Home | 7 ஆம் வகுப்பு | 7வது சமூக அறிவியல் | பயிற்சி வினா விடை

அரசியல் கட்சிகள் | முதல் பருவம் அலகு 2 | குடிமையியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - பயிற்சி வினா விடை | 7th Social Science : Civics : Term 1 Unit 2 : Political Parties

   Posted On :  14.05.2022 06:03 am

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : முதல் பருவம் அலகு 2 : அரசியல் கட்சிகள்

பயிற்சி வினா விடை

7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : முதல் பருவம் அலகு -2: அரசியல் கட்சிகள் புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள்

பயிற்சி


I. சரியான விடையைத் தேர்வு செய்க 

1. இரு கட்சி முறை என்பது

அ) இரண்டு கட்சிகள் அரசாங்கத்தை நடத்துவது 

ஆ) இரண்டு உறுப்பினர் ஒரு கட்சியை நடத்துவது 

இ) இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது 

ஈ) இவற்றுள் எதுவும் இல்லை

விடை : ஈ) இவற்றுள் எதுவும் இல்லை 


2. இந்தியாவில் காணப்படும் கட்சி முறை 

அ) ஒரு கட்சி முறை

ஆ) இரு கட்சி முறை 

இ) பல கட்சி முறை

ஈ) இவற்றுள் எதுவுமில்லை

விடை: இ) பல கட்சி முறை 


3. அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கும் அமைப்பு 

அ) தேர்தல் ஆணையம்

ஆ) குடியரசுத் தலைவர் 

இ) உச்ச நீதிமன்றம்

ஈ) ஒரு குழு 

விடை : அ) தேர்தல் ஆணையம் 


4. அரசியல் கட்சிகள் பொதுவாக எதன் அடிப்படையில் தோற்றுவிக்கப்படுகின்றன? 

அ) சமயக் கொள்கைகள்

ஆ) பொது நலன் 

இ) பொருளாதார கோட்பாடுகள் 

ஈ) சாதி

விடை : ஆ) பொது நலன் 


5. ஒரு கட்சி முறை எங்கு நடைமுறையில் உள்ளது? 

அ) இந்தியா

ஆ) அமெரிக்க ஐக்கிய நாடுகள் 

இ) பிரான்ஸ்

ஈ) சீனா

விடை : ஈ) சீனா


II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. மக்களாட்சியின் முதுகெலும்பாகத் திகழ்வது

விடை : அரசியல் கட்சிகள் 

2. நமது நாட்டின் ஒவ்வொரு கட்சியும் என்ற -------- அமைப்பில் பதிவு செய்தல் வேண்டும். 

விடை: தேர்தல் ஆணையம்

3. அரசியல் கட்சிகள் --- மற்றும் ------- இடையே பாலமாக செயல்படுகின்றன.

விடை: குடிமக்களுக்கும், கொள்கை வகுப்பாளர்களுக்கும் 

4. ஒரு பதிவு செய்யப்பட்ட ஆனால் ---- அரசியல் கட்சி தேர்தலில் தாங்கள் விரும்பும் சின்னத்தில் போட்டியிட இயலாது. 

விடை: அங்கீகரிக்கப்படாத

5. எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தில் ------ இருப்பார். 

விடை:  கேபினட் அமைச்சர்


III. பொருத்துக

அ ஆ

1. மக்களாட்சி  - அ. அரசின் கொள்கைகளை விமர்சிப்பது

2. தேர்தல் ஆணையம் – ஆ. அரசாங்கத்தை அமைப்பது 

3 பெரும்பான்மைக் கட்சி  - இ. மக்களின் ஆட்சி

4. எதிர்க்கட்சி – ஈ. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்

விடைகள் 

1. மக்களாட்சி  - இ. மக்களின் ஆட்சி 

2. தேர்தல் ஆணையம் – ஈ. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் 

3 பெரும்பான்மைக் கட்சி  - ஆ. அரசாங்கத்தை அமைப்பது 

4. எதிர்க்கட்சி – அ. அரசின் கொள்கைகளை விமர்சிப்பது


IV. கீழ்க்காணும் கூற்றுகளை ஆய்வு செய்து பொருத்தமான விடையை தேர்வு செய்க 

I. பின்வரும் கூற்றுகளில் சரியானதை தேர்வு செய்க.

அ) நாட்டில் உள்ள ஒவ்வொரு கட்சியும் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து கொள்ளுதல் வேண்டும். 

