அமைப்புகள் | பருவம் 2 அலகு 3 | 5 ஆம் வகுப்பு கணக்கு - கோணங்களின் வகைகளைக் கொண்டு வடிவங்களின் அமைப்புகளை உருவாக்குதல் | 5th Maths : Term 2 Unit 3 : Patterns
கோணங்களின் எண்ணிக்கை மற்றும் வகைகளைக் கொண்டு வடிவங்களின் அமைப்புகளை உருவாக்குதல்.
கோணங்களின் வகைகளை நினைவு கூர்வோம்.
i)
பின்வரும் வடிவங்களின் முனைகளில் உண்டான கோணங்களை உற்றுநோக்குக
இது ஒரு சமபக்க முக்கோணம் ஆகும்.
இதில் 3 முனைகளில் 3 கோணங்கள் உருவாகியிருப்பதை நாம் காணலாம்.
3 கோணங்களும் சமம் மேலும் அவை அனைத்தும் 60° ஆகும்.
அதனைப் பின்வருமாறு எடுத்துக் கூறலாம்.
சமபக்க முக்கோணத்தைக் கொண்டு ஒழுங்கு அறுங்கோணத்தின் கோணங்களை கண்டறிதல்.
ஓர் ஒழுங்கு அறுங்கோணத்தின் கோணங்களை நாம் சமபக்க முக்கோணத்தின் உதவியுடன் கண்டறியலாம். ஒரு ஒழுங்கு அறுங்கோணத்தில் சமபக்க முக்கோணத்தை படத்தில் உள்ளவாறு அமைக்க.
60° + 60° + 60° + 60° + 60° + 60° = 360°
ஓர் ஒழுங்கு அறுங்கோணத்தின் மையத்தில் அமையும் கோணம் 360° ஆகும்.
ஒழுங்கு அறுங்கோணத்தின் மையக்கோணமும் வட்டத்தின் கோணமும் 360° ஆகும்.
ஒழுங்கு அறுங்கோணத்தின் ஒவ்வொரு உச்சியில் உள்ள கோணம் 120° ஆகும்.
ஒரு சதுரத்தின் கோணத்தைக் காணுதல்
ஒரு வட்டத்தின் கோணம் 360° ஆகும்.
ஒரு வட்டத்தை பயன்படுத்தி சதுரத்தின் கோணத்தை காண்போம்.
360° ÷ 4 = 90°
மேலே உள்ள படத்தில் காண்பித்திருப்பதுபோல் 4 சதுரங்களை வைக்கவும்.
மையத்தில் உருவாகியிருக்கும் கோணம் ஒரு வட்டமாகும். வட்டத்தின் கோணம் 360° ஆகும்.
இப்போது சதுரத்தின் கோணம், 360° ÷ 4 = 90° ஆகும்.