Home | 11 ஆம் வகுப்பு | 11வது கணினி அறிவியல் | மென்பொருள் மற்றும் வகைகள் ஒர் அறிமுகம்
   Posted On :  19.09.2022 11:45 pm

11வது கணினி அறிவியல் : அலகு 4 : இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள்

மென்பொருள் மற்றும் வகைகள் ஒர் அறிமுகம்

மென்பொருள் என்பது கணிப்பொறியில் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்கான செயல்படும் கட்டளைகளின் தொகுப்பாகும்.

இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள்


கற்றலின் நோக்கங்கள்


• இயக்க அமைப்பின் கருத்துரு மற்றும் அதன் வகைகளைப் பற்றி அறிந்துகொள்ளுதல். 

• இயக்க அமைப்பின் அடிப்படை அறிவு மற்றும் அதன் செயல்பாடுகளை அறிந்து கொள்ளுதல்.


மென்பொருள் ஒர் அறிமுகம்


மென்பொருள் என்பது கணிப்பொறியில் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்கான செயல்படும் கட்டளைகளின் தொகுப்பாகும். அடிப்படை வன்பொருள்களுடன் செயல்பட்டு இது தேவையான வெளியீடுகளைத் தருகின்றது.


மென்பொருள் வகைகள்

மென்பொருள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது :


1) பயன்பாட்டு மென்பொருள் (Application Management),


2) அமைப்பு மென்பொருள் (System Software)


பயன்பாட்டு மென்பொருள் 


பயன்பாட்டு மென்பொருள் ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்வதற்கு தேவையான  நிரல்களின் தொகுப்பாகும். எடுத்துக்காட்டாக, எம். எஸ்,  வேர்டு (MS-word) என்பது உரை ஆவணங்களை  (text document) உருவாக்க பயன்படும் ஒரு பயன்பாட்டு மென்பொருள் (application software) ஆகும். VLC பிளேயர் என்பது ஒரு பிரபலமான ஒலி, ஒளிக் காட்சிகள் மற்றும் பல கோப்புகளைத் திரையிடப் பயன்படும் ஒரு பயன்பாட்டு மென்பொருள் ஆகும்.


அமைப்பு மென்பொருள்:


அமைப்பு மென்பொருள் என்பது வன்பொருள்கள் மற்றும் பயன்பாட்டு மென்பொருள்களை இயக்குவதற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு கணிப்பொறி நிரலாகும். இயக்க அமைப்பு (Operating System) மற்றும் நிரல் பெயர்ப்பி (Language Processor) போன்றவை அமைப்பு மென்பொருளுக்கு எடுத்துக்காட்டாகும்.


11th Computer Science : Chapter 4 : Theoretical concepts of Operating System : Introduction and Types of Software in Tamil : 11th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 11வது கணினி அறிவியல் : அலகு 4 : இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள் : மென்பொருள் மற்றும் வகைகள் ஒர் அறிமுகம் - : 11 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
11வது கணினி அறிவியல் : அலகு 4 : இயக்க அமைப்பின் கோட்பாட்டு கருத்துக்கள்