Home | 1 ஆம் வகுப்பு | 1வது கணிதம் | ஒலி அமைப்புகள்

அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 1 ஆம் வகுப்பு கணக்கு - ஒலி அமைப்புகள் | 1st Maths : Term 1 Unit 3 : Patterns

1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள்

ஒலி அமைப்புகள்

ஆசிரியருக்கான குறிப்பு ஒலி எழுப்பியவாறே பாடலைப் பாடவும். மீண்டும் ஆசிரியர் பாடும்பொழுது கைதட்டு, விரல்சொடுக்கு, காலால்தட்டு, மேசையில் தட்டு போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அவற்றிற்குரிய ஒலிகளை எழுப்பிப் பாடவும். இத்தகைய செயல் ஒலி அமைப்பினை மெருகேற்றும்.

அலகு 3

அமைப்புகள்

 

ஒலி அமைப்புகள்

 

கலைச்சொற்கள்

அமைப்பு

ஒலி

வண்ணம்

 

பயணம் செய்வோம்

பள்ளி செல்லும் வழியில் ...

மதி பள்ளிக்குச் செல்கிறாள். அவள் செல்லும் வழியில் பல ஒலிகளைக் கேட்கிறாள். அந்த ஒலிகளில் உள்ள அமைப்புகளைக் கேட்டு மகிழ்கிறாள். வாருங்கள் நாமும் அவளுடன் சேர்ந்து பயணித்து மகிழ்வோம்.


ஆசிரியருக்கான குறிப்பு

மேற்காணும் சூழலில் ஏற்படக்கூடிய ஒலிகளை வகுப்பறையில் ஒலிக்கச் செய்து நடித்துக் காண்பித்தல்.

அன்றாட வாழ்வியல் சூழ்நிலைகளில் கேட்டு மகிழ்ந்த மற்ற ஒலிகளையும் ஒலிக்க மாணவர்களை ஊக்கப்படுத்துதல். எடுத்துக்காட்டு: பறவைகள், விலங்குகள், போக்குவரத்துச் சாதனங்கள் போன்றவற்றின் ஒலிகள்.

 

நான் மகிழ்ச்சியாய் உள்ளேன்.

 

கற்றல்


கைதட்டு, கைதட்டு, கைதட்டு

வீட்டில் நான் மகிழ்ச்சியாய் உள்ளேன்;

எனவே, கைதட்டு, கைதட்டு, கைதட்டு.


விரல்சொடுக்கு, விரல்சொடுக்கு, விரல்சொடுக்கு

பள்ளியில் நான் மகிழ்ச்சியாய் உள்ளேன்;

எனவே, விரல்சொடுக்கு, விரல்சொடுக்கு, விரல்சொடுக்கு.


காலால் தட்டு, காலால் தட்டு, காலால் தட்டு

வகுப்பில் நான் மகிழ்ச்சியாய் உள்ளேன்;

எனவே, காலால் தட்டு, காலால் தட்டு, காலால் தட்டு.


மேசையில் தட்டு, மேசையில் தட்டு, மேசையில் தட்டு

எங்கும் நான் மகிழ்ச்சியாய் உள்ளேன்;

எனவே, மேசையில் தட்டு, மேசையில் தட்டு, மேசையில் தட்டு.

ஆசிரியருக்கான குறிப்பு

ஒலி எழுப்பியவாறே பாடலைப் பாடவும். மீண்டும் ஆசிரியர் பாடும்பொழுது கைதட்டு, விரல்சொடுக்கு, காலால்தட்டு, மேசையில் தட்டு போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக அவற்றிற்குரிய ஒலிகளை எழுப்பிப் பாடவும். இத்தகைய செயல் ஒலி அமைப்பினை மெருகேற்றும்.

செய்து பார்

கைதட்டி மகிழ்வோம்


கைதட்டி ஒலி எழுப்புவதில், கீழ்காணும் வரையறுத்த ஒலி அமைப்பினை ஏற்படுத்த ஆசிரியர் முனையலாம்.

1 முறை கைதட்டு - 1 முறை கைதட்டு - 1 முறை கைதட்டு,...

2 முறை கைதட்டு - 2 முறை கைதட்டு2 முறை கைதட்டு,...

1 முறை கைதட்டு - 1 முறை கைதட்டு – 3 முறை கைதட்டு,...

3 முறை கைதட்டு - 3 முறை கைதட்டு,1 முறை கைதட்டு,...

1 முறை கைதட்டு, - 1 முறை கைதட்டு,.. –

முயன்று பார்


மியாவ்வும், லொள்-லொள்ளும் நண்பர்கள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவை சந்தித்துக்கொள்கின்றன.

மியாவ்வும் லொள்-லொள்ளும் எவ்வாறு பேசிக்கொள்ளும் என்பதை நினைத்துச் செய்து பார்க்கவும்.

செயல்பாடு

செய்து மகிழவும்


நோக்கம்: ஒலி அமைப்புகளை உருவாக்குதல்

தேவையான பொருட்கள்: பென்சில், கரண்டி, அளவுகோல், அழிப்பான், குவளை

செய்முறை: மேற்காணும் பொருட்களை மேசையில் தட்டுவதால் எழும்பும் ஒலி அமைப்புகளைக் கேட்டு மகிழ்க.

கீழ்க்கண்ட அமைப்புகளையும் பின்பற்றிச் செய்து பார். மேலும், சில அமைப்புகளை உருவாக்கிப் பார்.


ஆகா! எங்கும் ஒலி அமைப்புகள் உள்ளன. எங்கெல்லாம் ஒலி அமைப்புகளைக் கேட்க முடிகிறது? பகிரவும்.


Tags : Patterns | Term 1 Chapter 3 | 1st Maths அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 1 ஆம் வகுப்பு கணக்கு.
1st Maths : Term 1 Unit 3 : Patterns : Patterns in sounds Patterns | Term 1 Chapter 3 | 1st Maths in Tamil : 1st Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள் : ஒலி அமைப்புகள் - அமைப்புகள் | பருவம் 1 அலகு 3 | 1 ஆம் வகுப்பு கணக்கு : 1 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
1 ஆம் வகுப்பு கணக்கு : பருவம் 1 அலகு 3 : அமைப்புகள்