Home | 11 ஆம் வகுப்பு | 11வது புவியியல் | களப்பணி அறிக்கை

புவியியல் - களப்பணி அறிக்கை | 11th Geography : Chapter 13 : Field Work and Report Writing

   Posted On :  16.05.2022 01:56 am

11 வது புவியியல் : அலகு 13 : களப்பணி மற்றும் அறிக்கை தயாரித்தல்

களப்பணி அறிக்கை

களப் பணியின் ஒரு அறிக்கையை எழுதுவது என்பது உண்மையில் களப்பணி பற்றிய ஒரு ஆவணமாகும்.

களப்பணி அறிக்கை

களப் பணியின் ஒரு அறிக்கையை எழுதுவது என்பது உண்மையில் களப்பணி பற்றிய ஒரு ஆவணமாகும். இது ஒரு முறையான மதிப்பாய்வு முறை ஆகும். எதிர்காலத்தில் களப்பணி மேற்கொள்ளும் மாணவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டியான கள ஆய்வு அறிக்கையானது சுருக்கமாகவும், தெளிவாகவும் மற்றும் தகவல்கள் செறிவுள்ளதாகவும் கூடுதல் புள்ளி விவரங்கள், நிலவரைபடங்கள், மாதிரிப் படங்கள், புகைப்படங்கள் போன்றவற்றையும் கொண்டிருக்கும். களப்பயண அறிக்கை தயாரித்தலில் சில படிநிலைகள் உள்ளன. அவை,



1. தலைப்பு

கள ஆய்வுப் பணியை மேற்கொள்வதன் நோக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் தலைப்பை அடையாளம் காண வேண்டும். களப்பணியின் தலைப்பை தடித்த எழுத்துக்களால் அறிக்கையின் மேல் பகுதியில் எழுத வேண்டும்.

 

2. அறிமுகம்

ஒவ்வொரு அறிக்கையின் ஆரம்பமும் ஆய்வு குறித்த தகவலை சுருக்கமாக வழங்க வேண்டும். இது புவியியல் பகுதியினை தொடர்புபடுத்தி விவரிக்க வேண்டும். (எ.கா) ஒரு நீரோடையை பற்றி படித்தால்அது இயற்புவியியலின் ஒரு பிரிவு என்றுகுறிப்பாக புவிப்புறவியலில் வெளி இயக்க செயல்பாட்டால் உருவான நிலத்தேய்வு என்றும் குறிப்பிட வேண்டும். களப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்ட காலப்பகுதி விரிவாக கூறப்பட வேண்டும்.

 

3. ஆய்வின் தேவை

களப்பணி மேற்கொள்வதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டும். இது களப்பணியின் தேவையை குறிக்கும்.

 

4. ஆய்வுப் பகுதி

ஆய்வுப் பகுதி குறித்த விவரங்கள் இங்கே விளக்கப்பட்டுள்ளன. ஆய்வுப் பகுதியின் முழுமையான அல்லது புவியியல் இருப்பிடம்ஆய்வுப் பகுதியின் தேர்வு மற்றும் அமைப்பு ஆகியவை விவரிக்கப்பட வேண்டும். ஆய்வுப் பகுதியின் மற்ற இயற்கை மற்றும் கலாச்சார விவரங்கள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளன. நிலவரைபடம்செயற்கை கோள் புகைப்படம் போன்றவற்றின் பிரதி இணைக்கப்பட வேண்டும்.

 

5. பயன்படுத்தப்பட்ட முறை

களப்பணிமேற்கொள்ள பயன்படுத்தப்பட்ட முறை பற்றி குறிப்பிடப்பட வேண்டும். ஒவ்வொரு ஆய்வுக்கும் ஏற்ப தகவல் சேகரிக்கும் முறை மாறுபடும். அவை உற்றுநோக்கல், கேட்டறிதல், முதல் மற்றும் இரண்டாம் நிலை தகவல் சேகரித்தல், கள மாதிரிப் படம் (field sketches), ஒலி/ காட்சிப் பதிவு மற்றும் புகைப்படங்கள், உலகளாவிய ஊடுருவல் செயற்கைக்கோள் அமைப்பு (GNSS) ஆய்வு போன்றவையாகும்.

 

6. தகவல் பகுப்பாய்வு

களப்பணியின் மூலம் பெறப்பட்ட புள்ளி விவரங்களின் பகுப்பாய்வு எளிய முறையில் மேற்கொள்ளப்படுகிறது. சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் பிரதிபலிப்பு முறையாக இருக்க வேண்டும். (எடுத்துக்காட்டு)

1. உற்றுநோக்கல் மூலமாக பெறப்பட்ட புள்ளி விவரங்கள் புகைப்படங்களாகவும்கள மாதிரிப் படங்களாவும் இருக்கும்.

2. ஆய்வின் மூலம் பெறப்பட்ட புள்ளிவிவரங்கள் வரைபடமாகவும் நிலவரைபடமாகவும் இருக்கும்.

3. இரண்டாம் நிலை புள்ளி விவரங்களானது அட்டவணைகள், கோட்டுப் படங்கள், வரைபடங்கள் அல்லது விளக்கப்படங்களாக இருக்கும்.

4. உலகளாவிய ஊடுருவல் செயற்கைக்கோள் அமைப்பு (GNSSமூலம் பெறப்பட்ட புள்ளி விவரங்கள் வரைபடங்களாக இருக்கும்.

பல்வேறு வடிவங்களில் முதன்மைப் படுத்தப்பட்டுள்ள தகவல்கள் எளிதில் அடையாளம் காணப்பட்டு, புரிந்து கொள்ளுதல் மற்றும் அவற்றை சரியாக பட்டியலிடுதல் வேண்டும். புகைப்படங்கள், வரைபடங்கள், அட்டவணைகள், நிலவரைபடங்கள் போன்றவை களப்பணி நிறைவடைந்தவுடன் வரிசையின்படி தொகுத்து வைக்க வேண்டும். ஏனெனில் களப்பயணம் மேற்கொண்டதன் நோக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் சரியான தீர்வை கொடுப்பதன் மூலம் அதன் மதிப்பை உயர்த்தும் விதத்தில் அறிக்கை அமைய வேண்டும்.

 

7. முடிவுரை

களப்பயணத்தின் முடிவுரை சுருக்கமாக இருக்க வேண்டும். நோக்கம்முடிவு அல்லது தீர்வு போன்றவை எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகிறது என்ற கூடுதல் அறிவை களப்பயணத்தில் ஈடுபடுவதன் மூலம் பெற முடிகிறது. மாணவர்கள் வகுப்பறையில் கற்ற பாடப்பொருள் அறிவை களப்பயணம் வாயிலாக தெரிந்து கொள்ள முடியும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை இயற் புவியியலின் கீழ் களப்பயண அறிக்கை தயாரிக்க ஒரு சில வழிமுறைகளை வழங்குகிறது







 

Tags : Geography புவியியல்.
11th Geography : Chapter 13 : Field Work and Report Writing : Field Report Geography in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது புவியியல் : அலகு 13 : களப்பணி மற்றும் அறிக்கை தயாரித்தல் : களப்பணி அறிக்கை - புவியியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது புவியியல் : அலகு 13 : களப்பணி மற்றும் அறிக்கை தயாரித்தல்