ஆ) தேர்தல் ஆணையம் அனைத்து கட்சிகளையும் சமமாக நடத்துகிறது. 

இ) தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு தனி சின்னத்தை ஒதுக்குகிறது. 

ஈ) இவை அனைத்தும்

விடை : ஈ) இவை அனைத்தும் 


2. கூற்று : பெரும்பான்மை கட்சி ஒரு நாட்டின் சட்டங்களை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. 

காரணம் : தேர்தலில் பிற கட்சிகளைக் காட்டிலும் அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது ஆகும். 

அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும். 

ஆ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல. 

இ) காரணம் தவறு, கூற்று சரி. 

ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு.

விடை : அ) காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும். 


V. ஓரிரு வாக்கியங்களில் விடைகளை எழுதுக 

1. ஒரு அரசியல் கட்சியின் அடிப்படை கூறுகள் யாவை?

ஓர் அரசியல் கட்சியின் அடிப்படைக் கூறுகள் : 

* தலைவர் 

* செயல் உறுப்பினர்கள்

* தொண்டர்கள் 


2. மூன்று வகை கட்சி முறைகளைக் குறிப்பிடுக.

கட்சி முறைகள் : 

* ஒரு கட்சி முறை 

* இரு கட்சி முறை 

* பல கட்சி முறை 


3. இரு கட்சி முறை காணப்படும் நாடுகளின் பெயர்களை எழுதுக.

இரு கட்சி முறை காணப்படும் நாடுகள் : 

* பிரிட்டன் (தொழிலாளர் கட்சி மற்றும் பழமைவாதக் கட்சி)

* அமெரிக்க ஐக்கிய நாடுகள் (குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயக் கட்சி)


4. குறிப்பு வரைக : கூட்டணி அரசாங்கம்.

கூட்டணி அரசாங்கம் : 

* பல கட்சி அமைப்பில் சில நேரங்களில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை ஒரு கட்சி பெறுவதில்லை . 

* இது போன்ற நேர்வில் சில கட்சிகள் இணைந்து அரசாங்கத்தை அமைக்கின்றன. இது கூட்டணி அரசாங்கம் என அழைக்கப்படுகிறது.


VI. பின்வருவனவற்றிற்கு விடை அளிக்கவும் 

1. அரசியல் கட்சியின் செயல்பாடுகளில் ஏதேனும் நான்கினை எழுதுக. 

அரசியல் கட்சியின் செயல்பாடுகள் : 

* வழங்குதல்

* பரிந்துரைத்தல் 

* ஏற்பாடு செய்தல் 

* ஊக்குவித்தல் 

* ஒருங்கிணைத்தல் 

* ஆட்சி அமைத்தல் ஆகியன 

ஏற்பாடு செய்தல் : 

அரசியல் பிரச்சாரம், பேரணி ஆகியவற்றை ஏற்பாடு செய்தல், தேர்தலில் வெற்றி பெற தேர்தல் அறிக்கையை வெளியிடுதல் ஆகியன ஓர் அரசியல் கட்சியின் முக்கிய செயல்பாடுகளில் ஒன்றாகும். 

பரிந்துரைத்தல் : 

அரசியல் கட்சி தேர்ந்தெடுக்கப்பட்ட அலுவலகத்திற்கு தனி நபரை பரிந்துரை செய்கிறது. 

