தொழில்கள் - புவியியல் - கலைச்சொற்கள் | 12th Geography : Chapter 4 : Economic Activities
கலைச்சொற்கள்
1. மணல், கற்சுரங்கங்கள்: மணல் அல்லது கல் தோண்டி எடுப்பதற்கான மிகப்பெரிய குழிகள் (குவாரிகள்)
2. இறையாண்மை நாடு: குறிப்பிட்ட எல்லைக்குள், மக்கள் வசிக்கவும், சட்டம் இயற்றும் அதிகாரம் உள்ள அரசும், பிற இறையாண்மையுடைய நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தும் தன்மையுமுள்ள நிலப்பகுதியை குறிக்கும்.
3. அரக்கு: காடுகளில் உள்ள மரங்கள் மீது பூச்சிகளால் உமிழப்படும் பிசின்.
4. கடன்: கடனாக கொடுக்கப்படும் பணம் அல்லது அதற்குரிய தொகையை குறிக்கும்.
5.நெறிமுறை: இரு நாடுகளுக்கிடையேயான உடன்படிக்கையின் முதற்குறிப்பு
6. ஊட்டசத்தின்மை: உடலில் காணப்படும் சத்து பற்றாக்குறை
7.வறுமை: அளவுக்கதிகமான ஏழ்மைநிலை
8. மொத்த உள்நாட்டு உற்பத்தி: ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு புவியியல் எல்லை பரப்புக்குள் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் இறுதி மதிப்பு மற்றும் சேவையை குறிக்கும்.
9. வாழ்க்கைத்தரம்: ஒரு தனிமனிதன் அல்லது ஒரு சமுதாயத்தின் செல்வம் மற்றும் பொருட்களின் உடைமையாகும் அளவு.
10. மொத்த தேசிய உற்பத்தி: ஒரு ஆண்டில் ஒரு நாட்டு மக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பு.
இச் செயல்பாடு மூலம் மாணவர்கள் இந்த உலகின் வளங்களைப் பற்றி தெரிந்து கொண்டு அவற்றை கொடுக்கப் பட்டுள்ள தலைப்புகளின் அடிப்படையில் வகைப் பிரிக்க உதவும்.
படி 1: URL அல்லது QR குறியீட்டினைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப்பக்கத்திற்கு செல்க. அங்கு பக்கம் ஒன்று திறக்கும். அதில் கீழே சென்று "FARM MANIA" என்பதை சொடுக்குக. விளம்பரம் வந்தால் அதை விட்டு விட
படி 2: அதை நாம் தொடும் போது ஒரு பக்கம் அநேக விருப்ப பட்டியலை காண்பிக்கும்.
படி 3: PLAY பொத்தானை தெரிவு செய்து அதிலுள்ள அறிவுரைகள் படி விளையாட ஆரம்பிக்க.
படி 4: கடைசியில் உங்களின் சொந்த பண்ணையை உருவாக்கி இருப்பீர்கள்.
http://www.primarygames.com/arcade/simulation/farmmania/
*படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.