Home | 11 ஆம் வகுப்பு | 11வது புவியியல் | களப்பணியின் தேவை

புவியியல் - களப்பணியின் தேவை | 11th Geography : Chapter 13 : Field Work and Report Writing

   Posted On :  26.03.2022 02:18 am

11 வது புவியியல் : அலகு 13 : களப்பணி மற்றும் அறிக்கை தயாரித்தல்

களப்பணியின் தேவை

புவியியல் மாணவர்களுக்கு களப்பணியானது மிகவும் அவசியம் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன.

களப்பணியின் தேவை

புவியியல் மாணவர்களுக்கு களப்பணியானது மிகவும் அவசியம் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை

1. களப்பணி, நேரடி உற்றுநோக்கல் மூலமாக ஆய்வுப் பகுதியின் உண்மையான தகவல்களை சேகரிக்க உதவுகிறது.

2. கள உற்றுநோக்கலோடு வகுப்பறை கற்றலும் இணைந்து புவியியல் பாடக் கருத்துக்களை நன்றாக புரிந்துகொள்ள உதவுகிறது.

3. குறிப்பிட்ட இடைவெளியில் ஒரே இடத்தை மீண்டும் மீண்டும் உற்று நோக்கும் போது அப்பகுதியில் ஏற்படும் மாற்றத்தின் போக்கினைப் புரிந்துகொள்ள முடிகிறது.

(எ.கா)

அ) வெவ்வேறு காலங்களில் கிடைக்கக் கூடிய தாவரங்களின் தரம் மற்றும் வளர்ச்சி

ஆ) குளம் மற்றும் நீர்தேக்கங்களில் உள்ள நீரின் அளவு பருவக் கால மழைக்கு முன்னும் பின்னும் மாறுபடுவதை காண முடிகிறது.

4. களப்பணி மாணவர்களிடம் உற்றுநோக்கும் ஆற்றலை மேம்படுத்துகிறது.

5. களப் பயணங்கள் மாணவர்களின் உள்ளார்ந்த ஆர்வத்தினைத் தூண்டுகிறது.

6 நிலவரைபடத்தை படித்தறியும் திறன், வரையும் திறன், சுருக்க மாதிரிப்படம் வரைதல், மற்றும் புவியியல் சார்ந்த கருவிகளின் பயன்பாட்டை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ள உதவுகிறது.

7 பல்வேறு விதமான சூழ்நிலைகளில் மாணவர்கள் தங்களை மாற்றி கொள்வதற்கான வாய்ப்பினை களப்பணி வழங்குகிறது.

8. பாடம் சார்ந்த மாணவர்களின் பார்வையை மேம்படுத்துவதற்கும் மற்றும் சுற்றுச் சூழலை பாதுகாப்பதற்கும் களப்பணி உதவுகிறது.

எல்லாவற்றிற்கும் மேலாக இது வெளியிடங்களுக்கு சென்று வருவதற்கான ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கும்.


Tags : Geography புவியியல்.
11th Geography : Chapter 13 : Field Work and Report Writing : Need for field work Geography in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11 வது புவியியல் : அலகு 13 : களப்பணி மற்றும் அறிக்கை தயாரித்தல் : களப்பணியின் தேவை - புவியியல் : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11 வது புவியியல் : அலகு 13 : களப்பணி மற்றும் அறிக்கை தயாரித்தல்