Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | ரூபாயை பணமாக மாற்றுதல்

பணம் | பருவம் 3 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - ரூபாயை பணமாக மாற்றுதல் | 4th Maths : Term 3 Unit 5 : Money

   Posted On :  13.10.2023 04:03 am

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம்

ரூபாயை பணமாக மாற்றுதல்

நோட்டுகளை பைசாக்களாக மாற்றுதல், பைசாக்களை ரூபாய்களாக மாற்றுதல்,

அலகு − 5

பணம்



ரூபாயை பணமாக மாற்றுதல்:

நம்முடைய இந்திய அரசாங்கம் பணத்தைஎன்ற குறியீட்டால் குறிக்கிறது.

சங்கர் சுற்றுலா செல்ல தயாராகிக் கொண்டு இருக்கிறான். அவன் தன்னுடைய தந்தையிடம் ₹ 400 கைச் செலவிற்காக கேட்டான். தன்னுடைய பர்ஸில் ரூபாய் 2000 நோட்டுகள் மட்டுமே இருந்ததைக் கண்டார். உடனே கடைக்குச் சென்று ₹ 2000 இக்கு சில்லறையைப் பெறுகிறார்.

அப்பா: ஐயா, ₹2000 இக்கு சில்லறையைக் கொடுங்கள்.

வியாபாரி: என்னிடம் பல வகைகளில் சில்லறைகள் உள்ளன. நீங்கள் எதைப் பெறவிரும்புகிறீர்கள்.:


அப்பா : சரி ஐயா, நான் மூன்றாவது வகையைத் தேர்ந்தெடுக்கிறேன். அதாவது


வியாபாரி : சரி ஐயா, நான் அதேபோல் தருகிறேன்.

அப்பா : நன்றி ஐயா.

அப்பா : சங்கர் உன்னுடைய கைச்செலவிற்கான ₹ 400 ஐப் பெற்றுக்கொள்

சங்கர்: ஒரு 100 ரூபாய்க்கு,  ₹ 50,  ₹ 20 இரண்டு ₹ 10, ₹ 5 மற்றும் ஐந்து, 1ரூபாய் நாணயங்கள் கிடைக்குமா?

அப்பா : சரி தருகிறேன்.


உங்களுக்கு தெரியுமா?

நம்முடைய முன்னோர்கள் பலவகையான நாணயங்களைப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றுள் 1 பைசா, 2 பைசாக்கள், 5 பைசாக்கள், 10 பைசாக்கள், 20 பைசாக்கள், 25 பைசாக்கள், 50 பைசாக்கள் ஆகியவை இப்போது பயன்பாட்டில் இல்லை.


மதிப்பு வகைப்பாடு


₹ 2000 × 1 = 2000

₹ 500 × 1 = 500

₹ 200 × 1 = 200

₹ 100 × 1 = 100

₹ 50 × 1= 50

₹ 10 × 1 = 10

₹ 5 × 1 = 5

மொத்தம் ₹ 2865 



₹ 200 × __2__ = 400

₹ 100 × _1___ = 100

₹ 50 × __1__ =     50

₹ 10 × __1__ =     10

₹ 5 × __1__ =          5

மொத்தம்:  ₹ 565


முயன்று பார்



செயல்பாடு

மாதிரி நோட்டுகளைப் பயன்படுத்தி பெட்டிகளை நிரப்புக.



செயல்பாடு

ஒரு காகிதத்தை எடுத்துக்கொள். அதில் மாதிரி நோட்டுகளை வெட்டவும். அதனை மொத்தம் ₹ 200 பெறுமாறு பெட்டிகளில் ஒட்டவும். ஒன்று தங்களுக்காக செய்யப்பட்டுள்ளது.


தாங்கள் எப்போதாவது பெட்ரோல் கடைக்குச் சென்றுள்ளீர்களா?

1 லிட்டர் பெட்ரோலின் விலை ₹ 78.12. அதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

நோட்டுகளைப் போல் பைசாக்கள் புழக்கத்தில் இல்லாதபோதும், பொருட்களின் விலைக்காக பைசாக்கள் பயன்பாட்டில் உள்ளன.

₹ 1 = 100 பைசாக்கள்


நோட்டுகளை பைசாக்களாக மாற்றுதல்.

காய்கறி கடையில் விலை பேரம் பேசும் பொழுதும் மற்ற இடங்களிலும் இது பயன்படுகின்றன.

நோட்டுகளை பைசாக்களாக மாற்ற, நோட்டுகளை 100 ஆல் பெருக்குக.


எடுத்துக்காட்டு 1

₹ 2 பைசாக்களாக மாற்றுக.

₹ 1 = 100 பைசாக்கள்

எனவே, ₹ 2 = 2 × 100 = 200 பைசாக்கள்


எடுத்துக்காட்டு 2

₹ 8.50 பைசாக்களாக மாற்றுக.

₹ 1 = 100 பைசாக்கள்

8 ஆனது ரூபாயில் உள்ளது. 50 ஆனது பைசாவில் உள்ளது.

எனவே, 8 100 ஆல் பெருக்கவும். 50 பைசாவை அதனுடன் கூட்டவும்.

₹ 8.50 = 8×100+50

= 800 பைசாக்கள் + 50 பைசாக்கள்

= 850 பைசாக்கள்.


எடுத்துக்காட்டு 3

ரவியினுடைய அப்பா கடைக்குச் சென்று, ஒரு கிலோ பருப்பு ₹ 38.70 இக்கு வாங்கினார். பருப்பின் விலையை பைசாக்களில் மாற்றவும்.

1 கி.கி பருப்பின் விலை = ₹ 38.70

 ₹ 38.70 = 38 × 100 பைசாக்கள் + 70 பைசாக்கள்

 = 3800 பைசாக்கள் + 70 பைசாக்காள்

எனவே, பருப்பின் விலை = 3870 பைசாக்களாகும்.


பைசாக்களை ரூபாய்களாக மாற்றுதல்,

பைசாக்களை ரூபாய்களாக மாற்றுவதற்கு, பைசாக்களை 100 ஆல் வகுக்க வேண்டும்.


எடுத்துக்காட்டு 1

900 பைசாவை ரூபாய்களாக மாற்றுக.

பைசாவை ரூபாய்களாக மாற்ற 100 ஆல் வகுக்க வேண்டும்.

900 பைசாக்கள் = 900 ÷ 100

900 பைசா = ₹ 9


எடுத்துக்காட்டு 2

1950 பைசாக்களை ரூபாயாக மாற்றுக.

பைசாவை ரூபாய்களாக மாற்ற, பைசாவை 100 ஆல் வகுக்க வேண்டும்.

1950 பைசாக்கள் = 1950 ÷ 100

= 19.50

= ₹ 19.50

Tags : Money | Term 3 Chapter 5 | 4th Maths பணம் | பருவம் 3 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 3 Unit 5 : Money : Convert rupees to paise Money | Term 3 Chapter 5 | 4th Maths in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம் : ரூபாயை பணமாக மாற்றுதல் - பணம் | பருவம் 3 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம்