Home | 6 ஆம் வகுப்பு | 6வது சமூக அறிவியல் | மீள்பார்வை, கலைச்சொற்கள்

வளங்கள் | பருவம் 2 அலகு 1 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - மீள்பார்வை, கலைச்சொற்கள் | 6th Social Science : Geography : Term 2 Unit 1 : Resources

   Posted On :  28.08.2023 06:14 am

6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 2 அலகு 1 : வளங்கள்

மீள்பார்வை, கலைச்சொற்கள்

மனிதனின் தேவையைப் பூர்த்தி செய்பவைகள் வளம் ஆகும்.இயற்கையிலிருந்து பெறப்படும் அனைத்து வளங்களும் இயற்கை வளங்கள் ஆகும்.

நினைவில் நிறுத்துக.

• மனிதனின் தேவையைப் பூர்த்தி செய்பவைகள் வளம் ஆகும்.

• இயற்கையிலிருந்து பெறப்படும் அனைத்து வளங்களும் இயற்கை வளங்கள் ஆகும்.

• உயிருள்ள அனைத்து உயிரியல் வளங்களும் வளங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

• உயிரற்ற அனைத்து வளங்களும் உயிரற்ற வளங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

• இயற்கை வளங்களைச் சேகரித்தல் முதல்நிலைச் செயல்பாடு எனப்படுகிறது.

• தற்போது பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் கண்டுபிடிக்கப்பட்ட வளங்கள் எனப்படுகின்றன.

• தற்போது பயன்பாட்டிற்கு வராத வளங்கள் மறைந்திருக்கும் வளங்கள் எனப்படும்.

• வளத்தினைப் பயன்படுத்திய பிறகு, குறிப்பிட்டக் காலத்திற்குள் இயற்கைச் செயல் முறைகளால் புதுப்பித்துக் கொள்ளக் கூடிய அனைத்து வளங்களும் புதுப்பிக்கக்கூடிய வளங்கள் எனப்படுகின்றன.

• குறைவான இருப்பு உள்ள அனைத்து வளங்களும் புதுப்பிக்க இயலா வளங்கள் ஆகும்.

• அனைத்து இடங்களிலும் பரவலாகக் காணப்படும் வளங்கள் உலகளாவிய வளங்கள் எனப்படும்.

• குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் வளங்கள் உள்ளூர் வளங்கள் எனப்படும்.

• மனிதனின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இயற்கை வளங்களைச் செயல்முறைகளினால் மாற்றுருவாக்கம் செய்வது மனிதனால் உருவாக்கப்பட் வளங்கள் எனப்படும்.

• மனிதர்களும் வளங்களே.

• உற்பத்திக்கும் விநியோகத்திற்கும் தேவைப்படும் அனைத்துச் சேவைகளும் மூன்றாம் நிலை செயல்பாடுகள் எனப்படும்.

• வளங்களை மிகக் கவனமாகக் கையாளுதலே வளங்களைப் பாதுகாத்தல் ஆகும்.

• நிகழ்காலத்தில் உள்ள மக்கள் தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்து வருங்காலத் தலைமுறையினரையும் கவனத்தில் கொண்டு சுற்றுச்சூழல் பாதிக்கா வண்ணம் ஏற்படும் வளர்ச்சியே நிலையான வளர்ச்சி ஆகும்.

 

கலைச்சொற்கள்

1. உற்பத்தி - தயாரித்தல்

2. சூரிய ஒளித்தகடு - சூரிய ஆற்றலை உறிஞ்சும் தகடு

3. PV செல்கள் - ஒளி மின்னழுத்தக் கலம்

4. உள்ளூர் வளங்கள் - பரவலாகக் காணப்படாத வளங்கள்

5. உலகளாவிய வளங்கள் -  பரவலாகக் காணப்படும் வளங்கள்

6. திறந்தவெளிப் பெருங்கடல் - எந்த நாட்டிற்கும் |சொந்தமில்லாதப் பெருங்கடற்பத்தி

7. நிலையான - பேணத்தகுந்த


ஆதாரம்

1 Human and economic geography - Goh Cheng Leong


இணையத்தள இணைப்பு

1. https://www.acciona.com/sustainable development 


இணையச் செயல்பாடு

வளங்கள்

இச்செயல்பாட்டின் மூலம் புதிப்பிக்கக் கூடிய ஆற்றல் மூலங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.


படி-1: கீழ்க்காணும் உரலி / விரைவுக் குறியீட்டைப் பயன்படுத்தி இணையப் பக்கத்திற்குச் செல்க. திரையில் தோன்றும் தெரிவுகளில் Events, Activities and Games என்பதைத் தேர்வு செய்க.

படி-2: எண்ணற்ற விளையாட்டுகள் தோன்றும். அவற்றில் Power up என்பதைத் தேர்வு செய்து, Adobe flash player என்பதை அனு மதிக்க.

படி-3: காற்று மற்றும் சூரியனால் கிடைக்கப்பெறும் ஆற்றலைப் பல்வேறு படிநிலைகளில் விளையாடிப் புரிந்து கொள்க.

படி-4: மேலும் வெவ்வேறு ஆற்றல் மூலங்கள் குறித்த வினாடி வினாக்களுக்கு விடையளிக்க.


உரலி:

https://energy.techno-science.ca/en/index.php

*படங்கள் அடையாளத்திற்கு மட்டுமே.

Tags : Resources | Term 2 Unit 1 | Geography | 6th Social Science வளங்கள் | பருவம் 2 அலகு 1 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
6th Social Science : Geography : Term 2 Unit 1 : Resources : Recap, Glossary Resources | Term 2 Unit 1 | Geography | 6th Social Science in Tamil : 6th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 2 அலகு 1 : வளங்கள் : மீள்பார்வை, கலைச்சொற்கள் - வளங்கள் | பருவம் 2 அலகு 1 | புவியியல் | 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 6 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : புவியியல் : பருவம் 2 அலகு 1 : வளங்கள்