Home | 5 ஆம் வகுப்பு | 5வது தமிழ் | உரைநடை : புதுவை வளர்த்த தமிழ்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 3 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் - உரைநடை : புதுவை வளர்த்த தமிழ்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 5th Tamil : Term 3 Chapter 3 : Manitham, allumai

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மனிதம், ஆளுமை

உரைநடை : புதுவை வளர்த்த தமிழ்: கேள்விகள் மற்றும் பதில்கள்

5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மனிதம், ஆளுமை : உரைநடை : புதுவை வளர்த்த தமிழ்: கேள்விகள் மற்றும் பதில்கள்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள் | தமிழ்நாடு பள்ளி சமச்சீர் புத்தகங்கள்

மதிப்பீடு

படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!

 

அ. சரியான சொல்லைத் தெரிவு செய்து எழுதுக.

1. 'குயில்பாட்டு' நூலை எழுதியவர் யார்

அ) பாரதியார்

ஆ) பாரதிதாசன்

இ) வாணிதாசன்

ஈ) புதுவை சிவம்

[விடை : அ) பாரதியார்]

 

2. 'தமிழுக்கு அமுதென்று பேர்' எனப் பாடியவர்

அ) பாரதிதாசன்

ஆ) வாணிதாசன்

இ) கண்ண தாசன்

ஈ) பிரபஞ்சன்

[விடை : அ) பாரதிதாசன்]

 

3. "பாரதிநாள் இன்றடா, பாட்டிசைத்து ஆடடா' எனப் பாடியவர்

அ) பாரதிதாசன்

ஆ) வாணிதாசன்

இ) கண்ண தாசன்

ஈ) திருமுருகன்

[விடை : ஆ) வாணிதாசன்]

 

4. பாட்டிசைத்து - இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது

அ) பாட்டு + இசைத்து

ஆ) பாடல் + இசைத்து

இ) பா + இசைத்து

ஈ) பாட + இசைத்து

[விடை : அ) பாட்டு + இசைத்து]

 

5. மூன்று + தமிழ் - இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது

அ) மூன்றுதமிழ்

ஆ) முத்துத்தமிழ்

இ) முதுதமிழ்

ஈ) முத்தமிழ்

[விடை : ஈ) முத்தமிழ்]

 

ஆ. பொருத்துக

1. பாரதிதாசன் கொடி முல்லை

2. தமிழ் ஒளி பாஞ்சாலி சபதம்

3. பாரதியார் பாவலர் பண்ணை

4. வாணிதாசன் மாதவி காவியம்

5. திருமுருகன் இருண்ட வீடு

விடை

1. பாரதிதாசன் இருண்ட வீடு

2. தமிழ் ஒளி மாதவி காவியம்

3. பாரதியார் பாஞ்சாலி சபதம்

4. வாணிதாசன் கொடி முல்லை

5. திருமுருகன் பாவலர் பண்ணை

 

இ. வினாக்களுக்கு விடையளிக்க,

1. பாரதியார் படைத்த முப்பெருங் காவியங்கள் யாவை?

விடை

பாஞ்சாலி சபதம்

குயில் பாட்டு

கண்ணன் பாட்டு.

 

2. பாரதிதாசன் - பெயர்க் காரணம் தருக.

விடை

பாரதிதாசன், பாரதியார் மீது அன்பும், பாசமும், பற்றும் உடையவர். அதனால்தான் கனகசுப்புரத்தினம் என்ற தம் பெயரைப் பாரதிதாசன் என்று மாற்றியமைத்துக் கொண்டார்.

 

3. பிரபஞ்சனுக்குச் சிறப்பைச் சேர்த்த நூல் எது?

விடை

பிரபஞ்சனுக்குச் சிறப்பைச் சேர்த்த நூல் சாகித்திய அகாதெமி விருது பெற்ற வானம் வசப்படும் என்ற நூல் ஆகும்.

 

4. பாவேந்தர் விருதைப் பெற்றவர்கள் யாவர்?

விடை

பாவேந்தர் விருதைப் பெற்றவர்கள் ;

வாணிதாசன்

புதுவை சிவம்.

 

5. தமிழ்ஒளியின் படைப்புகளை எழுதுக.

விடை

வீராயி, கவிஞனின் காதல், நிலை பெற்ற சிலை, கவிதைத் தொகுப்புகள், குழந்தைப் பாடல்கள், ஆய்வு நூல்கள், கதைகள், குறுநாவல்கள் முதலியன தமிழ் ஒளியின் படைப்புகளாகும்.

 

சிந்தனை வினா

தமிழின் வளர்ச்சிக்குக் கவிஞர்கள் எவ்வாறெல்லாம் தொண்டாற்றியுள்ளனர்?

விடை

தமிழ் வளர்ச்சிக்குக் கவிஞர்கள் தொண்டாற்றிய விதம் ;

தமிழ்ப்பற்றும் நாட்டுப்பற்றும் மிகுந்த பாரதியார் யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று தமது சுதேசமித்திரன் நாளிதழில் எழுதினார். இதன் மூலம் தமிழை மீட்சி பெறச் செய்தார்.

பாரதிதாசன் தமிழுக்கும் அமுதென்று பேர் என்று பாடினார். தமிழைத் தன் உயிர் என்று பாடினார். இசையமுது, குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு போன்ற பல நூல்களை எழுதி தமிழை வளர்த்தார்.

தமிழில் பெரும்புலமை பெற்ற செய்குத்தம்பி பாவலர் பல அரிய தமிழ் நூல்களை எழுதி தமிழுக்கு வளம் சேர்த்துள்ளார். சீறாப்புராணத்திற்கு உரை எழுதியுள்ளார்.

அழ. வள்ளியப்பாகுழந்தைக் கவிஞர் என்ற பாராட்டுகுரியவர். சென்னை சக்தி பத்திரிகை அலுவலகத்தில் காசாளராகச் சேர்ந்தபோது தம் தமிழ்ப் பணியைத் தொடங்கினார். பிறகு வங்கிப் பணிக்குச் சென்றார். வங்கிப் பணியில் இருந்தாலும் அவருடைய தமிழ்ப்பணியை விடாமல் பலநூல்களை இயற்றித் தமிழுக்குத் தொண்டாற்றினார்.

இவ்வாறு எத்தனையோ கவிஞர்கள் தமிழுக்குத் தொண்டாற்றியுள்ளனர். பிறநாட்டு அறிஞர்களும் தமிழை வளர்த்துள்ளனர்.

 


கற்பவை கற்றபின்

 

நிறுத்தக் குறிகளைப் பயன்படுத்திச் சரியான ஒலிப்புடன் படித்துக்காட்டுக.

தமிழ்மொழியின் வளர்ச்சிக்குப் பங்காற்றிய புதுவை படைப்பாளிகளைப் பற்றிய செய்திகளைத் திரட்டுக.

 

Tags : Term 3 Chapter 3 | 5th Tamil பருவம் 3 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ்.
5th Tamil : Term 3 Chapter 3 : Manitham, allumai : Prose: Pudhuvai valartha Tamil: Questions and Answers Term 3 Chapter 3 | 5th Tamil in Tamil : 5th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மனிதம், ஆளுமை : உரைநடை : புதுவை வளர்த்த தமிழ்: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 3 இயல் 3 | 5 ஆம் வகுப்பு தமிழ் : 5 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 3 இயல் 3 : மனிதம், ஆளுமை