தகவல் செயலாக்கம் | மூன்றாம் பருவம் அலகு 7 | 3 ஆம் வகுப்பு கணக்கு - மனக் கணக்கு | 3rd Maths : Term 3 Unit 7 : Information Processing

   Posted On :  28.06.2022 04:50 pm

3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 7 : தகவல் செயலாக்கம்

மனக் கணக்கு

ஒற்றை இலக்க எண்கள் மற்றும் இரட்டை இலக்க எண்களைக் கூட்டுவதையும் கழிப்பதையும் மனக் கணக்காகச் செய்தல் :
மனக் கணக்கு

ஒற்றை இலக்கு எண்கள் மற்றும் இரட்டை இலக்க எண்களைக் கூட்டுவதையும், கழிப்பதையும் மனக் கணக்காகச் செய்தல் : 

1. ஒரு மரம் நடுவிழாவில் 6 தென்னங்கன்றுகள் மற்றும் 5 வேப்பங்கன்றுகள் நடப்பட்டன எனில், அவற்றின் மொத்த எண்ணிக்கை என்ன? 

தீர்வு:

தென்னங்கன்றுகளின் எண்ணிக்கை = 6

வேப்பங்கன்றுகளின் எண்ணிக்கை =  5

மொத்த கன்றுகளின் எண்ணிக்கை =  11


2. மரத்திலிருந்து 5 இளநீர்களில் 3 இளநீர்கள் பறிக்கப்பட்டன எனில் எத்தனை இளநீர்கள் மீதமிருக்கும்? 

தீர்வு:

மொத்த இளநீர்களின் எண்ணிக்கை = 5

பறிக்கப்பட்ட இளநீர்களின் எண்ணிக்கை = 3

மீதமுள்ள இளநீர்களின் எண்ணிக்கை = 2

 


3. ஞாயிற்றுக்கிழமையன்று 46 ஆண்களும், 27 பெண்களும் ஒரு பூங்காவிற்குச் சென்றனர். இரு குழுவின் கூட்டு எண்ணிக்கையை எழுதுக. 

தீர்வு:

பூங்காவில் சென்ற ஆண்களின் எண்ணிக்கை = 46

பூங்காவில் சென்ற பெண்களின் எண்ணிக்கை = 27

மொத்தம் = 73

4. ஒரு பெட்டியில் 70 எழுதுகோல்கள் உள்ளன. அவற்றுள் 54 எழுதுகோல்கள் மாணவர்களுக்குக் கொடுக்கப்படுமாயின் எத்தனை எழுதுகோல்கள் மீதமிருக்கும்? 

தீர்வு:

பெட்டியிலுள்ள எழுதுகோல்களின் எண்ணிக்கை  = 70 

மாணவர்களுக்கு கொடுத்த எழுதுகோல்களின் எண்ணிக்கை = 54

மீதமுள்ள எழுதுகோல்களின் எண்ணிக்கை = 16


5. 7 பேருக்கு 70 பந்துகள் கொடுக்கப்படுமாயின், ஒவ்வொருவருக்கும் எத்தனை பந்துகள் கொடுக்கப்பட்டிருக்கும்?

தீர்வு:

மொத்த பந்துகளின் எண்ணிக்கை = 70

மொத்த நபர்களின் எண்ணிக்கை = 7 

ஒருவருக்கு மட்டும் கொடுத்த பந்துகளின் எண்ணிக்கை = 70 ÷ 7

= 10


6. ஒரு வரிசையில் 8 புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்ததால் 48 புத்தகங்களை எத்தனை வரிசையில் அடுக்கலாம்? 

தீர்வு:

மொத்த புத்தகங்களின் எண்ணிக்கை = 48

ஒரு வரிசையில் அடுக்கி வைக்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை = 8

மொத்த வரிசைகளின் எண்ணிக்கை = 48 ÷ 8

6


7. ஒரு பெட்டிக்குள் 10 எழுதுகோல்கள் அடங்குமெனில் 100 எழுதுகோல்களுக்கு எத்தனை பெட்டிகள் தேவைப்படும்? 

தீர்வு:

மொத்த எழுதுகோல்களின் எண்ணிக்கை = 100 

ஒரு பெட்டியில் உள்ள எழுதுகோல்களின் எண்ணிக்கை = 10

பெட்டிகளின் எண்ணிக்கை = 100 ÷ 10

= 10 பெட்டிகள்


Tags : Information Processing | Term 3 Chapter 7 | 3rd Maths தகவல் செயலாக்கம் | மூன்றாம் பருவம் அலகு 7 | 3 ஆம் வகுப்பு கணக்கு.
3rd Maths : Term 3 Unit 7 : Information Processing : Mental Arithmetic Information Processing | Term 3 Chapter 7 | 3rd Maths in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 7 : தகவல் செயலாக்கம் : மனக் கணக்கு - தகவல் செயலாக்கம் | மூன்றாம் பருவம் அலகு 7 | 3 ஆம் வகுப்பு கணக்கு : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு கணக்கு : மூன்றாம் பருவம் அலகு 7 : தகவல் செயலாக்கம்