ஆற்றங்கரை அரசுகள் | பருவம் 1 அலகு 1 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 4th Social Science : Term 1 Unit 1 : Kingdoms of Rivers
மதிப்பீடு
அ. சரியான விடையைத் தேர்வு செய்யவும்.
1. சேர,
சோழ, பாண்டியர்கள் -------------- என அழைக்கப்பட்டனர்.
அ) நாயன்மார்கள்
ஆ) மூவேந்தர்கள்
இ) குறுநில மன்னர்கள்
விடை: ஆ) மூவேந்தர்கள்
2. சேரர்களில்
புகழ் அற்ற ரசராகக் கருதப்படு
அ) கரிகாலன்
ஆ) வல்வில் ஓரி
இ) சேரன் செங்குட்டுவன்
விடை: இ) சேரன் செங்குட்டுவன்
3. சோழர்களின்
துறைமுகம் ------------
அ) காவிரிபூம்பட்டினம்
ஆ) சென்னை
இ தொண்டி
விடை: அ) காவிரிபூம்பட்டினம்
4. பாண்டியர்களின் கொடியில் இடம்பெற்றுள்ள சின்னம்
------------- ஆகும்.
அ) மயில்
ஆ) மீன்
இ) புலி
விடை: ஆ) மீன்
5. முல்லைக்குத்
தேர் கொடுத்த வள்ளல் -------------- ஆவார்.
அ) பாரி
ஆ) பேகன்
இ) அதியமான்
விடை: அ) பாரி
ஆ. பொருத்துக.
1. சேரர்கள்- வைகை
2. சோழர்கள் - பாலாறு
3. பாண்டியர்கள் - பொய்கை
4. பல்லவர்கள் – காவிரி
விடை:
1. சேரர்கள் - பொய்கை
2. சோழர்கள் - காவிரி
3. பாண்டியர்கள் - வைகை
4. பல்லவர்கள் – பாலாறு
இ. குறுகிய விடையளி.
1. சேரர்களில்
புகழ் பெற்ற அரசர்கள் யாவர்?
• இமயவர்மன் நெடுஞ்சேரலாதன்
• சேரன் செங்குட்டுவன்
2. 'கடையேழு
வள்ளல்கள்' என்போர் யாவர்?
• பேகன்
• அதியமான்
• பாரி
• நெடுமுடிக்காரி
• வல்வில் ஓரி
• ஆய்
• நல்லி
3. கரிகாலனின் சாதனைகளைக் குறிப்பிடுக.
• வெண்ணி மற்றும் வாகைப் பறந்தலைப் போரில் சேரர் மற்றும் பாண்டியர்களை தோற்கடித்தார்.
• காவிரியின் குறுக்கே கல்லணையைக் கட்டியுள்ளார்.
4. பல்லவர்களின்
தலைநகரத்தையும் கடற்கரை நகரத்தையும் குறிப்பிடுக.
• பல்லவர்களின் தலைநகரம் காஞ்சிபுரம்.
• அவர்களின் கடற்கரை நகரம் மகாபலிபுரம்.
ஈ. யாருடைய கூற்று?
1.
"யானோ அரசன், யானே கள்வன்".
பாண்டியன் நெடுஞ்செழியன்.