பொருளாதாரம் - தேசிய வருமானத்தின் வரையறை மற்றும் பொருள் | 12th Economics : Chapter 2 : National Income
"பெரிய பிரச்சனைகளான வேலைவாய்ப்பு இன்மை, பண வீக்கம் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றை சமாளிப்பதற்காக தயாரிக்கப்பட்ட தவிர்க்க முடியாத தயாரிப்பே தேசிய வருவாய் எனும் கருத்துரு ஆகும்”.
- சாமுவேல்சன்
புரிதலின் நோக்கங்கள்
1. தேசிய வருவாயின் பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கருத்துருக்களைப் புரிதல்
2. தேசிய வருவாயைக் கணக்கிடும் முறைகளை அறிதல்.
அறிமுகம்
ஒரு நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளை அளவிடும் ஒரு முழுமையான அளவு கோலை தேசிய வருவாய் தருகிறது. ஒரு நாட்டின் வாங்கும் சக்தியை குறிப்பிடும் காரணியாக இருக்கிறது. உண்மை தேசிய வருவாயின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் மாறும் விகிதத்தைப் பொருத்தே பொருளாதாரத்தின் வளர்ச்சி அளவிடப்படுகிறது. பொருளாதாரத் திட்டமிடுதலுக்கான ஒரு கருவியாக இது திகழ்கிறது. மேலும் இது ஒரு மிக முக்கிய பேரினப் பொருளியல் மாறியாகவும் இருக்கிறது. எனவே தேசிய வருவாயின் பொருள், பல்வேறு கருத்துருக்கள், அளவிடும் முறைகள் மற்றும் பயன்களை தெளிவாக புரிந்து கொள்ளுதல் அவசியம் ஆகும்.
நோபல் பரிசு பெற்றுள்ள சைமன் குஷ்நெட்ஸ் (Simon Kuznets) இந்தக் கருத்துருவை முதலில் அறிமுகப்படுத்தினார்.
தேசிய வருவாயின் பொருள்
பொதுவாகக் கூறப்போனால், தேசிய வருவாய் என்பது ஓர் ஆண்டில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட மொத்த பண்டங்கள் மற்றும் பணிகளின் பண மதிப்பாகும்.
இலக்கணம்
"ஒரு நாட்டில் உள்ள உழைப்பும் முதலும் சேர்ந்து அங்குள்ள இயற்கை வளங்களைப் பயன்படுத்தி பண்டங்கள் மற்றும் பணிகளைப் பயன்படுத்துகின்றன. இதுவே அந்நாட்டின் நிகர ஆண்டு வருமானம், தேசிய வருவாய் அல்லது தேசிய ஈவுத்தொகை ஆகும்".
-ஆல்ஃ பிரட் மார்ஷல் (Alfred Marshall)
ஒரு நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP)யில் வரையறுக்கப்பட்ட நிலையில் தேசிய சைமன் குஸ்நட்ஸ் வருமானம் அளவிடப்படுவதின் மூலம் அந்நாட்டின் நலத்தை அறிய முடியும்... அதிக வளர்ச்சிக்கான இலக்குகள் எதற்காக எப்படி என்பதை வரையறுக்க வேண்டும்.
“ஓர் ஆண்டில் பொருளாதாரத்தின் உற்பத்தி அமைப்பில் இருந்து பண்டங்களும் பணிகளும் உற்பத்தி செய்யப்பட்டு நிகர வெளியீடாக அவை இறுதி நிலை நுகர்வோரின் கைகளுக்கு செல்கின்றன அல்லது அந்த நாட்டில் இருக்கக்கூடிய மூலதனப் பொருட்களின் இருப்போடு நிகர கூடுதலாகச் சேர்கிறது"
-- சைமன் குஸ்நட்ஸ்