நமது சுற்றுச்சூழல் | பருவம் 3 அலகு 1 | 5 ஆம் வகுப்பு அறிவியல் - கேள்வி பதில் | 5th Science : Term 3 Unit 1 : Our Environment
மதிப்பீடு
I. சரியான
விடையைத் தேர்ந்தெடு.
1. கீழ்க்காண்பவற்றுள் அதிக அளவில் பால் கொடுக்கும் கால்நடை எது?
அ. பசுமாடு
ஆ. யாக் எருமை
இ. எருமை மாடு
ஈ. வெள்ளாடு
[விடை : இ. எருமை மாடு]
2. பறவைப் பண்ணைகளில் --------- உற்பத்தி செய்யப்பட்டு வளர்க்கப்படுகின்றன.
அ. கோழிகள்
ஆ. பசு மாடுகள்
இ. பறவை இனங்கள்
ஈ ஆடுகள்
[விடை : இ. பறவை இனங்கள்]
3. ----------- ஒரு மிகச்சிறந்த உரம்.
அ. மண்புழு உரம்
ஆ. பழங்கள்
இ. செயற்கை உரம்
ஈ. யூரியா
[விடை : அ. மண்புழு உரம்]
4. --------- வேளாண்மையை விட இலாபகரமானது.
அ. பால் பண்ணை
ஆ. பண்ணைத் தொழில்
இ. பறவைப் பண்ணை
ஈ. வேளாண்மை
[விடை : ஆ. பண்ணைத் தொழில்]
5. கோழிப் பண்ணைத் தொழிலில் தமிழ்நாட்டின் ---------- மாவட்டம்
சிறந்து விளங்குகிறது.
அ. அரியலூர்
ஆ. சேலம்
இ. நாமக்கல்
ஈ. தஞ்சாவூர்
[விடை : இ. நாமக்கல்]
II. கோடிட்ட
இடத்தை நிரப்புக.
1. இந்தியாவில் ---------- வகையான கால்நடை இனங்கள் உள்ளன.
விடை : 26
2. ----------- ன் பால்
பசுமாட்டின் பாலைவிட அதிக ஊட்டச்சத்து கொண்டது.
விடை : எருமை மாட்டின்
3. ------ இல் அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது.
விடை : சக்கை
4. பறவைப் பண்ணைகளில் உள்ள பறவைகளின் எச்சம் --------- ஆகப் பயன்படுகிறது.
விடை : உரம்
5. மண்புழு உரமாக்கல் என்பது ------ ஐ சத்து நிறைந்த உரமாக மாற்றுவதாகும்.
விடை : கரிமக் கழிவுகள்
III. பொருத்துக
1. சுர்தி - முட்டை
2. வெண்மைப் புரட்சி - போக்குவரத்து
3. முட்டைக் கோழி - பருப்புவகைத் தாவரங்கள்
4. பசுமை உரம் - எருமை மாடு
5. கால்நடைகள் – பால்
விடை :
1. சுர்தி - எருமை மாடு
2. வெண்மைப் புரட்சி - பால்
3. முட்டைக் கோழி - முட்டை
4. பசுமை உரம் - பருப்புவகைத் தாவரங்கள்
5. கால்நடைகள் – போக்குவரத்து
IV. சரியா
அல்லது தவறா எனக் கூறுக. தவறான கூற்றைத் திருத்தி எழுதுக.
1. பண்ணைத் தொழில் வியாபார நோக்கில் செய்யப்படுகிறது.
விடை : சரி
2. மண்புழு உரத்தை கழிவுநீர் சுத்திகரிப்பிற்குப் பயன்படுத்தலாம்.
விடை : சரி
3. பருப்புவகைத் தாவரங்கள் தாவர இலையில் நைட்ரஜனைச் சேமித்து வைக்கின்றன.
விடை : தவறு
பருப்பு வகைத் தாவரங்கள் வேர் முண்டுகளில் நைட்ரஜனைச்
சேமித்து வைக்கின்றன.
4. நாமக்கல் மாவட்டம் பால் பண்ணைக்குப் பெயர்பெற்றது.
விடை : தவறு
நாமக்கல் மாவட்டம் கோழிப் பண்ணைக்குப் பெயர் பெற்றது.
5. முர்ரா என்பது எருமை மாட்டின் ஒரு இனம்.
விடை : சரி
V. சுருக்கமாக
விடையளி.
1. பண்ணை வளர்ப்பு என்றால் என்ன?
விடை :
பண்ணை வளர்ப்பு என்பது தாவரங்கள் மற்றும் விலங்குகளை
வளர்க்கும் முறையாகும்.
2. பண்ணை வளர்ப்பின் வகைகளை எழுதுக.
விடை :
விவசாயம் செய்வது, பலவிதமான பயிர்களையும்
விலங்குகளையும் வளர்ப்பது, பால்பண்ணை , பறவைப் பண்ணை , தேனீ வளப்பு ஆகியவை பண்ணை வளர்ப்பின் வகைகள் ஆகும்.
3. பறவைப் பண்ணை குறித்து எழுதுக.
விடை :
பறவைப் பண்ணையில் பறவை இனங்கள் அவற்றின் முட்டை
மற்றும் இறைச்சிக்காக வளர்க்கப்படுகின்றன. கோழி, வாத்து, தாரா, வான்கோழி மற்றும் சில வகை புறாக்கள் பொதுவாக இங்கு
வளர்க்கப்படுகின்றன. இவற்றுள் 90% கோழிகளே அதிகம் வளர்க்கப்படுகின்றன. இறைச்சிக்காக
வளர்க்கப்படும் கோழிகள் இறைச்சிக் கோழிகள் (பிராய்லர்) எனவும், முட்டைக்காக
வளர்க்கப்படும் கோழிகள் முட்டைக் கோழிகள் (லேயர்ஸ்) எனவும் அழைக்கப்படுகின்றன.
