இரண்டாம் பருவம் அலகு 6 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - கணினி வரைகலை | 7th Science : Term 2 Unit 6 : Digital Painting

   Posted On :  10.05.2022 08:24 pm

7 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 6 : கணினி வரைகலை

கணினி வரைகலை

கற்றல் நோக்கங்கள் இந்த மென்பொருளின் மூலம் மாணவர்கள் பெறும் அடைவுகள் பின்வருமாறு, * மென்பொருளைப் பயன்படுத்திப் படம் வரைதல். * மாணவர்களின் படைப்பாற்றலை வளர்த்தல்.. * 'tux math' ஐ பயன்படுத்தி கணக்குகளைச் செய்தல்.

அலகு 6

கணினி வரைகலை



கற்றல் நோக்கங்கள்

இந்த மென்பொருளின் மூலம் மாணவர்கள் பெறும் அடைவுகள் பின்வருமாறு, 

* மென்பொருளைப் பயன்படுத்திப் படம் வரைதல். 

* மாணவர்களின் படைப்பாற்றலை வளர்த்தல்.. 

*  'tux  math' ஐ பயன்படுத்தி கணக்குகளைச் செய்தல்.


இப்பாடப்பகுதியில் 'Tux paint' மற்றும் 'Tux math' என்ற இரண்டு மென்பொருட்கள் பற்றி பார்க்க உள்ளோம்.

'Tux Paint' என்றால் என்ன ?

Tux  Paint என்பது குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இலவச ஓவியப்பயிற்சி செயலியாகும். இச்செயலியானது மகிழ்ச்சிதரும் ஒலிகளோடு, எளிமையாகப் பயன்படுத்தும் வகையில், மாணவர்களை வழிநடத்தும், உற்சாக மூட்டும் கேலிச்சித்திரங்களோடு உருவாக்கப்பட்டது.

திரையின் இடதுபக்கத்தில் உள்ளவற்றில் ஏதேனும் ஒரு கருவியைத் தேர்வு செய்யவும். பிறகு, திரையின் வலதுபக்கத்தில் உள்ளவற்றில் தாங்கள் விரும்புவதைத் தேர்வுசெய்து கொள்ளவும். திரையின் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.


தலைப்புத் திரை (Title Screen)

Tux  Paint ஐ முதலில் தொடங்கும் போது, தலைப்புத் திரை தோன்றும்.


அவ்வாறு தோன்றிய பிறகு, விசைப் பலகையில் உள்ள ஏதேனும் ஒரு எழுத்துருவை அழுத்தவும் அல்லது சுட்டியைச் சொடுக்கித் தொடரவும். (ஏனெனில் 30 வினாடிகளுக்கு மேல் தலைப்புத் திரை தானாக மறைந்து விடும்.)


முதன்மை திரை (Main Screen)

முதன்மை திரை பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.


இடப்பக்கம் : கருவிப்பட்டை (Toolbar)

கருவிப்பட்டை என்பது வரையவும் திருத்தங்கள் செய்யவும் பயன்படும்.

நடுப்பகுதி : படம் வரையும் பகுதி (Drawing Canvas) 

இப்பகுதி படம் வரைவதற்குப் பயன்படும். இதுவே திரையின் பெரும் பகுதியாகும்.

வலப்பக்கம் : பலவிதக் கருவிகள் (Selector) :

இடது பக்கத்தில் தெரிவு செய்யும் கருவிக்கு பொருத்தமான பல்வேறு பொருட்கள் வலது பக்கத்தில் இடம்பெற்றிருக்கும். (எ.டு) கோட்டுக் கருவியைத் (Line tool) தெரிவு செய்தால் பொருத்தமான பல்வேறு கோடுகளை வலது பக்கத்தில் காணலாம். வடிவக் கருவியைத் (Shapes tool) தெரிவு செய்தால் பல்வேறு வடிவங்களைக் காணலாம். 


கீழ்ப்பகுதி : வண்ணங்கள் (Colours)

திரையின் கீழ்ப்பகுதியில் பலவண்ணங்கள் இடம்பெற்றிருக்கும்.


அடிப்பகுதி : உதவிப்பகுதி (Help Area)

திரையின் அடிப்பகுதியில் உள்ள பென்குயின் உருவமானது தேவையான உதவிகளையும் தகவல்களையும் வழங்கும்.


 தூரிகை Paint brush  : இக்கருவியினைப் பயன்படுத்தி விரும்பும் ஓவியம் வரையலாம். வலது பக்கத்தில் உள்ள விதவிதமான தூரிகைகளைத் தேர்ந்தெடுத்து வண்ணம் தொட்டு வரையலாம்.

முத்திரை கருவி (Stamp tool) : இக்கருவியினை பயன்படுத்தி பலவகையான முத்திரைகளை அல்லது படங்களைப் பதிக்கலாம்.

அம்புக்குறிகள் (Arrows) : இடது மற்றும் வலது அம்புக்குறியைப் பயன்படுத்தி இரண்டு பக்கமும் நகர்ந்து போகலாம்.

  கோடுகள் (Lines) : இக்கருவியினைப் பயன்படுத்தி கோடுகள் வரையலாம். 

வடிவங்கள் (shapes)  : இக்கருவியைப் பயன்படுத்தி நிரப்பப்பட்ட அல்லது நிரப்பப்படாத வடிவங்களை வரையலாம். 

 பனுவல் (Text) :  இக்கருவியைப் பயன்படுத்தி எழுத்துகளைத் தட்டச்சு செய்யலாம்.

 விந்தைக் கருவி (Magic tool) : விந்தை கருவியில் பல சிறப்புக் கருவிகள் உள்ளன. வலது பக்கத்தில் விரும்பும் விந்தை விளைவைத் தேர்ந்தெடுத்து, அதனைப் படத்தின் மீது இழுத்தோ அல்லது சொடுக்கியோ உபயோகிக்கலாம்.

