Home | 12 ஆம் வகுப்பு | 12வது கணினி அறிவியல் | நினைவில் கொள்க - பிரச்சனை தீர்க்கும் நுட்பங்கள் : செயற்கூறு

கணினி அறிவியல் - நினைவில் கொள்க - பிரச்சனை தீர்க்கும் நுட்பங்கள் : செயற்கூறு | 12th Computer Science : Chapter 1 : Problem Solving Techniques : Function

   Posted On :  15.08.2022 04:41 pm

12 வது கணினி அறிவியல் : அலகு 1 : பிரச்சனை தீர்க்கும் நுட்பங்கள் : செயற்கூறு

நினைவில் கொள்க - பிரச்சனை தீர்க்கும் நுட்பங்கள் : செயற்கூறு

நெறிமுறைகள் நிரலாக்க மொழியின் கூற்றுகளைப் பயன்படுத்தி வெளிப்படுத்தப்படுகின்றன.

நினைவில் கொள்க

• நெறிமுறைகள் நிரலாக்க மொழியின் கூற்றுகளைப் பயன்படுத்தி வெளிப்படுத்தப்படுகின்றன.

• ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்வதற்காக மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படும் குறிமுறையின் சிறிய பகுதியே துணை நிரலாக்கமாகும்.

• செயற்கூறு என்பது குறிமுறையின் ஒரு அலகு ஆகும். இது பெரும்பாலும் ஒரு பெரிய குறிமுறை கட்டமைப்பில் வரையறுக்கப்படும்.

• செயற்கூறானது பல வகை உள்ளீடுகளைக் கொண்டு செயல்பட்டு நிலையான வெளியீட்டைத் தருகிறது.

• வரையறைகள் தனித்தன்மையான தொடரியல் தொகுதிகளைக் கொண்டதாகும்.

• அளபுருக்கள் என்பது செயற்கூறு வரையறையில் உள்ள மாறிகள் ஆகும். செயலுருபுக்கள் என்பது செயற்கூறு வரையறைக்கு அனுப்பப்படும் மதிப்புகள் ஆகும்.

• தரவு வகைக்கு குறிப்பு எழுதும் போது, செயற்கூறு வரையறையில் () அடைப்புக்குறிகள் அவசியமானதாகும்.

• ஒரு பொருள் செய்யக்கூடிய செயல்பாடுகளின் தொகுப்பு இடைமுகம் ஆகும். இது நடவடிக்கையை வரையறுக்கிறது. ஆனால், உண்மையில் அவற்றை செய்யக்கூடியது இல்லை.

• செயல்படுத்துதல் என்பது இடைமுகத்தில் வரையறுக்கப்பட்டுள்ள கட்டளைகளை நிறைவேற்றுகிறது.

• ஒரே மாதிரியான அதே அளபுருக்களை அனுப்பும் போது, சரியான விடையைத் தரும் செயற்கூறு pure செயற்கூறு எனப்படும்.

• செயற்கூறுக்கு அளபுருக்களை அனுப்பாத போதும், செயற்கூறின் உள்ளே உள்ள மாறியானது பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இந்த வகைச் செயற்கூறு impure செயற்கூறு எனப்படும்.

Tags : Computer Science கணினி அறிவியல்.
12th Computer Science : Chapter 1 : Problem Solving Techniques : Function : Points to remember - Problem Solving Techniques : Function Computer Science in Tamil : 12th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 12 வது கணினி அறிவியல் : அலகு 1 : பிரச்சனை தீர்க்கும் நுட்பங்கள் : செயற்கூறு : நினைவில் கொள்க - பிரச்சனை தீர்க்கும் நுட்பங்கள் : செயற்கூறு - கணினி அறிவியல் : 12 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
12 வது கணினி அறிவியல் : அலகு 1 : பிரச்சனை தீர்க்கும் நுட்பங்கள் : செயற்கூறு