ஊக்குவித்தல் : 

அரசியல் கட்சி மக்கள் நலனுக்காக பல்வேறு திட்டங்களையும் கொள்கைகளையும் முன் வைக்கிறது. 

ஆட்சி அமைத்தல் : 

அரசாங்கத்தை ஏற்படுத்தி இயக்குதல், பொதுவான கொள்கையை உருவாக்குதல் ஆகியவற்றை அரசியல் கட்சிகள் செய்கின்றன. 


2. ஒரு அரசியல் கட்சி எப்போது தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படுகிறது? 

அரசியல் கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்படுதல் : 

* இந்தியாவில் அரசியல் கட்சியை தேசிய கட்சியாக அங்கீகரிப்பதற்கு இந்தியத் தேர்தல் ஆணையம் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. 

* மக்களவைத் தேர்தலில் அல்லது நான்கு மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலில் செல்லத்தக்க மொத்த வாக்குகளில் ஒரு கட்சி 6% வாக்குகளைப் பெற்றிருத்தல் வேண்டும். 

* ஒன்று அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட மாநிலங்களில் நான்கு மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும். 

* இறுதியாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் குறைந்தபட்சம் 2 % தொகுதிகளில் வெற்றி பெற்றிருத்தல் வேண்டும்.


VI. உயர் சிந்தனை வினா 

1. ஒரு மக்களாட்சி நாட்டிற்கு அரசியல் கட்சி அவசியமா? 

ஒரு மக்களாட்சி நாட்டிற்கு அரசியல் கட்சி அவசியம். 

ஏனெனில்,

* அரசியல் கட்சிகள் மக்களாட்சியின் முதுகெலும்பாகும். அரசியல் கட்சிகள் முறையாக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இல்லாமல் அரசாங்கத்தை அமைக்கும் முக்கிய காரணிகளாக இருக்கின்றன.

* அரசியல் கட்சிகள் பொதுக் கருத்துக்களை உருவாக்குவதில்லை. அவை குடிமக்களுக்கும் கொள்கை வகுப்பாளர்களுக்கும் இடையே பாலமாக சேவை செய்கின்றன. 


2. தேசிய கட்சி, மாநிலக் கட்சி மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சி ஆகியவற்றிற்கு சில உதாரணங்கள் தருக. 

தேசிய கட்சி : 

* காங்கிரஸ்

* பாரதிய ஜனதா கட்சி 

* இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

* மார்க்ஸிட் கம்யூனிஸ்ட் கட்சி 

மாநிலக் கட்சி : 

* திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) 

* அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) 

* ஆம் ஆத்மி கட்சி 

* அசாம் கன பரிஷத்

பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சி : 

* அம்ரா பங்ளி (மேற்கு வங்களாம்) 

* மக்கள் ஜனநாயக முன்னணி (திரிபுரா) 

* இந்திய ஜனநாயக கட்சி (தமிழ்நாடு) 

* கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (தமிழ்நாடு)


VIII. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது) 

1. ஒரு தேர்தல் அறிக்கையை எழுதுக. (election manifesto) (நீ ஒரு கட்சித் தலைவராக இருந்தால்)


Tags : Political Parties | Term 1 Unit 2 | Civics | 7th Social Science அரசியல் கட்சிகள் | முதல் பருவம் அலகு 2 | குடிமையியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
7th Social Science : Civics : Term 1 Unit 2 : Political Parties : Exercises Questions with Answers Political Parties | Term 1 Unit 2 | Civics | 7th Social Science in Tamil : 7th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : முதல் பருவம் அலகு 2 : அரசியல் கட்சிகள் : பயிற்சி வினா விடை - அரசியல் கட்சிகள் | முதல் பருவம் அலகு 2 | குடிமையியல் | 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 7 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : குடிமையியல் : முதல் பருவம் அலகு 2 : அரசியல் கட்சிகள்