பருவம் 1 இயல் 4 | 3 ஆம் வகுப்பு தமிழ் - கல்யாணமாம் கல்யாணம்! | 3rd Tamil : Term 1 Chapter 4 : Kalyanamam Kalyanam
4. கல்யாணமாம் கல்யாணம்!
பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம்
பூலோகமெல்லாம் கொண்டாட்டமாம்
யானை மேலே ஊர்கோலமாம்
ஒட்டகச்சிவிங்கி நாட்டியமாம்
கொர்கொர் குரங்கு பின்பாட்டாம்
தடபுடலான சாப்பாடாம்
தாலிகட்டும் வேளையிலே
மாப்பிள்ளை பூனையக் காணோமாம்
சந்தடி புந்தடி செய்யாமல்
சமையல்கட்டில் நுழைந்தாராம்
வாங்கிவச்சப் பாலையெல்லாம்
ஒரே மூச்சில் குடித்தாராம்
பார்த்துவிட்ட பெண்ணின் தாயும்
பலத்த சத்தம் போட்டாராம்
திருட்டு மாப்பிள்ளைக்கு என் பெண்ணை
திருமணம் செய்ய முடியாது
வேண்டாம் இந்த சம்பந்தம்
வெட்கக்கேடு போய் வாரோம்
- நாட்டுப்புறப் பாடல்
சிந்திக்கலாமா?
இப்பாடலில் வரும் பூனைக்கும் பூனைக்கும் பதிலாக யானைக்கும் பூனைக்கும் கல்யாணம் ஏற்பாடு செய்திருந்தால் எவ்வாறு இருக்கும்? வகுப்பறையில் கலந்துரையாடுக.