நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் | அறிவியல் - நினைவில் கொள்க | 9th Science : Matter Around Us
நினைவில் கொள்க
❖ வேதி இயைபைப் பொறுத்து பருப்பொருள்கள் தனிமங்கள், சேர்மங்கள் மற்றும் கலவைகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
❖ ஒரே ஒரு வகையான துகள்களைக் கொண்டுள்ளமையால் தனிமங்களும் சேர்மங்களும் தூய பொருட்களாகவும்,
அதேநிலையில் கலவைகள் ஒன்றுக்கு மேற்பட்ட வகையான துகள்களைக் கொண்டுள்ளமையால் தூய்மையற்ற பொருட்களாகவும் கருதப்படுகின்றன.
❖ ஓர் உலோகக்கலவையானது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்களின் ஒருபடித்தான கரைசல் ஆகும்.
❖ பலபடித்தான கலவையில் பகுதிப் பொருட்களானவை முற்றிலும் அல்லது சீராக கலக்கப்படவில்லை மற்றும் இது ஒன்றிற்கு மேற்பட்ட நிலைமைகளைக் கொண்டுள்ளது.
❖ துகள்களின் உருவ அளவின் அடிப்படையில் பலபடித்தான கலவைகளை கூழ்மக் கரைசல்களாகவும், தொங்கல்களாகவும் வகைப்படுத்தலாம்.
A-Z சொல்லடைவு
தனிமம் : உட்கருவில் சம எண்ணிக்கையிலான புரோட்டான்களைக்
கொண்ட அணுக்களை உள்ளடக்கிய பொருள்.
சேர்மம் : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தனிமங்களின் அணுக்கள்
அல்லது அயனிகளை ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் உள்ளடக்கிய, தூய்மையான மற்றும் ஒருபடித்தான பொருள்.
கலவை : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை இயைபாகக்
கொண்ட பொருள்.
கரைசல் : இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்களை உள்ளடக்கிய
ஒருபடித்தான கலவை.
கூழ்மம் : 1–100 nm அளவுள்ள நுண்ணிய துகள்கள், ஒரு தொடர்ச்சியான ஊடகத்தில் வடிகட்ட இயாலாத அல்லது
எளிதில் படியாத வகையில் விரவியிருக்கும் ஒரு அமைப்பு.
தொங்கல் : கரைப்பான் போன்ற ஒரு ஊடகத்திலிருந்து மெதுவாக
படிய வல்ல கரைபொருள் போன்ற துகள்களை உள்ளடக்கிய பலபடித்தான கலவை.
பால்மம் : இரண்டு நிலைமைகளும் திரவங்களால் ஆன ஒரு கூழ்மம்.
உறிஞ்சுதல் : அணுக்கள் அல்லது மூலக்கூறுகள் அல்லது அயனிகள்
ஒரு நிலைமையின் (திரவம், வாயு, திண்மம்) ஊடே முழுவதும் ஊடுருவிப் பரவும் நிகழ்வு.
பரப்புக் கவர்தல் : ஒரு கரைந்த திண்மம், வாயு அல்லது திரவத்தின் அணுக்கள், மூலக்கூறுகள் அல்லது அயனிகள் மற்றொரு நிலைமையின்
மேற்பரப்பின் மீது ஒட்டிக்கொள்ளும் நிகழ்வு.
மையவிலக்கம் : மையவிலக்கு விசையைச் செலுத்தி துகள்களை கீழே படியச்செய்யும் முறை.