பருவம் 3 அலகு 3 | குடிமையியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 6th Social Science : Civics : Term 3 Unit 3 : Road Safety
பயிற்சிகள்
I கீழ்க்கண்டவைகளுக்கு விடையளி
1. சாலை
பாதுகாப்பு குறித்த முழக்கங்களை எழுதவும்.
❖ விழிப்புடன் பயணம் விபத்தில்லா
பயணம்.
❖ வாழ்க்கையில் முந்துங்கள்
வாகனத்தில் அல்ல.
❖ வேகத்தை கூட்டாதே ஆயுளை
குறைக்காதே.
❖ நடக்க பாரு இடப்பக்கம்
கடக்க பாரு இருபக்கம்.
❖ வாகனம் ஓட்டுவதற்கு மட்டும்
பறப்பதற்கு அல்ல.
❖ வேகம் சோகத்தை தரும் நிதானம்
நிம்மதியை தரும்.
2. கீழே
கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை அடையாளம் காண்க.
அ) திருப்பம் கிடையாது
ஆ) செல்லக் கூடாது
இ) குறுக்கு சாலை
ஈ) மருத்துவமனை,
3.
2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்துகள் குறித்த தகவல்களைக் கொண்டு கலந்துரையாடல் நடத்தவும்.
❖ சாலை விபத்துக்கள் 2017ல் 3 சதவிகிதம் குறைந்துள்ளது.
❖ பஞ்சாப், மேற்கு வங்கம் மற்றும் குஜராத்தில் பெருமளவு விபத்துக்கள்
தவிர்க்கப்பட்டன.
❖ பீகார், உபி, ஒடிசா மற்றும் மபி மாநிலங்களில் சாலை விபத்துக்களில் அதிக
அளவில் உயிர் சேதம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
❖ 2016 ம் ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது பெருமளவு சாலை விபத்துக்கள் தவிர்க்கப்பட்ட
மாநிலங்களில்
❖ முதலாவதாகத் தமிழ்நாடு திகழ்கின்றது என்பதை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
❖ சதவிகிதத்தின் அடிப்படையில் பஞ்சாப் மாநிலத்தில் 15.7 சதவீதம் சாலை
விபத்துக்கள் படுவீழ்ச்சி அடைந்துள்ளது.
4. விவாதம்
– தலைக் கவசம் அணிதல் அவசியமானதா அல்லது அவசியமற்றதா?
தலைக்கவசம் அணிவதால் ஏற்படும் நன்மைகள் :
❖ 88% வரை தலைக்கு
ஏற்படும் ஆபத்தை தவிர்க்கலாம்.
❖ பார்க்கும் திறனை
அதிகரிக்கும்
தீமைகள் :
❖ அதன் வடிவமைப்பு
❖ பின்னால் வரும்
வாகனங்கள் தெரிவதில்லை.
முடிவு :
❖ தலைக்கவசம் அணிவதில்
சில தீமைகள் இருந்தாலும், நாம் தலைக்கவசம் அணியும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்
❖ நம்முடைய உயிர்
நாம் இந்த பூமியில் வாழ முக்கியமானதாக கருதப்படுகிறது.
❖ எனவே நாம் இந்த
விழிப்புணர்வை அனைவரும் அறிந்து கொள்ள செய்வோம். நம் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம்.
5. சாலை
பாதுகாப்பு குறித்த சுவரொட்டிகள் தயாரிக்கவும்.
PPPPPPPPPPPPPPPPPPPPP