வகைப்பாட்டியலின் அடிப்படைகள் | இரண்டாம் பருவம் அலகு 5 | 7 ஆம் வகுப்பு அறிவியல் - மாணவர் செயல்பாடு | 7th Science : Term 2 Unit 5 : Basis of Classification
செயல்பாடு: 1
நோக்கம்: பெட்டியில் கொடுக்கப்பட்டுள்ள பொத்தான்களைப் பல்வேறுவகைகளாக வகைப்படுத்துதல்.
தேவையான பொருட்கள் : ஒரு பெட்டியில் நிரப்பப்பட்ட பல்வேறு வகையான பொத்தான்கள்
செயல்முறை
1. பெட்டியில் நிரப்பப்பட்டுள்ள பொத்தான்களை எடுத்துக் கொள்ளவும்.
2. மாணவர்கள் மூன்று அல்லது நான்கு சிறிய குழுக்களாகப் பிரிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள வகைப்பாட்டின் விதிகளின் படி பொத்தான்களை வகைப்படுத்தவும்.
அ. வடிவம்
ஆ. நான்கு துளைகளை உடைய பொத்தான்கள்
இ. இரண்டு துளைகளை உடைய பொத்தான்கள்
ஈ. நிறம்
இதைத் தவிர மற்ற சிறப்பு இயல்புகளையும் கண்டறியவும்
செயல்பாடு : 2
கொடுக்கப்பட்ட விலங்கினங்களில், பொருத்தமான விலங்கின பெயரை படங்களைப் பார்த்து கோடிட்ட இடங்களை நிரப்புக.
1. முதுகெலும்பு உடையவை மனிதன், நாய் மற்றும் புலி
2. முதுகெலும்பு அற்றவை மண்புழு, நண்டு மற்றும் நத்தை
3. இறக்கை கொண்ட முதுகெலும்பு உடைய உயிரி கிளி, கோழி
4. இறக்கை கொண்ட முதுகெலும்பு அற்ற உயிரி பட்டாம்பூச்சி, ஈ
5. முதுகெலும்பு அற்ற கண்டங்கள் உடைய உயிரி நண்டு, இறால்
6. முதுகெலும்பு அற்ற கணுக்கால்கள் உடைய உயிரி தேள், சிலந்தி
7. முதுகெலும்பு உடைய வெப்ப இரத்த பிராணி மனிதன், கரடி
8. முதுகெலும்பு உடைய குளிர் இரத்த பிராணி மீன், முதலை
9. நுரையீரல் மூலம் சுவாசம் மேற்கொள்ளும் முதுகெலும்பு உடைய உயிரி பெயரைக்குறிப்பிடுக ஆடு, நாய்
10. அலகு உடைய விலங்கு கொக்கு, கழுகு
செயல்பாடு : 3
கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் தொகுதியின் பெயரும், சிறப்புப் பண்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதற்குரிய தொகுதியைச் சார்ந்த விலங்குகளின் பெயரை எழுதுக
தொகுதி : பண்புகள் : உதாரணம்
துளையுடலிகள் : துளை தாங்கிகள் : கடற்பாசி
குழியுடலிகள் : இரைப்பை குருதிக் குழி : ஹைட்ரா
தட்டைப் புழுக்கள் : சுடர் செல்கள் : நாடாப்புழு
உருளைப் புழுக்கள் : நூல் போன்ற புழுக்கள் : அஸ்காரிஸ் லும்ப்ரிகாய்டுகள்
வளைத்தசை புழுக்கள் : உடல் கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன : மண்புழு
கணுக்காலிகள் : கால்கள் இணைப்புகளால் ஆனது. : நண்டு
மெல்லுடலிகள் : மென்மையான உடல் மற்றும் பாதுகாப்பு ஓடு : நத்தை
முட்தோலிகள் : உடற்சுவற்றில் முட்கள் காணப்படும் : நட்சத்திரமீன்
முதுகுநாணுள்ளவை : முதுகு நாண் உள்ளவை : மனிதன்
செயல்பாடு : 4
உங்கள் அருகில் உள்ள உயிரியல் பூங்காவை பார்வையிடவும் அங்குள்ள வெவ்வேறு விதமான தாவரங்களையும், விலங்குகளையும் மாணவர்கள் கண்டறியச் செய்யுங்கள். அங்கு விலங்குகளுக்கும், தாவரங்களுக்கும் அறிவியல் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். - அவற்றைக் குறித்துக் கொண்டு வந்து உங்கள் வகுப்பு மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.