புவியியல் - கலைச்சொற்கள் - வளிமண்டலம் | 11th Geography : Chapter 6 : Atmosphere
கலைச்சொற்கள்
மிதத்தல் (Buoyant): காற்று அல்லது திரவத்தின் மீது மிதக்கக் கூடிய
பண்பு.
மோதுதல் (Collision): நகரும்பொழுது மோதிக் கொள்ளுதல்.
சமநிலை (Equilibrium): செயல்படும் விசைகள் சமமாக இருக்கும்பொழுது
மூலக்கூறுகள் சமநிலையை அடைதல்.
மலைச்சரிவு (Escarpment): புவிபரப்பின் அல்லது பீடபூமியின் நீளமான
செங்குத்து சரிவுள்ள விளிம்புப் பகுதி.
விரிவடைதல் (Expansion)
: அளவில்
விரிவடைதல் அல்லது பெரிதாகுதல்.
புனல்வடிவம் (Funnelling): அகலமான வாய்ப் பகுதியையும் குறுகலான
வெளிப்பகுதியையும் உடைய ஒரு பகுதியின் வழியே செல்லுதல்.
நீர் உறிஞ்சுதல் (Hygroscopic)
: காற்றில்
உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை.
உள்வரும் சூரியக் கதிர் (Insolation): குறிப்பிட்டப் பகுதியை அடையும் சூரியக்கதிர்.
வானிலையியல் (Meteorology)
: வானிலை
முன்னறிவிப்பைப் பற்றிய அறிவியலின் ஒரு பிரிவு.
மூலக்கூறுகள் (Molecules): அணுக்களின் தொகுப்பு.
உட்புகும்
(Permeable): திரவம் அல்லது வாயுக்களை உட்புக அனுமதித்தல்.
கீழிறங்குதல்
(Subsistence): உயரமான இடத்திலிருந்து தாழ்வான இடத்திற்கு வாயு
மூலக்கூறுகள் படிப்படியாக இறங்குதல்.
வெப்பப்
பகுதி (Torrid): மிக வெப்பமான மற்றும் வறண்ட நிலையில் உள்ள
பகுதி.
சுழல்
(Vortex): திரவம் அல்லது காற்று பெரிய அளவில் சுற்றுதல்.