Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | மொத்த தொகையை தோராயமாகக் கணக்கிடல்

பணம் | பருவம் 3 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - மொத்த தொகையை தோராயமாகக் கணக்கிடல் | 4th Maths : Term 3 Unit 5 : Money

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம்

மொத்த தொகையை தோராயமாகக் கணக்கிடல்

குறிப்பு : 50 பைசாக்கள் மற்றும் அதற்குமேல் இருந்தால் ரூபாயுடன் ஒன்றை கூட்டுக மற்றும் பைசாக்களை நீக்குக. 50 குறைவாக இருந்தால் ரூபாயில் எந்த மாற்றமும் இன்றி அப்படியே எழுதவும்.

மொத்த தொகையை தோராயமாகக் கணக்கிடல்

தருண் தன் அப்பாவுடன் காலனி கடைக்குச் சென்றான். அங்கு ஒரு ஜோடி காலனிகளின் விலை ₹ 99.50 என்று குறிப்பு வில்லையில் இருந்தது.

குறிப்பு : 50 பைசாக்கள் மற்றும் அதற்குமேல் இருந்தால் ரூபாயுடன் ஒன்றை கூட்டுக மற்றும் பைசாக்களை நீக்குக. 50 குறைவாக இருந்தால் ரூபாயில் எந்த மாற்றமும் இன்றி அப்படியே எழுதவும்.

தருண் : அப்பா, அந்த காலனிகளின் விலை என்ன?

அப்பா : ₹ 100

தருண் :: அப்பா, குறிப்பு விலையில் ₹ 99.50 என்று இருக்கிறது. நீங்கள் ₹ 100 என்று கூறுகிறீர்கள்.

அப்பா : சரிதான் தருண். இங்கு ₹ 99.50 என்பது முழுதாக்காமல் இருப்பதால் கூறுவதற்கு சிரமமாக இருக்கும். ஆதலால் ₹100 என்று கூறினேன்.

தருண் : அப்பா, ₹ 100 என்று கூறுவதற்கு பதிலாக ₹ 99 என்று கூறலாம் அல்லவா?

அப்பா : இல்லை தருண் அவ்வாறு கூறக்கூடாது. ஏனெனில் நமக்கு ₹ 99.50 என்று கொடுக்கப்பட்டிருந்தது, 50 பைசாக்கள் மற்றும் அதற்கு மேல் இருந்தால் ரூபாயுடன் ஒன்றை கூட்டுக.

தருண் : அப்பா, அப்படியென்றால் ₹ 50க்கு குறைவாக இருந்தால், முந்தைய முழு எண்ணிற்கு செல்ல வேண்டும் அப்படித்தானே?

அப்பா : ஆம், மிகச் சரியாகச் சொன்னாய் தருண். இருவரும் ஒரு ஜோடி காலணி வாங்கிச் சென்றனர்.


பணத்தை துல்லியமாக அளவிட, அடுத்த அல்லது அதே முழுமதிப்பிற்கு செல்லுதல்.


 ₹ 1 க்கு தோராய மதிப்பீடு என்பது அடுத்த அல்லது முந்தைய முழு மதிப்பிற்கு செல்லுதல்


செய்து பார்


₹10ன் மடங்கினைப் (முன் அல்லது பின்) பயன்படுத்தி பின் வருவனவற்றை தோராயமாக்குக.


தீபக் வேர்க்கடலை உருண்டை ₹ 24.40 இக்கும், தானிய மிக்சர் ₹ 34.60 இக்கும், முறுக்கு ₹ 28.75 இக்கும் வாங்கினார். அவர் அருகிலுள்ள மதிப்புகளுக்கு விலைகளை முழுதாக்கினார்.


Tags : Money | Term 3 Chapter 5 | 4th Maths பணம் | பருவம் 3 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 3 Unit 5 : Money : Finding the estimation of the total cost Money | Term 3 Chapter 5 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம் : மொத்த தொகையை தோராயமாகக் கணக்கிடல் - பணம் | பருவம் 3 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம்