பருவம் 3 அலகு 2 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 6th Social Science : Civics : Term 3 Unit 2 : Local Bodies - Rural and Urban

   Posted On :  31.08.2023 07:54 am

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 3 அலகு 2 : உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும்

வினா விடை

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 3 அலகு 2 : உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

பயிற்சி

 

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

 

1. பல கிராம ஊராட்சிகள் ஒன்றிணைந்து --------------- அமைக்கப்படுகிறது.

அ) ஊராட்சி ஒன்றியம்

ஆ) மாவட்ட ஊராட்சி

இ) வட்டம்

ஈ) வருவாய் கிராமம்

விடை: அ) ஊராட்சி ஒன்றியம்

 

2. தேசிய ஊராட்சி தினம் -------------------- ஆகும்.

அ) ஜனவரி 24

ஆ) ஜுலை 24

இ) நவம்பர் 24

ஈ) ஏப்ரல் 24

விடை: இ) ஏப்ரல் 24

 

3. இந்தியாவின் பழமையான உள்ளாட்சி அமைப்பாக அமைக்கப்பட்ட நகரம் -------------------------

அ) டெல்லி

ஆ) சென்னை

இ) கொல்கத்தா

ஈ) மும்பாய்

விடை:  ஆ) சென்னை

 

4. மாநகராட்சியின் தலைவர் ---------------------- என அழைக்கப்படுகிறார்.

அ) மேயர்

ஆ) கமிஷனர்

இ) பெருந்தலைவர்

ஈ) தலைவர்

விடை: அ) மேயர்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

 

1. இந்தியாவிலேயே பேரூராட்சி என்ற அமைப்பை அறிமுகப்படுத்திய மாநிலம்  தமிழ்நாடு ஆகும்.

2. பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு 1992

3. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் 5 ஆண்டுகள்.

4. தமிழ்நாட்டில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி வாலாஜாபேட்டை நகராட்சி  ஆகும்.

 

III. பொருத்துக

 

1 கிராம சபை - செயல் அலுவலர்

2. ஊராட்சி ஒன்றியம் - மாநிலத் தேர்தல் ஆணையம்

3. பேரூராட்சி - வட்டார வளர்ச்சி அலுவலர்

4. உள்ளாட்சித் தேர்தல் - நிரந்தர அமைப்பு


விடை:

1 கிராம சபை - நிரந்தர அமைப்பு

2. ஊராட்சி ஒன்றியம் - வட்டார வளர்ச்சி அலுவலர்

3. பேரூராட்சி - செயல் அலுவலர்

4. உள்ளாட்சித் தேர்தல் - மாநிலத் தேர்தல் ஆணையம்

 

IV. விடையளிக்கவும்

 

1. உன் மாவட்டத்தில் மாநகராட்சி இருப்பின், அதன் பெயரை எழுதவும்?

திருநெல்வேலி மாநகராட்சி

 

2. உள்ளாட்சி அமைப்புகளின் அவசியம் யாது?

உள்ளாட்சி அமைப்புகள் மக்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கும் உள்ளூர் அமைப்புகளின் திறமையான செயல்பாட்டிற்கும் மக்களை நேரடியாக ஈடுபடுவதற்கு அவசியமாகும்.


3. ஊரக உள்ளாட்சி அமைப்புகள் யாவை?

ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி

 

4. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் யாவை?

மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி.

 

5. கிராம ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் யாவர்?

கிராம ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள்

 ஊராட்சி மன்றத் தலைவர்.

 பகுதி உறுப்பினர்கள்

 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் (கவுன்சிலர்)

 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்.

 

6. மாநகராட்சியின் பணிகள் சிலவற்றைக் பட்டியலிடுக.

குடிநீர் வசதி

தெரு விளக்கு அமைத்தல்

தூய்மைப் பணி

மருத்துவச் சேவை

மாநகராட்சிப் பள்ளிகள்

பிறப்பு, இறப்பு பதிவு இன்னும் பிற

 

7. கிராம ஊராட்சியின் வருவாய்களைப் பட்டியலிடுக.

வீட்டு வரி, தொழில் வரி, கடைகள் மீதான வரி, குடிநீர் இணைப்புக்கான கட்டணம், நிலவரியிலிருந்து குறிப்பிட்ட பங்கு, மத்திய மாநில அரசுகளின் நிதி ஒதுக்கீடு இன்னும் பிற

 

8. கிராம சபைக் கூட்டம் நடைபெறும் நாட்கள் யாவை? அந்நாட்களின் சிறப்புகள் யாவை?

கிராம சபைக் கூட்டம் ஜனவரி 26, மே 1, ஆகஸ்டு 15, அக்டோபர் 2, ஆகிய நாட்களில் நடைபெறும்.

