தகவல் செயலாக்கம் | பருவம் 3 அலகு 5 | 1 ஆம் வகுப்பு கணக்கு - வழிமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் உருவாக்குதல் | 1st Maths : Term 3 Unit 5 : Information Processing
வழிமுறைகளைப் பின்பற்றுதல் மற்றும் உருவாக்குதல்
கற்றல்
வழி சொல்வோம்! பொருள் வெல்வோம்!
ஆசிரியருக்கான குறிப்பு
ஆசிரியர் இந்த விளையாட்டை அறிமுகப்படுத்தும் முன் குழந்தைகளுக்குத் திசை சார்ந்த சொற்களான மேல்நோக்கி,
கீழ்நோக்கி, இடது,
வலது போன்றவற்றில் போதுமான பயிற்சியை அளிக்கவும்.
வழிமுறை: இந்த விளையாட்டை உள்ளரங்க / வெளியரங்க விளையாட்டாக விளையாடலாம். படத்தில் உள்ளவாறு கட்டங்களை வரைந்து அதில் பொருள்கள் அல்லது பொம்மைகளை வைக்கவும். ஏதேனும் ஒரு மாணவரைத் தேர்வுசெய்து அவரின் மூலம் விளையாட்டைத் தொடங்கலாம்.
ஆசிரியர் : இரண்டு கட்டங்கள் வலதுபுறம் நகரவும். (தேவையான சைகையைப் பயன்படுத்தவும்)
மாணவர் : சரி!பிறகு
ஆசிரியர் : கீழ்நோக்கி ஒரு கட்டம் நகருக.
மாணவர் : ஆம்! எனக்குப் பந்து கிடைத்துவிட்டது.
மாணவர் நகர்ந்து சென்றடைந்த கட்டத்தில் உள்ள பொருளை எடுத்துக் காட்ட வேண்டும். இதே போல் மற்றொரு மாணவரைக் கொண்டு அடுத்த பொருளுக்கு மீண்டும் விளையாட்டைத் தொடரலாம்.
செயல்பாடு
எனக்குப் படக்கதைகள் பிடிக்கும்.
வழிமுறைகளைப் பின்பற்றுதல்
1.
அலமாரிக்குச் சென்று உனக்கு விருப்பமான நூல் ஒன்றை எடு.
2.
உன் இருக்கைக்குச் செல்.
3.
நூலினைத் திற. படம் பார்த்து மகிழ்க,
4.
நூலினை மூடு-.
5.
நூலினை அலமாரியில் எடுத்த இடத்தில் வைக்கவும். யாரெல்லாம் சரியாகச் செய்தீர்களோ அவர்களுக்குப் பாராட்டுகள்.
ஆசிரியருக்கான குறிப்பு
மேற்கண்ட செயல்பாட்டைப் போன்று கை கழுவுதல், நீர் அருந்துதல், பென்சில் பெட்டியிலிருந்து பென்சில் எடுத்தல் போன்ற செயல்பாடுகளையும் வழிமுறைப்படி மாணவர்கள் செய்துபார்க்க வாய்ப்பளிக்கவும்.
(பள்ளிக்குச் செல்ல ஆயத்தமாதல், உணவு உண்ணுதல், கழிவறைப் பழக்கம் போன்ற செயல்பாடுகளையும் தனி நடிப்பு மூலம் ஒரு மாணவர் செய்து காண்பிக்க மற்றவர்கள் கூற வாய்ப்பளிக்கலாம்.)
முயன்று பார்
தேவாவின் வீடு எது? கண்டுபிடித்து வட்டமிடுக.
நேராகச் சென்று, இரண்டாவதாக வரும் இடது புறச் சாலையில் திரும்பு.
கற்றல்
இலக்கினை அடைய வழிகாட்டுவோம்
ஆசிரியருக்கான குறிப்பு
மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரிக்கவும். படத்தில் சென்றடைய வேண்டிய இலக்கினை ஒரு குழு தெரிவு செய்யவும்.
(எடுத்துக்காட்டு: நூலகம்) மற்றொரு குழு உள்ள இடத்திலிருந்து, முதல் குழு கூறிய இலக்கினை அடைய வழியைக் கூற வேண்டும். மேற்காணும் செயல்பாட்டிற்குரிய குறிப்புகளை மாணவர்களே உருவாக்குவதில் ஆசிரியர் ஏதுவாளராகச் செயல்படவும்.
செயல்பாடு
எனக்குப் பிடித்த பொம்மை.
தேவையான பொருள்கள்
பஞ்சு, ரப்பர் பட்டைகள் (Rubber
bands) பொட்டுகள்.
செய்முறை
1. படத்தில் கொடுக்கப்பட்டவாறு பஞ்சு ஒன்றினை எடுத்துக் கொள்க.
2.
பஞ்சின் நடுப்பகுதியில் ஒரு ரப்பர் பட்டையைப் பொருத்துக.
3. மேலும் இரண்டு ரப்பர் பட்டைகளைப் படத்தில் காட்டியுள்ளபடி,
பஞ்சின் மேல்பகுதியில் இரு ஓரங்களிலும் பொருத்தி, கரடி பொம்மையின் காதுகள் போல அமைக்க.
4. கரடி பொம்மையை மேலும் மெருகேற்ற,
படத்தில் காண்பது போல பொட்டுகளை வைத்து அலங்கரிக்க.
5. கண் புருவங்கள்,
மூக்கு போன்றவற்றையும் வரைந்து அழகான கரடி பொம்மையைத் தயார் செய்க.
விளையாட்டு
போக்குவரத்து விளக்குகள்
பின்வரும் வழிமுறைகளை மாணவர்களுக்குச் செய்துகாட்டிப் பயிற்சி அளிக்க வேண்டும். பின்பு குழுச் செயல்பாடாக மாணவர்களைச் செய்ய வைத்து வலுவூட்டலாம்.
1.
தலைக்கவசம் அணிந்து கொள்.
2.
வண்டியை ஓட்டத் தொடங்கு.
3.
சிவப்புக் குறியீடு - வண்டியை நிறுத்து,(
நில்)
4.
மஞ்சள் குறியீடு - வண்டியைச் செலுத்த ஆயத்தமாகு. (கவனி)
5.
பச்சைக் குறியீடு – செல்.
செயல்பாடு
வேடிக்கை நேரம்
❖ தரையில் அங்குமிங்குமாகச் சில பொருள்களை வைக்கவும். வகுப்பை இரு குழுக்களாகப் பிரிக்கவும். முதல் குழுவில் ஒரு மாணவரின் கண்களைக் கைக்குட்டை கொண்டு கட்டவும்.
❖ மற்றொரு குழு தரையில் உள்ள ஏதேனும் ஒரு பொருளைத் தேர்வு செய்ய வேண்டும்.
❖ முதல் குழுவினர் வழிமுறைகள் மட்டுமே கொடுத்து, மற்ற குழு குறிப்பிட்ட பொருளை எடுக்க உதவ வேண்டும்.
❖ ஆசிரியர் மேற்காணும் செயல்பாட்டிற்கு வழிகாட்டியாகச் செயல்பட வேண்டும்.