பருவம் 1 அலகு 1 | வரலாறு | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 6th Social Science : History : Term 1 Unit 1 : What is History?
பயிற்சிகள்
1. சரியான விடையைக் கண்டுபிடி
1. பழங்கால
மனிதன் தனது உணவைச் சேகரிக்க மேற்கொண்ட நடவடிக்கை
அ. வணிகம்
ஆ. வேட்டையாடுதல்
இ. ஓவியம் வரைதல்
ஈவிலங்குகளை வளர்த்தல்
[விடை: ஆ) வேட்டையாடுதல்]
II. கூற்றையும் காரணத்தையும் பொருத்துக. சரியான
விடையைக் குறியீட்டுக் காட்டுக
1. கூற்று
: பழைய கற்கால மனிதர்கள் வேட்டையாடச் செல்லும்போது நாய்களை உடன் அழைத்துச் சென்றனர்.
காரணம்: குகைகளில்
பழைய கற்கால மனிதன் தங்கியிருந்தபோது, விலங்குகள் வருவதை நாய்கள் தமது மோப்ப சக்தியினால்
அறிந்து அவனுக்கு உணர்த்தின.
அ) கூற்று சரி, காரணம் தவறு.
ஆ) கூற்று சரி, கூற்றுக்கான காரணமும் சரி.
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்று தவறு, காரணமும் தவறு.
[விடை: ஆ) கூற்று சரி, கூற்றுக்கான காரணமும் சரி]
2. பண்டைய
காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய பொருள்கள் அகழாய்வுகள் மூலமாகத் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.
அப்பொருள்கள் அக்கால மக்களின் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொள்ளப் பாதுகாக்கப்படுகின்றன.
இக்கூற்றுடன் தொடர்புடையது எது?
அ) அருங்காட்சியகங்கள்
ஆ) புதைபொருள்படிமங்கள்
இ) கற்கருவிகள்
ஈ) எலும்புகள்\
[விடை: அ) அருங்காட்சியகங்கள்]
3. தவறான
இணையைக் கண்டுபிடி
அ) பழைய கற்காலம் - கற்கருவிகள்
ஆ) பாறை ஓவியங்கள் – குகைச் சுவர்கள்
இ) செப்புத் தகடுகள் - ஒரு வரலாற்று ஆதாரம்
ஈ) பூனைகள்- முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு
[விடை: ஈ) பூனைகள்- முதலில் பழக்கப்படுத்தப்பட்ட விலங்கு]
4. மற்ற
தொடர்களிலிருந்து வேறுபட்ட ஒன்றைக் கண்டுபிடி
அ) பாறைகள் மற்றும் குகைகளில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
ஆ) வேட்டையாடுதலை குறிப்பதாக ஓவியங்கள் இருந்தன.
இ) பழங்கால மனிதன் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு வேட்டையாடுதலை
எடுத்துரைப்பதற்காக வரைந்திருக்கலாம்
ஈ) பல வண்ணங்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.
[விடை: ஈ) பல வண்ணங்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.]
III. கோடிட்ட இடத்தை நிரப்புக
1. பழைய கற்கால மனிதன் பெரும்பாலும் வாழ்ந்த இடங்கள் குகைகள்
2. வரலாற்றின் தந்தை ஹெரோடோட்டஸ்
3. பழைய கற்கால மனிதன் பழக்கிய முதல் விலங்கு நாய்
4. கல்வெட்டுகள் தொல் பொருள் ஆதாரங்கள் ஆகும்.
5. அசோகச் சக்கரத்தில் 24 ஆரக்கால்கள் உள்ளன.
IV. சரியா? தவறா?
1. பழைய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகள் சென்னைக்கு அருகில்
உள்ள அத்திரம்பாக்கத்தில் கிடைத்துள்ளன. விடை: சரி
2. பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பொருள்கள் தொல்லியல் துறையினரால்
அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. விடை: சரி
3. அசோகரது காலத்தில் புத்த சமயம் நாடு முழுவதும் பரவியது. விடை: சரி
V. பொருத்துக
அ) பாறை செப்பேடுகள் - ஓவியங்கள்
ஆ) எழுதப்பட்டப் பதிவுகள் - மிகவும் புகழ்பெற்ற அரசர்
இ) அசோகர் - தேவாரம்
ஈ) மதச் சார்புள்ள இலக்கியம் - வாழ்க்கை முறையைப் புரிந்து கொள்வதற்கு
உதவுகிறது.
விடைகள்
அ) பாறை செப்பேடுகள் - வாழ்க்கை முறையைப் புரிந்து
கொள்வதற்கு உதவுகிறது.
ஆ) எழுதப்பட்டப் பதிவுகள் - ஓவியங்கள்
இ) அசோகர் - மிகவும் புகழ்பெற்ற அரசர்
ஈ) மதச் சார்புள்ள இலக்கியம் – தேவாரம்
VI. ஓரிரு வார்த்தைகளில் விடையளிக்கவும்
1. நாட்குறிப்பு
எழுதுவதன் பயன்கள் இரண்டைக் கூறு.