 அழிப்பான் (Eraser) : இக்கருவி வண்ணத்தூரிகையை போலவே இருக்கும். இதனை இழுத்து அல்லது சொடுக்கி படங்களை அழிக்கலாம். 

 முன்செயல் நீக்கல் (Undo) :  இக் கருவியினைப் பயன்படுத்தி முன்னர் செய்த செயலை நீக்கலாம். 

 செயல் மீட்டல் (Redo) : இக் கருவியினைக் கொண்டு நீக்கம் செய்த ஒருசெயலை மீண்டும்  நிகழச்செய்யலாம். 

 புதிய பக்கம் (New) : ’New’ பொத்தானை அழுத்தி புதிய ஓவியப் பக்கத்திற்குச் செல்லலாம்.

 திறக்கும் கருவி (pen)  : இக்கருவியைக் கொண்டு ஏற்கெனவே வரைந்த ஓவியத்தினைத் திறக்கலாம். 

 சேமி (Save) : இக்கருவியைக் கொண்டு வரைந்துள்ள ஓவியத்தினைச் சேமிக்கலாம். 

 அச்சு (Print) : இக்கருவியைக் கொண்டு வரைந்த ஓவியத்தை அச்சு எடுக்கலாம். 

 வெளியேறுதல் (Quit) : இக்கருவியைக் கொண்டு ‘tux paint’ ஐ மூடலாம்.


குறுக்குவழிவிசைகள் (Shortcut Keys)



கருவிகளின் பெயர் குறுக்குவழி விசைகள்

New Ctrl+N

Open Ctrl+O

Save Ctrl+S

Print Ctrl+P

Quit Esc

Undo Ctrl+Z

Redo Ctrl+Y



Tux Math

'Tux Math' என்பது கணிதம் கற்பதற்கான காணொலி விளையாட்டாகும். இது ஒரு மாற்றியமைக்கக் கூடிய இலவச மென்பொருளாகும். கணக்கைச் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கற்கச் செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.


தலைப்புத் திரை (Title Screen)


கணிதக் கட்டளை பயிற்சிக் கழகம் (Math Command Training Academy): இத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தால் ஐம்பது கணிதப்பாடங்களின் பட்டியல் தோன்றும். ஒற்றை இலக்க எண்களை உள்ளீடு செய்யும் எளிய கணக்குத் தொடங்கி பெருக்கல் வகுத்தல் கலந்த கடினமான கணக்குகள் வரைச் செல்லும்

 எ.டு. "-17 × ? = 119"). இதில் வெற்றிபெற அனைத்துக் கேள்விகளுக்கும் விடை காண வேண்டும். விடை அளிக்கப்படும் ஒவ்வொரு பாடமும் தங்க நட்சத்திரத்திரத்தால் குறிக்கப்படும்.


ஆர்கேட் விளையாட்டு (Play Arcade Game): 

இத்தலைப்பைக் கொண்டு கொடுக்கப்பட்டிருக்கும் நான்கு ஆர்கேட் விளையாட்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்க. ஆர்கேட் வகை விளையாட்டு என்பது ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பித்து விளையாட விளையாட வேகம் அதிகரிக்கும். எவ்வளவு நேரம் தாக்குப் பிடித்து விளையாடுகிறாரோ அந்த அளவிற்கு அதிக புள்ளிகளைப் பெறலாம். 

நான்கு வகை விளையாட்டுகள் பின்வருமாறு: 

* Space Cadet - எளியகூட்டல் 

* Scout - 10 வரத்தக்க கூட்டல் மற்றும் கழித்தல் 

* Ranger - 10 வரத்தக்க கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல்.

* Ace - 20 வரத்தக்க வகையில் நான்கு கணிதச் செயல்பாடுகளையும் பயன்படுத்துதல். இதில் குறை எண்கள் மற்றும் விடுபட்ட எண்கள் போன்றவையும் இடம் பெற்றிருக்கும். 


விருப்ப விளையாட்டு (Play Custom Game):

இத்தலைப்பைக் கொண்டு கணினியில் கட்டமைக்கப்பட்ட விளையாட்டுகளை விளையாடலாம். இவ்விளையாட்டை தாங்கள் விரும்பியபடி அமைத்துக்கொள்ளலாம்.

மேலும் பல (More Options)

இத்தலைப்பை தேர்வு செய்தால் மாதிரி விளையாட்டாக விளையாடவும், இம்மென்பொருள் உருவாக்கம் சார்ந்த விவரங்களை அறியவும் பயன்படுகிறது.


விசைகள் (Keys): 

* அம்புக்குறிகளைப் பயன்படுத்தி விரும்பியவற்றைத் தேர்வு செய்யவும். [ENTER / RETURN / SPACEBAR] போன்றவற்றைப் பயன்படுத்தி விளையாடவும். அல்லது, சுட்டியைக் கொண்டு பட்டியலில் (Menu) இருந்து விரும்பியவற்றைத் தேர்வு செய்யவும்.

*  [ESCAPE)ஐ அழுத்தி விளையாட்டில் இருந்து வெளியேறவும்.


Tags : Term 2 Unit 6 | 7th Science இரண்டாம் பருவம் அலகு 6 | 7 ஆம் வகுப்பு அறிவியல்.
7th Science : Term 2 Unit 6 : Digital Painting : Digital Painting Term 2 Unit 6 | 7th Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 6 : கணினி வரைகலை : கணினி வரைகலை - இரண்டாம் பருவம் அலகு 6 | 7 ஆம் வகுப்பு அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 6 : கணினி வரைகலை