Home | 4 ஆம் வகுப்பு | 4வது தமிழ் | முளைப்பாரி - பாடல்

பருவம் 1 இயல் 4 | 4 ஆம் வகுப்பு தமிழ் - முளைப்பாரி - பாடல் | 4th Tamil : Term 1 Chapter 4 : Mulai paari paadal

   Posted On :  25.07.2023 11:03 pm

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 4 : முளைப்பாரி - பாடல்

முளைப்பாரி - பாடல்

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 4 : முளைப்பாரி - பாடல்

4. முளைப்பாரி பாடல்




 

தன்னா னன்னே னானே தன

தானே னன்னே னானே

ஒண்ணாந்தான் நாளையிலே

ஓசந்த செவ்வா கிழமையிலே

ஓலைக்கொட்டான் இரண்டெடுத்து

ஓடும் பிள்ளை தொண்டலிட்டு - தன்னா

வாங்கியாந்த முத்துகளை

வாளியிலே ஊற வச்சி

கம்மந்தட்டை இரண்டெடுத்து

கணுக்கணுவா முறிச்சி வச்சி

சோளத்தட்டை இரண்டெடுத்து

சுளை சுளையா முறிச்சி வச்சி

மாட்டாந்தொழு தெறந்து

மாட்டெருவு அள்ளி வந்து - தன்னா

ஆட்டாந்தொழு தெறந்து

ஆட்டெருவு அள்ளி வந்து

கடுகுலயுஞ் சிறுபயிறு

காராமணிப் பயிறு

மிளகுளயுஞ் சிறுபயிறு

முத்தான மணிப்பயிறு

மொள போட்ட ஒண்ணா நாளு

ஓரெலையாம் முளைப்பாரி

ஓரலைக்குங் காப்புக்கட்டி

ஒரு பானை பொங்கலிட்டு

முளைப்பாரி போடுங்கம்மா -----(2)

தன்னா னன்னே போடுங்கம்மா --------{2)

தையலரே ஒரு குலவை - தன்னா

-    நாட்டுப்புறப் பாடல்

பாடல்களைச் சொந்த நடையில் தாம் விரும்பும் வகையில் கருத்துகளை இணைத்துப்பாடுதல்


Tags : Term 1 Chapter 4 | 4th Tamil பருவம் 1 இயல் 4 | 4 ஆம் வகுப்பு தமிழ்.
4th Tamil : Term 1 Chapter 4 : Mulai paari paadal : Mulai paari paadal Term 1 Chapter 4 | 4th Tamil in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 4 : முளைப்பாரி - பாடல் : முளைப்பாரி - பாடல் - பருவம் 1 இயல் 4 | 4 ஆம் வகுப்பு தமிழ் : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 4 : முளைப்பாரி - பாடல்