பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 4th Social Science : Term 3 Unit 2 : The Story of Madras Presidency

   Posted On :  04.09.2023 02:15 am

4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 : அலகு 2 : சென்னை மாகாணத்தின் வரலாறு

வினா விடை

4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 : அலகு 2 : சென்னை மாகாணத்தின் வரலாறு : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் தேர்வு செய்க.

 

1. மதராஸ் மாகாணம் ---------------- இல் உருவாக்கப்பட்டது.

அ) 1800

ஆ) 1801

இ) 1802

ஈ) 1803

விடை : ஆ) 1801

 

2. மதராஸ் மாநிலம் அதிகாரப்பூர்வமாக ---------------- இல் தமிழ்நாடு என மறுபெயரிடப்பட்டது.

அ) 1947

இ) 1956

ஆ) 1953

ஈ)  1969

விடை : 1969

 

3. மாமல்லபுரம் --------------------- வம்சத்தினரால் உருவாக்கப்பட்டது.

அ) நாயக்கர்

ஆ) பல்லவ

இ) சோழ

ஈ) ஆங்கிலேய

விடை : ஆ) பல்லவ

 

4. "தென்னிந்தியாவின் ஸ்பா' என்று அழைக்கப்படுவது எது?

அ) போடிநாயக்கனூர்

ஆ) ஒகேனக்கல்

இ) குற்றாலம்

ஈ) செஞ்சிக் கோட்டை

விடை : இ) குற்றாலம்


5. எட்டு அடுக்கிலான மிகச் சிறிய அளவிலுள்ள மனோரா கோட்டையைக் கட்டியவர் ---------------- ஆவார்.

அ) சரபோஜி மன்னர்

ஆ) சின்ன பொம்மி நாயக்கர்

இ) திம்மா ரெட்டி நாயக்கர்

ஈ) திருமலை நாயக்கர்

விடை : அ) சரபோஜி மன்னர்

 

II. சரியா, தவறா என எழுதுக.


1. மதராஸ் மாகாணத்தின் தலைநகரம் மதராஸ் நகரம் ஆகும். (விடை: சரி)

2. சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள உத்திரமேரூர், பழங்கால சோழர்களின் கிராமமாகும். (விடை: தவறு)

3. திருமலை நாயக்கர் அரண்மனை திருமலை நாயக்கரால் கட்டப்பட்டது.
(விடை: சரி)

4. கோயம்புத்தூர் "தென்னிந்தியாவின் மான்செஸ்டர்" என அழைக்கப்படுகிறது. (விடை: சரி)

5. கங்கைகொண்ட சோழபுரம் கோயில், தஞ்சை பெரிய கோயில் எனவும் அறியப்படுகிறது. (விடை: தவறு)

 

III. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. காவலூர் - கிழக்கின் டிராய்

2. செஞ்சிக் கோட்டை - ஊட்டி

3. போடிநாயக்கனூர் - வைணு பாப்பு ஆய்வகம்

4. முத்து நகரம் - ஏலக்காய் நகரம்

5. ஜான் சல்லிவன் – தூத்துக்குடி

 

விடை:

1. காவலூர் - வைணு பாப்பு ஆய்வகம்

2. செஞ்சிக் கோட்டை - கிழக்கின் டிராய்

3. போடிநாயக்கனூர் - ஏலக்காய் நகரம்

4. முத்து நகரம் - தூத்துக்குடி

5. ஜான் சல்லிவன் – ஊட்டி

 

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

 

1. செஞ்சிக் கோட்டையின் முக்கியத்துவத்தைக் கூறுக?

• தமிழ்நாட்டிலுள்ள அழகான கோட்டைகளில் ஒன்றாகும்.

• இக்கோட்டையானது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மூன்று குன்றுகள் சூழ்ந்த : இடத்தில் கட்டப்பட்டுள்ளது.

• ஆங்கிலேயர்கள் இதனை 'கிழக்கின் டிராய்' என அழைத்தனர்.

 

2. திருமலை நாயக்கர் அரண்மனையின் முக்கிய அம்சங்கள் யாவை?

• மதுரை மாவட்டத்தில் திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட திருமலை நாயக்கர் : அரண்மனை அமைந்துள்ளது.

• இது திராவிட மற்றும் இஸ்லாமிய கட்டடக் கலைகளின் ஒருமித்த கலவையாகும்.

 

3. சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள சில சுற்றுலாத் தலங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

• ஏற்காடு.

• மேட்டூர் அணை (ஸ்டான்லி நீர்த்தேக்கம்)

• ஒகேனக்கல் அருவி - தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள அருவிகளில் ஒன்றாகும்

 

4. கல்லணை - குறிப்பு வரைக.

• கல்லணை காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. .

• கி.பி 2 ஆம் நூற்றாண்டில் கரிகாலற்சோழன் கட்டினார்.

 

5. மலைக் கோட்டை - குறிப்பு வரைக.

• மலைக்கோட்டை திருச்சியில் உள்ளது.

• 83 மீட்டர் உயரமுள்ள பழமையான பாறையின் மீது கட்டப்பட்டுள்ளது.

• இக்கோட்டையின் உள்ளே இரண்டு இந்துக் கோயில்கள் உள்ளன.

 

6. தமிழ்நாட்டின் சில சுற்றுலாத் தலங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

• மெரினா கடற்கரை

• மலைக்கோட்டை

• மகாபலிபுரம்

• கொடைக்கானல்

• வேலூர்கோட்டை

• விவேகானந்தர் பாறை

• செஞ்சிக்கோட்டை

• இராமேஸ்வரம்

• ஒகேனக்கல் அருவி

• குற்றாலம்

• ஏற்காடு

• திருசெந்தூர் முருகன் கோயில்

• பிரகதீஸ்வரர்கோயில்

 

செயல்திட்டம்


உங்கள் மாவட்டத்தில் உள்ள முக்கிய நினைவுச்சின்னங்கள் / வரலாற்று இடங்களின் படங்களை ஒட்டுக.

 


Tags : The Story of Madras Presidency | Term 3 Chapter 2 | 4th Social Science பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
4th Social Science : Term 3 Unit 2 : The Story of Madras Presidency : Questions with Answers The Story of Madras Presidency | Term 3 Chapter 2 | 4th Social Science in Tamil : 4th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 : அலகு 2 : சென்னை மாகாணத்தின் வரலாறு : வினா விடை - பருவம் 3 அலகு 2 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 4 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 : அலகு 2 : சென்னை மாகாணத்தின் வரலாறு