வடிவியல் | பருவம்-1 அலகு 1 | 2வது கணக்கு - முப்பரிமாண உருவங்களின் அறிமுகம் | 2nd Maths : Term 1 Unit 1 : Geometry
முப்பரிமாண உருவங்களின் அறிமுகம்
விலங்குகள், தமது சிங்க ராஜாவுக்கு அரண்மனையைக் கட்டுகின்றன. அதற்காக ஒவ்வொரு விலங்கும் ஒவ்வொரு பொருளைக் கொண்டு வந்தன. அவை கொண்டு வந்த பொருள்களை உற்றுநோக்குக.
கலைச் சொற்கள் : கனச்சதுரம், கனச்செவ்வகம், உருளை, கூம்பு, கோளம்
மேலே படத்தில் உள்ளவாறு விலங்குகளையும், அவை கொண்டு வந்த பொருள்களையும் பொருத்துக.
'அரசரின் அரண்மனை' என்ற கதையை
ஆசிரியர் சொல்லுவதன் மூலம் கனச்சதுரம், கனச்செவ்வகம்,
உருளை, கூம்பு மற்றும் கோளம் ஆகிய கணிதக்
கலைச் சொற்களை விளக்க வேண்டும்.
பின்வரும் பொருள்கள் கனச்சதுர வடிவமானவை.
பின்வரும்
பொருள்கள் கனச்செவ்வக வடிவமானவை.
1. கனச்சதுரம் மற்றும் கனச்செவ்வகத்தை
அடையாளம் கண்டு கனச்சதுரத்திற்கு 'அ'
எனவும் கனச்செவ்வகத்திற்கு 'ஆ' எனவும் கொடுக்கப்பட்டுள்ள கட்டத்தில்
எழுதுக.
2. கனச்சதுரத்திற்குச் சிவப்பு வண்ணமும் கனச்செவ்வகத்திற்குப்
பச்சை வண்ணமும் தீட்டி மகிழ்க.
பின்வரும்
பொருள்கள் உருளை வடிவமானவை.
பின்வரும்
பொருள்கள் கூம்பு வடிவமானவை.
பின்வரும்
பொருள்கள் கோள வடிவமானவை.
உருளை, கூம்பு மற்றும் கோள வடிவப்பொருள்களை அடையாளம் கண்டு உருளை வடிவிற்கு '1' உம் கூம்பு வடிவிற்கு '2' உம் கோள வடிவிற்கு '3' உம் இட்டுக் கீழே உள்ள கட்டங்களை நிரப்புக.
எடுத்துக்காட்டில் உள்ளது போல் பொருள்களை அவற்றிற்குப் பொருத்தமான வடிவத்துடனும் பெயருடனும் பொருத்துக.
செய்து பார்
கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின் பெயர்கள் கட்டங்களில் நிரப்பப்பட்டுள்ளன. பொருள்களின் வடிவங்களை உற்று நோக்கி, பொருத்தமான கட்டங்களில் வடிவங்களின் பெயர்களை நிரப்புக.
உங்களுடைய பொம்மை நண்பர்கள் அவர்களின் வீட்டைச் சென்றடைய உதவுங்கள்.
பொம்மைக் குழந்தைகள் அவர்களுடைய வீட்டிற்குச் செல்லும் பாதையைக்
கண்டுபிடித்துக் கோடிட, மாணவர்களை ஊக்கப்படுத்துங்கள்.
அவர்கள் போகும் பாதையில் அவர்களை ஒத்த வடிவுடைய பொருள்களைச் சேகரிக்க வேண்டும்.
எடுத்துக்காட்டு: கனச்சதுரம், உருளை, கோளம்,
கூம்பு மற்றும் கனச்செவ்வகம்.