• தகவல் சான்று
• கடந்த கால நிகழ்வுகளின் குறிப்பு
2. வரலாற்றுக்கு
முந்தைய கால மக்களின் வாழ்க்கை முறையை நாம் எவ்வாறு அறிந்து கொள்கிறோம்?
அவர்கள் பயன்படுத்திய கற்கருவிகள்,
பாறை ஓவியங்கள், புதை படிவங்கள் மற்றும் அகழாய்வுப் பொருள்கள் மூலம் அவர்களின் வாழ்க்கை
முறையைப் பற்றி நாம் அறிந்து கொள்கிறோம்.
3. கல்வெட்டுகள்
ஓர் எழுதப்பட்ட வரலாற்றுச்சான்றா?
ஆம்
4. வரலாற்று
தொடக்கக் காலம் (Proto History) என்றால் என்ன?
வரலாற்றுக்கு முந்தைய காலத்துக்கும்
வரலாற்றுக் காலத்துக்கும் இடைப்பட்டது வரலாற்று தொடக்க காலம் (Proto History) ஆகும்
5. ஏதேனும்
ஒரு காப்பியத்தின் பெயரை எழுது.
சிலப்பதிகாரம்
VII. பின்வரும் வினாக்களுக்கு விடையளி
1. வரலாறு
என்றால் என்ன?
வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளின்
கால வரிசைப் பதிவு ஆகும்.
2. வரலாற்றுக்கு
முந்தைய காலம் பற்றி எழுதுக.
வரலாற்றுக்கு முந்தைய காலம்
என்பது கற்கருவிகளைப் பயன்படுத்தியதற்கும் எழுதும் முறைகளைக் கண்டுபிடித்ததற்கும் இடைப்பட்ட
காலம் ஆகும்.
3. வரலாற்றுக்கு
முந்தைய காலத்தைப் பற்றி அறிய உதவும் சான்றுகள் எவை?
> கற்கருவிகள், புதை படிவங்கள்,
பாறை ஓவியங்கள் மற்றும் அகழாய்வுப் பொருள்கள் போன்றவை வரலாற்றுக்கு முந்தைய காலத்தைப்
பற்றி அறிய உதவும் சான்றுகள் ஆகும்.
> பானைகள், பொம்மைகள், நாணயங்கள்
மற்றும் அணிகலன்கள் ஆகியவை இதில் அடங்கும்.
4. வரலாற்றுக்கு
முந்தைய காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் யாவை?
> ஆதிச்ச நல்லூர்
> அத்திரம் பாக்கம்
> பிரம்மகிரி
> ஹல்லூர்
> லோத்தல்
> பிம்பேட்கா
5. அருங்காட்சியகத்தின்
பயன்கள் யாவை?
பழங்கால மனிதர்கள் பயன் படுத்திய
பொருள்கள் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப் படுகின்றன. அவை அக்கால மக்களின் வாழ்க்கை
முறையைப் பற்றி அறிய உதவுகின்றன.
6. பழங்கால
மனிதன் வேட்டையாடப் பயன்படுத்திய கருவிகள் சிலவற்றைக் கூறு.
> கற்கருவிகள்
> எலும்புகள்
> மிருகங்களின் கொம்புகள்
> மரக்கிளைகளால் செய்யப்பட்ட
கருவிகள்
7. பாறைகளில்
ஓவியங்கள் ஏன் வரையப்பட்டன?
> அவர்கள் தமது வாழ்க்கை
நிகழ்வுகளைப் பதிவு செய்வதற்காக ஓவியங்கள் வரைந்திருக்கலாம்.
> மேலும் பொழுது போக்காகவும்
ஓவியங்களைத் தீட்டியிருக்கலாம்.
8. தொல்
கைவினைப் பொருள்கள் ஏதேனும் இரண்டினைக் கூறுக.
> பொம்மைகள்
> அணிகலன்கள்
VIII. உயர் சிந்தனை வினாக்கள்
1. வரலாற்றுக்கு
முந்தைய காலத்தில் மக்களுக்கு நாய் எவ்வாறு பயனுள்ளதாக இருந்தது?
> பழங்கால மக்களின் குகைக்குள்
கொடிய விலங்குகள் நுழைந்துவிடும். அவற்றை மனிதர்களால் அறிய முடிவதில்லை. ஆனால் நாய்கள்
தமது கூரிய மோப்ப உணர்வினால் அவற்றின் வருகையை அறிந்து அவர்களுக்கு உணர்த்தின. எனவே
நாய்கள் பாதுகாப்பிற்குப் பயன்பட்டன.
> வேட்டையாடுவதற்கும், பாதுகாப்பிற்கும்
நாய்கள் பெரிதும் பயன்பட்டன.
2. பழைய
கற்கால மனிதனின் வாழ்க்கை முறையைத் தற்கால வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டுப் பார்.