தேசிய விழா தினமாக இந்த நாட்கள் கொண்டாடப்படுகின்றன. 

 

9. பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் சிறப்பம்சங்கள் யாவை?

கிராம சபை அமைத்தல், மூன்றடுக்கு ஊராட்சி அமைப்பு, இட ஒதுக்கீடு, தேர்தல், பதவிக்காலம், நிதி க்குழு, கணக்கு மற்றும் தணிக்கை, இன்னும் பிற

 

10. கிராம சபையின் முக்கியத்துவம் யாது?

கிராமத்து பஞ்சாயத்துகளின் திறமையான செயல்பாட்டுக்கு கிராமப்புற சபா மிகவும் அவசியமானதாகும்.

இது சமூக நலனுக்கான திட்டங்களை தீட்டுதல் மற்றும் செயல்படுத்துவதில் பொது மக்கள் பங்கேற்பைப் மேம்படுத்துகிறது.

 

 

V. உயர்சிந்தனை வினா


1. கிராம மற்றும் நகர மேம்பாட்டிற்கு உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. எவ்வாறு?

இந்திய நாடு ஒரு அகன்ற நாடாகும். ஒரே ஒரு அரசாங்கத்தால், நாட்டின் முழு நிர்வாகத்தையும், கவனிக்க இயலாது.

நமது இந்திய அரசமைப்புச்சட்டம் மூன்று நிலைகளில் நிர்வாகத்தை பிரித்துள்ளது. மத்திய அரசு, மாநில அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்.

உள்ளாட்சி அமைப்புகள் கிராமம் மற்றும் நகரங்களின் உள்ளூர் நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளும்.

உள்ளாட்சி அமைப்புகளின் முக்கியமான பணிகள் :

தெருக்களைத் தூய்மைப்படுத்துதல்,

சாலைகள் மற்றும் பள்ளிகள் கட்டுதல்,

குடிநீர் மற்றும் மின்வசதி அமைத்தல்

 

VI. செயல்பாடுகள்


1. உள்ளாட்சி பிரதிநிதியை நேர்காணல் செய்வதற்காக வினா நிரல் தயாரிக்கவும்.

நம் பகுதியில் சிறந்த வடிகால் அமைப்பதற்கு தங்களின் திட்டம் என்ன?

மகாராஜ நகர், மற்றும் தியாகராஜ நகரை இணைக்கும் பாலக் கட்டுமானம் எப்போது நிறைவடையும்?

நம் பகுதியில் தெரு விளக்கு அமைக்கும் பணி எத்தனை மாதங்களில் முடிவடையும்?


2. பள்ளியின் மேம்பாட்டிற்கு உள்ளாட்சி பிரதிநிதிகளின் பங்களிப்பு இருப்பின் கலந்துரையாடுக.

உள்ளாட்சி பிரதிநிதிகள் எங்கள் பள்ளியின் மேம்பாட்டிற்காக அபரிமிதமான உதவிகள் செய்துள்ளனர்.

பள்ளியின் வளர்ச்சிக்காக அவர்கள் நகரின் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், மற்றும் பள்ளியின் பழைய மாணவர்களை நாடி உதவி பெற்றனர்.

அவர்கள் திரட்டிய நிதியில் இருந்து பள்ளிக்கு தேவையான கணினி, ஆய்வக உபகரணங்கள் மற்றும் நூலகத்திற்கு தேவையான புத்தகங்களை வழங்கினர்.

 

3. நான் உள்ளாட்சி பிரதிநிதியானால்....?

சிறந்த வடிகால் திட்டம் அமைக்கப் பாடுபடுவேன்.

டெங்கு போன்ற தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வழிகளை ஆராய்ந்து செயல் படுத்துவேன்.

நன்கு திட்டமிட்ட சாலை வசதிகளையும், நன்கு ஒளியூட்டும் விளக்குகளையும் ஏற்பாடு செய்து மக்கள் நலமுடன் வாழ வழி வகுப்பேன்.

 

4. உன்  மாவட்டத்தில் உள்ள பல வகையான உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கையைக் கேட்டறிந்து பதிவிடவும்.


Tags : Local Bodies - Rural and Urban | Term 3 Unit 2 | Civics | 6th Social Science பருவம் 3 அலகு 2 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : Civics : Term 3 Unit 2 : Local Bodies - Rural and Urban : Exercises Questions with Answers Local Bodies - Rural and Urban | Term 3 Unit 2 | Civics | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 3 அலகு 2 : உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும் : வினா விடை - பருவம் 3 அலகு 2 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : பருவம் 3 அலகு 2 : உள்ளாட்சி அமைப்பு - ஊரகமும் நகர்ப்புறமும்