Home | 4 ஆம் வகுப்பு | 4வது தமிழ் | நீதிநெறி விளக்கம்

பருவம் 3 இயல் 7 | 4 ஆம் வகுப்பு தமிழ் - நீதிநெறி விளக்கம் | 4th Tamil : Term 3 Chapter 7 : Neethineri vilakkam

   Posted On :  02.08.2023 11:24 pm

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 7 : நீதிநெறி விளக்கம்

நீதிநெறி விளக்கம்

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 7 : நீதிநெறி விளக்கம்

7. நீதிநெறி விளக்கம்


 

அவையஞ்சி மெய்விதிர்ப்பார் கல்வியும் கல்லார்

அவையஞ்சா ஆகுலச் சொல்லும் - நவையஞ்சி

ஈத்துணாச் செல்வமும் நல்கூர்ந்தார் இன்னலமும்

பூத்தலின் பூவாமை நன்று

- குமரகுருபரர்


பாடல் பொருள்

பலர் நிறைந்த அவையிலே, உடல் நடுங்கித் தம் கருத்தை எடுத்துக்கூற முடியாமல் தடுமாறுபவர் பெற்ற கல்வியும், அவையினர்முன் கல்வியறிவில்லாதவர் பேசும் பொருளற்ற ஆரவாரச் சொல்லும், செய்யத் தக்கவற்றைச் செய்யாமையால் ஏற்படும் குற்றத்துக்கு அஞ்சிப் பிறருக்குக் கொடுத்து எஞ்சியவற்றை உண்ணாதவரின் செல்வமும், வறுமையுற்றவரிடத்தே உள்ள ஈகை போன்ற இனிய பண்புகளும் உண்டாதலைவிட உண்டாகாமல் இருப்பதே நல்லது.


சொல்பொருள்

மெய் உடல், விதிர்ப்பார் - நடுங்குவார், கல்லார் - படிக்காதவர், ஆகுலச்சொல் பொருளற்ற ஆரவாரச் சொல், நவை - குற்றம், அஞ்சி - அச்சமுற்று, நல்கூர்ந்தார் வறுமையுற்றார், பூத்தல் - உண்டாதல்

நூல் குறிப்பு

நீதிநெறிகளை விளக்குவதற்குக் கருவியாக இருப்பதால் இந்நூல், நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது. திருக்குறளில் கூறப்பெற்றுள்ள அறவுரைகள் பலவற்றையும் தொகுத்துச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இந்நூல் விளக்குகிறது. இந்நூலை இயற்றியவர் குமரகுருபரர்.

Tags : Term 3 Chapter 7 | 4th Tamil பருவம் 3 இயல் 7 | 4 ஆம் வகுப்பு தமிழ்.
4th Tamil : Term 3 Chapter 7 : Neethineri vilakkam : Neethineri vilakkam Term 3 Chapter 7 | 4th Tamil in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 7 : நீதிநெறி விளக்கம் : நீதிநெறி விளக்கம் - பருவம் 3 இயல் 7 | 4 ஆம் வகுப்பு தமிழ் : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 7 : நீதிநெறி விளக்கம்