பழைய கற்கால மனிதன்
1. நாடோடியாக வாழ்ந்தனர்
2. மரக்கிளைகள், பொந்துகள் மற்றும்
குகைகளில் வசித்தனர்.
3. விலங்குகளின் தோல்கள், மரங்களின்
பட்டைகள் மற்றும் இலைகள் ஆகியவற்றை அணிந்தனர்
4. காடுகளில் சேகரித்த காய்கள்,
பழங்கள் மற்றும் கிழங்குகளை உணவாகக் கொண்டிருந்தனர்
5. நாகரிகமற்றவர்கள்
6. பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்தனர்
தற்கால மனிதன்
1. கிராமங்களிலும் நகரங்களிலும்
குடியேறியுள்ளனர்.
2. நன்கு கட்டிமுடிக்கப்பட்டுள்ள
வீடுகளில் வசிக்கின்றனர்.
3. பருத்தி பட்டு போன்றவற்றாலான
ஆடைகளை அணிகின்றனர்
4. பல வகையான உணவு வகைகளை உட்கொள்கின்றனர்
5. மிகுந்த நாகரிகமானவர்கள்
6. மிகப் பாதுகாப்பாக வாழ்கிறோம்.
IX. மாணவர் செயல்பாடு
1. உனது
குடும்பத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளையும் அவை நிகழ்ந்த ஆண்டுகளையும் குறிக்கவும்.
ஆசிரியர் உதவியுடன் தனியாக அல்லது குழுவாக இணைந்து இந்த நிகழ்வுகளைக் காலக்கோடாக வரைந்து
பார்.
2 ஆதிகால
மனிதன் கற்களைக் கருவியாகப் பயன்படுத்தினான். கற்களின் பயன்களைக் காட்டும் படங்களைச்
சேகரித்து ஒரு படத்தொகுப்பு தயார் செய்க.
3.கீழே
குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று ஆதாரங்கள் எந்த வகையைச் சார்ந்தது
அ) ஆதிச்சநல்லூரில்
இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட தாழிகள்
ஆ) வேள்விக்குடி
செப்பேடுகள்
இ) மகாபாரதம்
ஈ) சாஞ்சி
ஸ்தூபி
உ) பட்டினப்பாலை
ஊ) கீழடியில்
கிடைத்துள்ள மட்பாண்டங்கள்
எ) சிந்து
வெளியில் கண்டெடுக்கப்பட்ட பொம்மைகள்
ஏ) தஞ்சை
பெரிய கோவில்
X. வாழ்க்கைக் கல்வி
1. களிமண்ணைக்
கொண்டு பழைய கற்கால மனிதன் பயன்படுத்திய கற்கருவிகளின் மாதிரிகள் தயார்செய்க.
2. தாத்தா,
பாட்டி அண்டை வீட்டுக்காரர்கள், ஆசிரியர்கள் ஆகியோருடன் உரையாடி உனது தெரு, கிராமம்,
நகரம் அல்லது பள்ளி இவற்றில் ஏதேனும் ஒன்றைப் பற்றிய செய்திகளைச் சேகரி. அதன் வரலாற்றை
"நானும் ஒரு வரலாற்று ஆசிரியன்" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையாக எழுதிப்பார்.
XI. கட்டக வினாக்கள்
அன்று மனிதர்கள் என் மீது கிறுக்கினார்கள்; வண்ண மை கொண்டு ஓவியம் வரைந்தனர். இன்று என்னை உடைத்து
வீடுகள், சாலைகள் அமைக்கின்றனர். யார்?
விடை: பாறை
ஏதேனும் இரு தொல்பொருள் ஆதாரங்களைக் கூறு.
விடை: நாணயங்கள், கல்வெட்டுகள்
இலக்கியச் சான்றுகளின் வகைகளைக் கூறு.
விடை: மதசார்புள்ள
இலக்கியங்கள் மதசார்பற்ற இலக்கியங்கள்
பொ.ஆ.மு - இதன் விரிவாக்கம் என்ன?
விடை: பொது ஆண்டிற்கு முன்
“இஸ்டோரியா' என்னும் கிரேக்கச் சொல்லுக்கு
என்ன பொருள்?
விடை: விசாரிப்பதன் மூலம் கற்றல்
பொ.ஆ - இதன் விரிவாக்கம் என்ன?
விடை: பொது ஆண்டு
கல்வெட்டுக் குறிப்புகளைப் பற்றி ஆராயும் துறை
விடை: கல்வெட்டியல்
நாணயங்களை ஆராயும் துறை
விடை: நாணயவியல்
நீங்கள் பேச, பார்க்க, கேட்க, எழுத, படிக்க உதவுவேன். நானின்றி இவ்வுலகம் இல்லை . நான் யார்?
விடை: கைப்பேசி
XII. வரைபடம்
இந்திய
அரசியல் நில வரைபடத்தில் கீழ்க்காணும் இடங்களைக் குறிக்கவும்.
1. டெல்லி
2. சென்னை
3. தமிழ்நாடு
4. ஆந்திர பிரதேசம்
5. கேரளா
6. கர்நாடகா