Home | 4 ஆம் வகுப்பு | 4வது கணிதம் | பணம்: அறிமுகம்

பணம் | பருவம் 3 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு - பணம்: அறிமுகம் | 4th Maths : Term 3 Unit 5 : Money

4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம்

பணம்: அறிமுகம்

ஒன்றின் விலை கூடுதல், மொத்த மதிப்பு, மீதம் இவற்றிற்கான கணித செயல்பாடுகளைப் பயன்படுத்துதல்.

அறிமுகம்


ஒன்றின் விலை கூடுதல், மொத்த மதிப்பு, மீதம் இவற்றிற்கான கணித செயல்பாடுகளைப் பயன்படுத்துதல்.,

பன்னீர் செல்வமும், அவருடைய மூன்று நண்பர்களும் கடற்கரைக்குச் சென்றனர். அவர்கள் விளையாடி ஓய்வெடுத்தனர். கடைக்காரரிடம் ₹ 20 ஐக் கொடுத்து 4 பாக்கெட்டுகள் தானியங்கள் வாங்கினர். பன்னீருக்கு ஒரு பாக்கெட்டின் விலை தெரியாததனால், தன்னுடைய நண்பனைக் கேட்டார்

அவனுடைய நண்பன் விலையை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று அவனுக்கு விளக்கினான்.

4 பாக்கெட் தானியங்களின் விலை = ₹ 20

1 பாக்கெட் தானியத்தின் விலை = ₹ 20 ÷ 4

1 பாக்கெட் தானியத்தின் விலை = ₹ 5

எனவே, ஒரு பாக்கெட் தானியத்தின் விலை = ₹ 5

பன்னீரும், அவருடைய நண்பர்களும், தானியங்கள் சாப்பிட்டுவிட்டு தேநீர் கடைக்குச் சென்றனர். ஒரு கோப்பை தேநீரின் விலை ₹ 5 ஆக இருந்தது.

பன்னீரும் அவரது நண்பர்களும் தேநீர் அருந்திவிட்டு கடைக்காரரிடம் ₹ 20 ஐக் கொடுத்தனர்.

பன்னீருக்கு தேநீரின் மொத்த விலை தெரியாது. அவன் தன்னுடைய நண்பனிடம் தனக்கு விளக்குமாறு கேட்டான்.

ஒரு கோப்பை தேநீரின் விலை = ₹ 5

நான்கு கோப்பை தேநீரின் விலை = ₹5 × 4

எனவே, நான்கு கோப்பை தேநீரின் விலை ₹ 20 ஆகும்.


முயற்சி செய்வோம்

மொத்த விலைக் கொடுக்கப்பட்டிருக்கும் பொழுது ஒவ்வொரு பொருளின் விலையைக் காண்க. ஒன்று தங்களுக்காகச் செய்யப்பட்டுள்ளது.


பின்வருவனவற்றை நிரப்புக.:


பன்னீரும் அவருடைய நண்பர்களும் தானியத்திற்காக ₹ 20, தேநீருக்காக ₹ 20, குதிரை சவாரிக்காக ₹ 40 செலவழித்தனர். மகிழ்ச்சியாக வீட்டிற்குச் சென்றனர். பின்னர், பன்னீர் வீட்டிற்குச் சென்று ₹ 100 இல் மீதமுள்ள பணத்தைக் கணக்கிட்டான்

பன்னீருக்கு உதவி செய்வோம்,


செயல்பாடு

1. மாணவர்களை மாதிரிச் சந்தை அமைக்கச் செய்து பொருட்களின் விலைப்பட்டியலை காட்சிப்படுத்த செய்து அவற்றின் கூடுதல், கழித்தலைக் கற்கச் செய்தல்

அன்பு சந்தைக்கு சென்று 1 கி.கி வெங்காயம் ரூ.101.50-க்கும், 1 கி.கி உருளைக்கிழங்கு ரூ.56.50-க்கும், 1 கி.கி பீன்ஸ் ரூ 40.60-க்கும் வாங்கினான் எனில் அவன் செலவழித்த தொகை எவ்வளவு

தீர்வு:


2. ஒரு மாணவனை வியாபாரி போல் நடிக்கச் செய்து மற்ற மாணவர்களை வாடிக்கையாளர்கள் போல் நடிக்கச் செய்து, பணத்தாளின் மதிப்புகளை காகிதத்தில் எழுதி பொருட்களின் விலையைக் கணக்கிட்டு கூடுதல் மற்றும் கழித்தலைக் கற்கச் செய்தல்.

ஆல்வின் மளிகைக் கடைக்குச் சென்று 1 கி.கி சுரைக்காய் ரூ.10.50-க்கும், 1 கி.கி பூசணிக்காய் ரூ.20.50-க்கும் வாங்கினான். அவன் கடைக்காரரிடம் ரூ.50.00 கொடுத்தான் எனில் மீதி எவ்வளவு பணம் கடைக்காரர் திரும்பிக் கொடுத்தார்

தீர்வு:



எடுத்துக்காட்டு 1

நந்தகுமார் 10லி பெட்ரோலுக்கானத் தொகையாக 750 ஐச் செவழித்தார் எனில், 1 லி பெட்ரோலின் விலை என்ன?

நந்தகுமார் பெட்ரோலுக்காகச் செலவழித்த தொகை = ₹ 750

1 லி பெட்ரோலுக்கான விலை = ₹750 ÷ 10

                            = ₹ 75


எடுத்துக்காட்டு 2

மதுமிதா 8 பாக்கெட் இனிப்புகள் வாங்கினார். ஒரு பாக்கெட்டின் விலை ₹ 65 எனில், 8 பாக்கெட்டின் விலை எவ்வளவு?

ஒரு பாக்கெட்டின் விலை  = ₹ 65

8 பாக்கெட்டின் விலை         = ₹65 × 8

                                                        = ₹ 520

எனவே, 8 பாக்கெட்டுகளின் விலை ₹ 520 ஆகும்.


எடுத்துக்காட்டு 3

செல்வம் காய்கறிகடைக்குச் சென்று வெங்காயம் ₹ 10.50 இக்கும், வெள்ளரிக்காய்  ₹8.75 வாங்கினான். கடைக்காரரிடம் ₹ 20 கொடுத்தான் எனில், அவன் பெற்ற மீதித் தொகை எவ்வளவு?


Tags : Money | Term 3 Chapter 5 | 4th Maths பணம் | பருவம் 3 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு.
4th Maths : Term 3 Unit 5 : Money : Money: Introduction Money | Term 3 Chapter 5 | 4th Maths in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம் : பணம்: அறிமுகம் - பணம் | பருவம் 3 அலகு 5 | 4 ஆம் வகுப்பு கணக்கு : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 5 : பணம்