வளங்கள் | பருவம் 2 அலகு 1 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - மனித வளம் (Human Resources) | 6th Social Science : Geography : Term 2 Unit 1 : Resources

   Posted On :  04.07.2023 12:03 am

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 2 அலகு 1 : வளங்கள்

மனித வளம் (Human Resources)

இயற்கையிலிருந்து புதிய வளங்களை உருவாக்கும் தனிநபர் குழுக்கள் மனித வளம் என அழைக்கப்படுகிறது. மனிதன் ஒரு இயற்கை வளம். ஆனாலும் மனிதனை நாம் தனி ஒரு வளமாக பார்க்கின்றோம். மனிதனை ஒரு மதிப்புமிகு வளமாக பார்ப்பதற்குக் காரணம் அவனிடம் உள்ள கல்வி, உடல்நலம், அறிவு மற்றும் திறனாகும். (எ.கா) மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர்.

மனித வளம் (Human Resources)

இயற்கையிலிருந்து புதிய வளங்களை உருவாக்கும் தனிநபர் குழுக்கள் மனித வளம் என அழைக்கப்படுகிறது. மனிதன் ஒரு இயற்கை வளம். ஆனாலும் மனிதனை நாம் தனி ஒரு வளமாக பார்க்கின்றோம். மனிதனை ஒரு மதிப்புமிகு வளமாக பார்ப்பதற்குக் காரணம் அவனிடம் உள்ள கல்வி, உடல்நலம், அறிவு மற்றும் திறனாகும். (எ.கா) மருத்துவர், ஆசிரியர், அறிவியலாளர்.


முதல் நிலை மற்றும் இரண்டாம் நிலையில் கிடைக்கப்படும் பொருள்களைப் பகிர்வதற்கான போக்குவரத்து மற்றும் வணிக அமைப்பே மூன்றாம் நிலை செயல்பாடுகள் (Tertiary Activities) எனப்படும். (எ.கா) வங்கி, வணிகம் மற்றும் தகவல் தொடர்புத்துறை. இச்செயல்பாடுகளில் மனித வளம் பல்வேறு நிலைகளில் பயன்படுகிறது. ஒரு நாட்டின் மனித வளம் அந்நாட்டில் உள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் எண்ணிக்கை மற்றும் தரத்தைச் சார்ந்துள்ளது.


செயல்பாடு: 4

கீழ்காணும் படங்களில் சிறப்பு வாய்ந்த மனிதர்களையும் தொழில்சார்ந்த மனிதர்களையும் அடையாளம் காண்க.

 


வளங்களைப்பற்றி காந்தியடிகளின் சிந்தனை (Gand hian Thought on Resources)


“வளங்கள் மனிதனின் பேராசைக்கு அன்று, அவனது தேவைக்கு மட்டுமே “ என்று மகாத்மா காந்தி அவர்கள் கூறுகிறார். உலகில் வளங்கள் குறைவதற்கு மனித இனமே காரணம் எனவும் கூறுகிறார். ஏனென்றால்,

i. வளங்கள் மிகுதியாக எடுக்கப்படுகின்றன.

II. மனிதத் தேவைகளும் எல்லையை மீறுகின்றன.

ஆகவே, மனிதன் நினைத்தால் மட்டுமே வளங்கள் பாதுகாக்கப்படும்.

 

வளத்திட்டமிடுதல் / வளமேலாண்மை (Resources planning / Management)

வளத்திட்டமிடுதல் என்பது வளங்களை சரியாக பயன்படுத்தும் திறன் ஆகும். வளத்தினைத் திட்டமிடுதல் என்பது அவசியமான ஒன்றாகும். ஏனெனில்,

i. வளங்கள் மிகவும் குறைவாக உள்ளன. வளத்திட்டமிடுதல் தற்போது வளங்களைச் சரியாகப் பயன்படுத்தவும், வருங்காலத் தலைமுறைகளுக்குச் சேமித்து வைக்கவும் உதவிபுரிகிறது.

ii. வளங்கள் மிகக்குறைவாக இருப்பன மட்டுமன்றுஅவைபுவியின்மீதுஒழுங்கற்றப் பரவலுடன் காணப்படுகின்றன.

iii. வளங்களை அதிகச் சுரண்டலில் இருந்து தடுத்துப் பாதுகாக்க வளத்திட்டமிடுதல் அவசியமாகும்.

 

வளங்களைப் பாதுகாத்தல் (Conservation of resources)

வளத்தினைக் கவனமாகக் கையாளுதல் என்பது வளங்களைப் பாதுகாத்தல் எனப்படுகிறது. மக்கள் தொகையின் திடீர்ப் பெருக்கத்தினால் வளங்களின் பயன்பாடு அதிகரிக்கிறது. இதனால் வளங்கள் குறைந்து வரும் நிலையும் அதிகரிக்கிறது. இதனைக் கட்டுப்படுத்த அறிவுப்பூர்வமாக வளங்களைப் பயன்படுத்த வேண்டும்.

வருங்காலத் தலைமுறையினரின் தேவைகளைப் பாதிக்காத வண்ணம் வளர்ச்சி இருத்தல் வேண்டும். நிகழ்காலத் தேவைகளையும் பூர்த்தி செய்து வருங்காலத் தலைமுறையினருக்கும் போதுமான வளங்களை விட்டு வைத்து, சமநிலைத் தன்மையோடு ஏற்படும் வளர்ச்சியே (Sustainable Development) எனப்படும்.

நிலையான வளர்ச்சி நடைபெற கீழ்க்கண்டவைகளைச் செய்தல் அவசியமாகும்.

i. வளங்கள் குறைந்துகொண்டு வருவதற்கான காரணங்களை அறிதல்.

ii. வீணாக்குதலையும், அதிகப்படியான பயன்பாட்டினையும் தடுத்தல்.

iii. மறுபயன்பாடுள்ள வளங்களை மறுசுழற்சி செய்தல்

iV. மாசைக் கட்டுப்படுத்துதல்.

V. சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல்.

Vi. இயற்கைத் தாவரங்கள் மற்றும் விலங்குளைப் பாதுகாத்தல்.

vii. மாற்று வளங்களைப் பயன்படுத்துதல்.

வளங்களைப் பாதுகாக்க வேண்டுமெனில் மூன்று வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் (3RS). அவைகள், குறைத்தல் (Reduce), மறுபயன்பாடு (Reuse), மறுசுழற்சி செய்தல் (Recycle) ஆகும்.


Tags : Resources | Term 2 Unit 1 | Geography | 6th Social Science வளங்கள் | பருவம் 2 அலகு 1 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : Geography : Term 2 Unit 1 : Resources : Human Resource Resources | Term 2 Unit 1 | Geography | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 2 அலகு 1 : வளங்கள் : மனித வளம் (Human Resources) - வளங்கள் | பருவம் 2 அலகு 1 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 2 அலகு 1 : வளங்கள்