தொழில்கள் - புவியியல் - கலைச்சொற்கள் | 12th Geography : Chapter 4 : Economic Activities

12 வது புவியியல் : அலகு 4 : தொழில்கள்

கலைச்சொற்கள்

புவியியல்:தொழில்கள்:கலைச்சொற்கள்

கலைச்சொற்கள்

1. மணல், கற்சுரங்கங்கள்: மணல் அல்லது கல் தோண்டி எடுப்பதற்கான மிகப்பெரிய குழிகள் (குவாரிகள்)

2. இறையாண்மை நாடு: குறிப்பிட்ட எல்லைக்குள், மக்கள் வசிக்கவும், சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ள அரசும், பிற இறையாண்மையுடைய நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தும் தன்மையுமுள்ள நிலப்பகுதியை குறிக்கும்.

3. அரக்கு: காடுகளில் உள்ள மரங்கள் மீது பூச்சிகளால் உமிழப்படும் பிசின்.

4. கடன்: கடனாக கொடுக்கப்படும் பணம் அல்லது அதற்குரிய தொகையை குறிக்கும்.

5.நெறிமுறை: இரு நாடுகளுக்கிடையேயான உடன்படிக்கையின் முதற்குறிப்பு

6. ஊட்டசத்தின்மை: உடலில் காணப்படும் சத்து பற்றாக்குறை

7.வறுமை: அளவுக்கதிகமான ஏழ்மைநிலை

8. மொத்த உள்நாட்டு உற்பத்தி: ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு புவியியல் எல்லை பரப்புக்குள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறுதி மதிப்பு மற்றும் சேவையை குறிக்கும்.

9. வாழ்க்கைத்தரம்: ஒரு தனிமனிதன் அல்லது ஒரு சமுதாயத்தின் செல்வம் மற்றும் பொருட்களின் உடைமையாகும் அளவு.

10. மொத்த தேசிய உற்பத்தி: ஒரு ஆண்டில் ஒரு நாட்டு மக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு.


இணையச் செயல்பாடு

 

தொழில்கள்

இச் செயல்பாடு மூலம் மாணவர்கள் இந்த உலகின் வளங்களைப் பற்றி தெரிந்து கொண்டு அவற்றை கொடுக்கப் பட்டுள்ள தலைப்புகளின் அடிப்படையில் வகைப் பிரிக்க உதவும்.

படிகள்

படி 1: URL அல்லது QR குறியீட்டினைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப்பக்கத்திற்கு செல்க. அங்கு பக்கம் ஒன்று திறக்கும். அதில் கீழே சென்று "FARM MANIA" என்பதை சொடுக்குக. விளம்பரம் வந்தால் அதை விட்டு விட

படி 2: அதை நாம் தொடும் போது ஒரு பக்கம் அநேக விருப்ப பட்டியலை காண்பிக்கும்.

படி 3: PLAY பொத்தானை தெரிவு செய்து அதிலுள்ள அறிவுரைகள் படி விளையாட ஆரம்பிக்க.

படி 4: கடைசியில் உங்களின் சொந்த பண்ணையை உருவாக்கி இருப்பீர்கள்.

உரலி

http://www.primarygames.com/arcade/simulation/farmmania/

*படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.


Tags : Economic Activities | Geography தொழில்கள் - புவியியல்.
12th Geography : Chapter 4 : Economic Activities : Glossary Economic Activities | Geography in Tamil : 12th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது புவியியல் : அலகு 4 : தொழில்கள் : கலைச்சொற்கள் - தொழில்கள் - புவியியல் : 12 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது புவியியல் : அலகு 4 : தொழில்கள்