அமைப்புகள் | பருவம்-1 அலகு 3 | 2வது கணக்கு - உடலசைவுகளுடன் கூடிய ஒலி அமைப்புகள் | 2nd Maths : Term 1 Unit 3 : Patterns
உடலசைவுகளுடன்
கூடிய ஒலி அமைப்புகள்
உற்று
நோக்கிக் கலந்துரையாடு :
1. மேலே உள்ள படத்தில் நீங்கள் காண்பது என்ன? விடை: பெண்கள் வட்டத்தில் நடனமாடுகிறார்கள்
2. இம்மாதிரியான நடனம் எந்தத் தருணங்களில் நடைபெறும்? விடை: கோவில் திருவிழா
3. எந்த ஒலி கும்மியாட்டத்திற்கு அடிப்படையாக அமைகிறது?
விடை: டப் டப் டப்
கும்மி மற்றும் கோலாட்டப் பாடலைச் செய்கையுடன் பாடிக் காண்பித்து
அவற்றிலுள்ள அமைப்புகளைக் குழந்தைகள் அறிய ஆசிரியர் உதவி செய்யலாம்.
பூமி - வானம் விளையாட்டு
கீழே
கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளின் படி பூமி - வானம் விளையாட்டை விளையாடுக.
ஆசிரியர்
பூமி எனக் கூறினால் மாணவர்கள் தங்கள் கைகளைக் கீழ்ப்பக்கமாகப் படத்தில் உள்ளவாறு
தட்டுதல் வேண்டும்.
ஆசிரியர்
வானம் எனக் கூறினால் மாணவர்கள் படத்தில் உள்ளவாறு மேல் நோக்கிக் கைகளைத் தட்டுதல்
வேண்டும்.
உடலசைவுடன்
ஒலி அமைப்பை விளையாடி மகிழ்வோம்.
ஆட்டம் ஆட்டம் ஆட்டம்
கொடுக்கப்பட்டப்
படத்திலுள்ள அமைப்பினை உற்று நோக்குக. பொருள்களைக் கொண்டு உடலசைவுடன் கூடிய ஒலி அமைப்புகளை
உருவாக்குக.
வேறுபட்ட வரிசைகளில் மாணவர்கள் அமைப்புகளை உருவாக்க ஆசிரியர்
உதவலாம். அவர்களுக்கு 1, 2, 3, 4 எனக்
கூறி உடலசைவுடன் கூடிய ஒலி அமைப்புகளை உருவாக்க வழிகாட்டலாம்.
கூடுதலாக அறிவோம்
கும்மி, கோலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம்,
பரதம் உள்ளிட்ட நடன வகைகளில் உடலசைவுடன் கூடிய ஒலி அமைப்புகளே இடம்
பெறுகின்றன.