பருவம் 1 இயல் 6 | 4 ஆம் வகுப்பு தமிழ் - முயல் அரசன் | 4th Tamil : Term 1 Chapter 6 : Muyal arasan

   Posted On :  25.07.2023 11:36 pm

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 6 : முயல் அரசன்

முயல் அரசன்

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 6 : முயல் அரசன்

6. முயல் அரசன்

 

ஒரு விவசாயியின் தோட்டத்தில் விளைந்திருந்த காய்களையும் கனிகளையும், கிழங்குகளையும் வயிறாரத் தின்று வாழ்ந்து கொண்டிருந்தது ஒரு முயல், ஆனாலும், அதன் மனத்தில் ஒரு கவலை, அதற்குக் காரணம் அது வாழும் அந்தக் காட்டைப் பல்லாண்டு காலமாக ஆட்சி செய்து வரும் ஒரு புலி ஆகும். புலிக்குக் கிடைக்கும் மதிப்பு தனக்கும் கிடைக்கவேண்டும் என்று முயல் விரும்பியது. புலியைவிடத் தானே சிறந்தவன் என்று புலிக்கும் காட்டில் உள்ள பிற விலங்குகளுக்கும் மெய்ப்பிக்க வேண்டுமென முயலுக்கு ஆசை தோன்றியது. உடனே, முயல் சிந்தித்துச் செயல்படத் தொடங்கியது. இனி கதையைப் படிப்போம்.


நல்ல செழிப்பான தோட்டம்... சுவையான கேரட்.. ஆஹா.... என்ன இனிமை! சுவைக்க சுவைக்க நாவில் நீர் ஊறுகிறதே!

இந்தக் காட்டில் உள்ள புலி நம் முன்னோரைத் தன் பசிக்கு இரையாக்கியது போல் என்றாவது ஒரு நாள் நம்மையும் கொன்று தின்று, விடுமோ..!

இந்தக் கவலையிலேயே வயிறார உண்ட பிறகும் சற்று நேரம் உறங்கி மகிழ முடியாமல் போனதே..

ஒரு முயற்சி செய்து பார்ப்போம். அதில் தோற்றால் வீர மரணமடைவோம். வாழ்நாளெல்லாம் அந்தப் புலிக்குப் பயந்து கொண்டே இருக்க முடியாது.

முயலே உனக்கு எவ்வளவு தைரியம்... இவ்வளவு காலம் என்னைக் கண்டாலே ஓட்டம் எடுப்பாய் இப்பொழுது கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து இருக்கிறாயா? உன்னை..


ஓடினேனா! நானா!" உன்னைக் கண்டா...? உனக்குச் செய்தியே தெரியாதா? உனக்கு எங்கே தெரியப்போகிறது...இங்கு கூட்டம் நடந்த போது நீ தான் அப்பாவி விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்தாயே...

எல்லா விலங்குகளும் கூட்டத்திற்கு வந்திருந்தனவா?

சில விலங்குகளைத் தவிர எல்லா விலங்குகளும் வந்திருந்தன.

கூட்டத்தில் என்ன தீர்மானம் எடுக்கப்பட்டது?

நீ இந்தக் காட்டின் அரசனாக இனிமேலும் நீடிக்கக் கூடாது என்று எல்லா விலங்குகளும் ஒரே மனதாகத் தீர்மானம் நிறைவேற்றின

நான் அரசனாக நீடிக்கக் கூடாதா?

அப்படியானால் வேறு யார் அரசனாக இருப்பது? .

இந்தக் காட்டிலேயே பயங்கரமான மூர்க்கமான விலங்காகிய என்னைத் தான் எல்லா விலங்குகளும் புதிய அரசனாகத் தேர்த்தெடுத்தன

வேடிக்கைப் பேச்சு பேசுகிறாய்.. பலமற்ற சிறிய மென்மையான நீ இந்தக் காட்டுக்கு அரசனா? உன்னை இப்போதே...??

*உன் முதுகில் என்னை ஏற்றிக்கொண்டு போ. இக்காட்டு விலங்குகள் என்னைப் பார்த்து அஞ்சுவதை உனக்கு மெய்ப்பித்துக் காட்டுகிறேன்


ம்..ம்..ம்.. நட...

இந்த முயல் எப்படிப் புலியின் மேல் அமர்ந்து வருகிறது!

எல்லா விலங்குகளும் பயப்படுகின்றனவே..! முயல் கொடிய விலங்காகத்தான் இருக்குமோ!

முயல் அரசே! 'நான் உங்களைத் தவறாகப் பேசியிருந்தால் மன்னித்து விட்டு விடுங்கள்.

இப்பொழுது இந்தக் காட்டுக்கு அரசன் யார்?

நீங்கள் தாம்!

உரக்கச் சொல்

தாங்கள் தாம் இந்தக் காட்டுக்கு அரசன்

உன்னை மன்னித்து விடுகிறேன். நீ இந்தக் காட்டிலேயே இருக்கக்கூடாது. எங்காவது ஓடிப்போய்விடு!,

'ஐயோ! என்னை விட்டுவிடுங்கள் நான் போய் விடுகிறேன்..!

இப்போதெல்லாம் முயல் வயிறு நிரம்பச் சாப்பிட்டு நிம்மதியாக, சுகமாகப் பகல் வேளைகளில் ஒரு குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டிருக்கிறது.

Tags : Term 1 Chapter 6 | 4th Tamil பருவம் 1 இயல் 6 | 4 ஆம் வகுப்பு தமிழ்.
4th Tamil : Term 1 Chapter 6 : Muyal arasan : Muyal arasan Term 1 Chapter 6 | 4th Tamil in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 6 : முயல் அரசன் : முயல் அரசன் - பருவம் 1 இயல் 6 | 4 ஆம் வகுப்பு தமிழ் : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 6 : முயல் அரசன்