பருவம் 3 அலகு 3 | 1 ஆம் வகுப்பு கணக்கு - பணம் | 1st Maths : Term 3 Unit 3 : Money

   Posted On :  31.08.2023 06:55 am

1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : பணம்

பணம்

ஆசிரியருக்கான குறிப்பு : மாணவர்களை மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தை உற்றுநோக்கச் செய்க. ஆசிரியர் கீழ்க்காணும் வினாக்களைக் கேட்டுப் பணம் என்ற பாடக் கருத்தை அறிமுகம் செய்க

அலகு 3

பணம்

 

கலைச்சொற்கள்

நாணயம், பணத்தாள்

 

பயணம் செய்வோம்


ஆசிரியருக்கான குறிப்பு

மாணவர்களை மேலே கொடுக்கப்பட்டுள்ள படத்தை உற்றுநோக்கச் செய்க. ஆசிரியர் கீழ்க்காணும் வினாக்களைக் கேட்டுப் பணம் என்ற பாடக் கருத்தை அறிமுகம் செய்க

1. எழுதுபொருள் அங்காடியில் நீ காணும் பொருள்களைக் கூறுக.

2. கடையில் உனக்குப்பிடித்த பொருள் எது ?

3. கடையில் உனக்குப் பிடித்த பொருளை வாங்குவதற்கு, கடைக்காரருக்கு நீ எதைக் கொடுக்க வேண்டும்?

 

கற்றல்

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள நாணயங்கள் மற்றும் பணத்தாள்கள்


ஒரே மதிப்பைக் கொண்ட நாணயத்திற்கும் பணத்தாளிற்கும் மதிப்பில் எந்த வேறுபாடும் இல்லை.

கூடுதலாக அறிவோம்

இந்தியப் பணமதிப்பில் ரூபாயைக் குறிக்க '' என்ற குறியீடு பயன்படுத்தப்படுகிறது.


செய்து பார்

பொருள்களின் விலைக்கேற்ற நாணயம் அல்லது பணத்தாளினை () செய்க.


 

செயல்பாடு

நாணயத்தை அச்செடுத்தல்

கீழ்க்காணும் மதிப்பிற்கேற்ற நாணயங்களை அச்செடுத்து, அச்சில் காணும் உருவங்களைப் பற்றிக் கலந்துரையாடுக.

தேவையான பொருள்கள் : நாணயங்கள், பென்சில், அழிப்பான், காகிதம் முதலானவை.


 

கூடுதலாக அறிவோம்

சேமிக்கப் பழகு!

வாழ்வதற்காக!எதிர்காலத்திற்காகசேவைக்காக!



கற்றல்

பல்வேறு வழிகளில் 10


 

விளையாட்டு

மாற்று.. மாற்று.. பரிமாற்று

தேவையான பொருள்கள்

நாணய மாதிரிகள், பணத்தாள் மாதிரிகள், பணமதிப்புடன் கூடிய மின்னட்டைகள்.

செய்முறை:

மாணவர்களை இரண்டு குழுக்களாகப் பிரிக்கவும்.

ஒரு குழுவிற்கு மேற்கூறிய மின்னட்டைகள் வழங்கவும். மற்ற குழுவிற்குப் பணத்தாள் மாதிரிகள் மற்றும் நாணய மாதிரிகள் வழங்கவும்.

முதல் குழு ஏதேனும் ஒரு மின்னட்டையைக் காட்ட வேண்டும்.

மற்றொரு குழு மின்னட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பணமதிப்பிற்கேற்ற நாணயங்களையோ அல்லது பணத்தாள் மாதிரிகளையோ அல்லது இரண்டையும் சேர்த்தோ காண்பிக்க வேண்டும்.

மாணவர்களுக்குப் பணமதிப்பை வலுவூட்டும் வகையில் ஆசிரியர் செயல்பட வேண்டும்.

குழுக்கள் தங்களிடம் உள்ள பொருள்களையும், மின்னட்டைகளையும் பரிமாற்றம் செய்து, இவ்விளையாட்டினை மீண்டும் தொடரலாம்.

 

செய்து பார்

பொருள்களுக்குரிய சரியான பணமதிப்பைப் பொருத்துக.


 

மகிழ்ச்சி நேரம்

பொருள்களை வாங்குவதற்குத் தேவையான பணமதிப்புகளை() செய்க.

Tags : Term 3 Chapter 3 | 1st Maths பருவம் 3 அலகு 3 | 1 ஆம் வகுப்பு கணக்கு.
1st Maths : Term 3 Unit 3 : Money : Money Term 3 Chapter 3 | 1st Maths in Tamil : 1st Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : பணம் : பணம் - பருவம் 3 அலகு 3 | 1 ஆம் வகுப்பு கணக்கு : 1 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 3 அலகு 3 : பணம்