4. விலங்கு எரு என்றால் என்ன?
விடை :
விலங்குப் பண்ணைகளில் இருந்து பெறப்படும் கழிவுகளே
பொதுவான விலங்கு எரு ஆகும். இது பொதுவாக பன்றி, ஆடு, மாடுகள், செம்மறி ஆடு, குதிரை, கோழி, வான்கோழி, முயல் போன்ற விலங்குகளின் கழிவுகளாகிய சாணம் மற்றும்
சிறுநீரைக் கொண்டுள்ளது. பாஸ்பரஸ், நைட்ரஜன் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துப் பொருள்கள்
இதில் அதிகம் உள்ளன.
5. மண்புழு உரம் – வரையறு.
விடை :
மண்புழுக்கள் கரிமக் கழிவுகளை உண்டு அதன் எச்சங்களை
சிறு உருண்டைகளாக வெளியேற்றுகின்றன. இது மண்புழு உரம் எனப்படும்.
VI. விரிவாக
விடையளி.
1. கால்நடைகளின் பயன்கள் யாவை?
விடை :
● பசு நமக்கு
பால் தருகிறது. பசுவின் பாலில் நமக்குத் தேவையான தாது உப்புகள் உள்ளன.
● எருதுகள் நிலத்தை உழவும், அறுவடை செய்யவும், போர் அடிக்கவும் உதவி செய்கின்றன.
● கால்நடைகள் போக்குவரத்திற்குப் பயன்படுத்தப் படுகின்றன.
● மாட்டுச் சாணம் ஒரு சிறந்த இயற்கை உரம். அது எரிபொருளாகவும்.
உயிரி வாயு தயாரிப்பதற்கும் பேயன்படுகிறது.
● பஞ்சகவ்யம் என்பது ஒரு ஆயுர்வேத மருந்தாகும்.
இது பூச்சிகளையும். பூஞ்சைகளையும் கட்டுப்படுத்துவதற்காக விவசாயத்தில் பயன்படுத்தப்படுகிறது.
இது மாட்டின் சாணம் மற்றும் சிறுநீர், கறந்த பால், தயிர், வெல்லம் மற்றும்
நெய் ஆகியவற்றின் கலவை ஆகும்.
● கால்நடைகளின் தோலில் இருந்து தோல் பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன.
2. பறவைப் பண்ணையை எவ்வாறு நிர்வகிப்பாய்?
விடை :
● பண்ணைகளில்
வளரும் பறவைகளுக்கு மிகவும் தூய்மையான காற்றோட்டம் தேவை. நோய் வராமல் தடுப்பதற்கு கீழ்கண்ட
முறைகள் கடைபிடிக்கப்பட வேண்டும்.
● பண்ணைகளில்
உள்ள பறவைக்கூடுகள் சுத்தமாகவும் பூச்சிகள் இல்லாதவாறும் பாதுகாக்கப்படவேண்டும். நல்ல
காற்றோட்டம் இருப்பதற்கு ஏற்றவாறு ஜன்னல்கள் இருக்கவேண்டும்.
● அதிக முட்டைகள் இடுவதற்கு நல்ல வெளிச்சம் அவசியம். பறவைகளுக்கு தூய்மையான நீர் கொடுக்கப்படவேண்டும். ஏற்ற காலத்தில் போடவேண்டிய தடுப்பூசிகள் போடப்பட வேண்டும். இது நோய் வராமல் தடுக்கும்.
செயல்பாடு 1
உங்கள் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள கால்நடைப் பண்ணைக்குச் சென்று அதனைப் பார்வையிடவும். அங்கு வளர்க்கப்படும் கால்நடைகளைக் குறித்து ஒரு பட்டியல் தயாரிக்கவும். மேலும், அங்கு தயாரிக்கப்படும் வாருள்கள் குறித்து தெரிந்து கொள்ளவும்.
செயல்பாடு 2
தமிழ்நாட்டில் காணப்படும் மாட்டினங்கள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ஆசிரியரின் உதவியுடன் அவை எந்த மாவட்டத்தில் காணப்படுகின்றன என்று கண்டுபிடிக்கவும்.
செயல்பாடு 3
உங்கள் பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ மையத்திற்குச் சென்று கால்நடைகளில் தோன்றும் பொதுவான நோய்கள் குறித்து அறிந்து கொள்க. மேலும் அவற்றைத் தடுக்கும் முறைகளைப் பற்றியும் அறிந்து கொள்க.
செயல்பாடு 4
கீழேகொடுக்கப்பட்டுள்ளவார்த்தைகளைக் கொண்டு கோடிட்ட இடங்களை நிரப்புக.
(எண்ணெய் வித்துக்கள், முட்டை, தேன், உணவு தானியங்கள், மீன்)
பசுமைப் புரட்சி : உணவு தானியங்கள்
நீலப் புரட்சி : மீன்
வெள்ளிப் புரட்சி : முட்டை
தங்கப் புரட்சி : தேன்
மஞ்சள் புரட்சி : எண்ணெய் வித்துக்கள்
செயல்பாடு 5
ஆசிரியரின் வழிகாட்டுதலுடன் உங்கள் பள்ளி வளாகத்தில் ஒரு உரக்குழியைத் தோண்டவும். உணவு மற்றும் காய்கறிக் கழிவுகள் போன்ற இயற்கைக் கழிவுகளை அதனுள் போட்டு அதை மண்ணால் மூடவும். மூன்று வாரங்கள் கழித்து அது உரமாக மாறி இருக்கும். அதை உங்கள் பள்ளியில் உள்ள செடிளுக்கு உரமாக உபயோகிக்கலாம்.