Home | 4 ஆம் வகுப்பு | 4வது தமிழ் | பனிமலைப் பயணம்

பருவம் 2 இயல் 5 | 4 ஆம் வகுப்பு தமிழ் - பனிமலைப் பயணம் | 4th Tamil : Term 2 Chapter 5 : Pani malaip payanam

   Posted On :  27.07.2023 06:45 am

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 5 : பனிமலைப் பயணம்

பனிமலைப் பயணம்

4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 5 : பனிமலைப் பயணம்

5. பனிமலைப் பயணம்


 


ஓர் அடர்ந்த காட்டில் நரி, மான், ஓநாய் வரிக்குதிரை ஆகியன நண்பர்களாய் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன.

அருகிலிருந்த பனிமலைக் காட்டில் சிறுத்தை ஒன்று நண்பர்களுடன் வாழ்ந்தது.

வாருங்கள், சிறுத்தையாரே! உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறோம்.

மிக்க மகிழ்ச்சி, நண்பர்களே! அடுத்தவாரம் பனிமலைக் காட்டில் திருவிழா. நீங்கள் அனைவரும் அவசியம் வந்து கலந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் அவசியம் வருகிறோம்.

நன்றி, நண்பர்களே!

அனைவரும் ஒரு படகில் புறப்பட்டனர்.

ஏலேலோ ஐலசா

திடீரென்று ஆற்றில் நீரின் வேகம் அதிகரித்தது படகு. ஒரு பக்கமாய்ச் சாய்கிறது.

ஐயோ! படகு சாய்கிறதே! ஆ! என்னவாயிற்று?

அவர்களை ஒரு முதலை பார்த்தது

டேய் பசங்களா எங்கே போறீங்க?


என் முதுகில் ஏறிக் கொள்ளுங்கள் உங்களைக் கரையில் விடுகிறேன்

 “ஐயா, முதலையாரே... உங்கள் எண்ணம் எனக்குத் தெரியும் முதுகில் ஏற்றி எங்களைச் சாப்பிட நினைக்கிறீர்கள்.

"ஆகா! நல்ல விருந்து. இன்றைக்கு ஒரு பிடி பிடிச்சிட வேண்டியதுதான்.

கவனமாகக் கேளுங்கள். இப்படித்தான் ஒரு முதலை கடந்த வாரம், எங்களைப் போன்ற விலங்குகளை அடித்துச் சாப்பிட்டது.

அப்புறம் என்னவாயிற்று?

பிறகென்ன செரிமானம் ஆகாமல் இறந்தே போய்விட்டது. அதற்குத் தயார் என்றால் நீங்கள் தாராளமாக எங்களைத் சாப்பிடுங்கள்

'உங்களைத் தின்றால் நான் இறந்து விடுவேனா?

ம்... அதைப்பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போது பசிக்கிறது. இதோ சாப்பிடப் போகிறேன்.

முதலையாரே .... இன்னுமொரு பிரச்சனையும் உள்ளது

என்ன அது. சீக்கிரம் சொல்

வழியில் பாம்பு கடித்தால் எங்களுக்கு விஷம் ஏறாமல் இருக்க நாங்கள் விஷ முறிவுச் செடிகளைத் தின்று வந்திருக்கிறோம்.

அதனால் எங்களை யார் கடித்தாலும் அல்லது நாங்கள் யாரைக் கடித்தாலும் அவர்கள் இறப்பது உறுதி.


இதோ, இந்த மீனைக் கடிக்கிறேன். ஆ! அது இறந்து விட்டது பார்த்தீர்களா?

ஐயோ, ஆளை விடுங்க நான் போய் விடுகிறேன்.

அப்படி ஓடு

"நரியாரே உங்கள் தந்திரத்தால் எங்களைக் காப்பாற்றினீர்.

ஆற்றில் நீரின் வேகம் குறைந்ததால் பனிமலைப் பயணம்! தொடர்ந்தது

ஏலேலோ ஐலசா!

ஏலேலோ ஐலசா!

"வாருங்கள் நண்பர்களே! பனிமலைத் திருவிழாவிற்த வந்தற்கு நன்றி!

"நரியின் புத்திக் கூர்மையைப் பாராட்டி அனைத்து விலங்குகளும் விருந்துண்டு மகிழ்ந்தன.

Tags : Term 2 Chapter 5 | 4th Tamil பருவம் 2 இயல் 5 | 4 ஆம் வகுப்பு தமிழ்.
4th Tamil : Term 2 Chapter 5 : Pani malaip payanam : Pani malaip payanam Term 2 Chapter 5 | 4th Tamil in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 5 : பனிமலைப் பயணம் : பனிமலைப் பயணம் - பருவம் 2 இயல் 5 | 4 ஆம் வகுப்பு தமிழ் : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 2 இயல் 5 : பனிமலைப் பயணம்