலா வருமானம் என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் வசிக்கும் ஒரு நபரின் சராசரி ஆண்டு வருமானம் ஆகும். தேசிய வருமானத்தை மக்கள் தொகையால் வகுக்கக்கிடைப்பது தலா வருமானம்.

தலா வருமானம் = தேசிய வருமானம் / மக்கள் தொகை



8. உண்மை வருமானம் (Real Income) :

பண வருவாய் என்பது தேசிய வருமானத்தை ஒரு ஆண்டில் உள்ள பொது விலை அளவுகளின் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது. மாறாக தேசிய வருவாய் என்பது ஒரு ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட முடிவுற்ற பண்டங்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பை பண அளவுகளில் குறிப்பிடப்படுகிறது. உண்மை வருவாயை கீழ்கண்ட முறையில் கணக்கிடலாம்.

நிலையான விலையில் உண்மை வருமானம் = நடப்பு விலையில் தேசிய வருவாய் + P1 / P0

P1 = நடப்பு ஆண்டு விலைக் குறியிடு 

P0 = அடிப்படை ஆண்டின் விலைக்குறியீடு



9. GDP 560 குறைப்பான் (GDP Deflator)

GDP குறைப்பான் என்பது GDPயில் குறிப்பிட்டுள்ள பண்டங்கள் மற்றும் பணிகளின் விலை மாற்ற குறியீட்டெண் ஆகும். இதுவும் ஒரு விலை குறியீட்டெண் ஆகும். கொடுக்கப்பட்ட ஆண்டில் பணமதிப்பு அடிப்படையில் கணக்கிடப்பட்ட GDPயை உண்மை GDP யால் வகுத்து, 100 ஆல் பெருக்கினால், GDP குறைப்பானை கணக்கிடலாம்.

GDP குறைப்பான் = பணமதிப்பு GDP / உண்மை GDP x 100


Tags : Economics பொருளாதாரம்.
12th Economics : Chapter 2 : National Income : Basic concepts of national income Economics in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 2 : தேசிய வருவாய் : தேசிய வருவாயின் அடிப்படைக் கருத்துருக்கள் - பொருளாதாரம் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12ஆம் வகுப்பு பொருளாதாரம் : அத்தியாயம் 2 : தேசிய வருவாய்