புவித் தகவலியல் - புவியியல் - கலைச்சொற்கள் | 12th Geography : Chapter 6 : Geoinformatics
கலைச்சொற்கள்
1. நுண்ணிய செயலி: கணினியின் மைய செயலியின் அனைத்து செயல்பாடுகளையும் கொண்டுள்ள ஒருங்கிணைந்த மின்கற்றை.
2. அலைவாங்கி: ரேடியோ சமிக்ஞையை வேறொரு சமிக்ஞையாக மாற்றுவது.
3. இயற்கூறுகள்: பாறைகளின் பொதுவான இயற்பண்புகள் சார்ந்த.
4. செயற்கை நுண்ணறிவு: மனித நுண்ணறிவைக் கொண்டு செயல்படும் வேலையை செய்யும் கணினி அமைப்பு.
5. எண்ணிலக்க முறையாக்கம்: உரை, படம் மற்றும் ஒலி போன்றவற்றை எண்ணிலக்கமாக மாற்றும் முறை.
6. நிலையொத்த சுற்றுப்பாதை: புவியின் நீள்வட்டப்பாதையில் வலம் வரும் வேறொரு பொருள் சார்ந்த.
7. ரேடார்: கப்பல், விமானம் போன்றவற்றை கண்காணிக்கும் அமைப்பு.
8. போட்டோகிராமேட்ரி:வான்வெளி புகைப்படத்தில் உள்ள பொருட்கள் மற்றும் நிலத்தோற்றங்களின் அளவுகளை மேற்கொள்ளும் ஒரு படிப்பாய்வு. 9. ஆட்டோமேஷன்: உற்பத்தி அல்லது பிற செயல்முறைகளில் செயல்படும் தானியக்கச் செயல்கள்
10. களைக் கொல்லி: தேவையற்ற களைகளை அழிக்கும் இராசாயன உரம்.
இந்த செயல்பாடு மாணவர்களுக்கு விண்வெளியில் எப்படி இருக்கும், செயற்கை கோள் எவ்வாறு வேலை செய்கிறது, அட்சரேகை என்றால் என்ன தீர்க்க ரேகை என்றால் என்ன போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது.
படி 1: URL அல்லது QR குறியீட்டினைப் பயன்படுத்தி இச்செயல்பாட்டிற்கான இணையப்பக்கத்திற்கு செல்க. அங்கு பக்கம் ஒன்று நான்கு விருப்பத் தேர்வுகளுடன் திறக்கும்.
படி 2: இந்த செயலியின் மூலம் நாம் உலகையே சுற்றி வரலாம்.
படி 3 நமக்கு விருப்பமான ஒன்றை தேர்வு செய்து அதில் கொடுக்கப் பட்டுள்ள வழிகாட்டல் படி செய்து பார்க்கவும்
படி 4 இதில் Radius search and Map search தெரிவுகள் மிக நன்றாக பணி செய்கின்றன.திற்கு மட்டுமே.
உரலி
https://play.google.com/store/apps/details?id=com.trusty.ty.satellite
*படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.