குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் | பருவம் 3 அலகு 3 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 4th Social Science : Term 3 Unit 3 : Rights and Duties of Children

4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 : அலகு 3 : குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்

வினா விடை

4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 : அலகு 3 : குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. சரியான விடையைத் செய்க.

 

1. இந்திய சட்டத்திற்கு எதிரானது.

அ. பள்ளியில் குழந்தைகள் படித்தல்.

ஆ.தொழிற்சாலைகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலை செய்தல்.

இ. பள்ளி செயல்பாடுகளில் குழந்தைகள் பங்கேற்றல்.

ஈ. குழந்தைகள் தரமான உணவைப் பெறுதல்.

விடை: ஆ.தொழிற்சாலைகளில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வேலை செய்தல்.

 

2. போலியோ சொட்டு மருந்து ----------------- களுக்கு வழங்கப்படுகின்றன.

அ. ஆண்

ஆ. பெண்

இ. குழந்தை

ஈ. மூத்த குடிமக்கள்

விடை: இ. குழந்தை  

 

3. ஒரு நாட்டின் விதிமுறைகளின் தொகுப்பை ---------------------------- என்பர்.

அ. கதைப் புத்தகம்

ஆ. விதிமுறைப் புத்தகம்

இ. அரசியலமைப்பு

ஈ. பாடநூல்

விடை: இ. அரசியலமைப்பு

 

4. பின்வருவனவற்றில் எது குழந்தைகளின் உரிமை இல்லை?

அ. ஓட்டுநர் உரிமம் பெறுதல்

ஆ. கல்வி பெறுதல்

இ. போதுமான உணவைப் பெறுதல்

ஈ.ஆரோக்கியமாக வாழ்தல்

விடை: அ. ஓட்டுநர் உரிமம் பெறுதல்

 

II. சரியா, தவறா என எழுதுக.

 

1. போலியோ சொட்டு மருந்தைப் பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை ஆகும். (விடை : சரி)

2. அனைத்து வயது குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான உரிமைகள் உள்ளன. (விடை : சரி)

3. 6 முதல் 14 வயது வரையிலான அனைத்துக் குழந்தைகளும் வேலை செய்ய வேண்டும். (விடை: தவறு)

4. குழந்தைகளைத் துன்புறுத்துவது தவறானது. (விடை : சரி)

5. குழந்தைகள் தவறான தொடுதலை அறிந்திருக்க வேண்டும். (விடை : சரி)

 

III. பின்வருவனவற்றைப் பொருத்துக


1. சிறார் உதவி மைய எண் - ஒரு நாட்டின் உறுப்பினர்

2. தடுப்பூசிகள் - சுகாதாரம்

3. வாஷ் (WASH) - சட்டவிரோதமானது

4. குடிமகன் - நோய்களிலிருந்து பாதுகாப்பு

5. குழந்தைத் தொழிலாளர் – 1098

 

விடை

1. சிறார் உதவி மைய எண் - 1098

2. தடுப்பூசிகள் - நோய்களிலிருந்து பாதுகாப்பு

3. வாஷ் (WASH) - சுகாதாரம்

4. குடிமகன் - ஒரு நாட்டின் உறுப்பினர்

5. குழந்தைத் தொழிலாளர் – சட்டவிரோதமானது

 

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.

 

1. தொடக் கூடாத மூன்று பகுதிகள் யாவை?

உதடுகள், மார்பு மற்றும் என் கால்களுக்கு இடையில் தொடக் கூடாது.

 

2. குழந்தைகளாகிய உங்களுக்கு பல்வேறு உரிமைகள்

• உயிர் வாழ்வதற்கான உரிமை,

• வளர்ச்சிக்கான உரிமை,

• பாதுகாப்பு உரிமை,

• பங்கேற்பதற்கான உரிமை போன்றவை ஆகும்

 

3. உயிர்வாழ்வதற்கான உரிமை - குறிப்பு வரைக.

• ஒவ்வொரு குழந்தைக்கும் குறைந்தபட்சம் தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்தல்.

• இது அனைத்துக் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது.

• வாஷ் (WASH) திட்டமும் ஒரு பகுதியாகும் (6 வயதுக்குட்பட்ட மற்றும் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு).

 

4. பங்கேற்பதற்கான உங்கள் உரிமையை எப்போதாவது நீங்கள் பயன்படுத்தியிருக்கிறீர்களா? விவரிக்க.

• பங்கேற்பதற்கான உரிமையைப் பள்ளியில் பயன்படுத்தியுள்ளேன்.

• பள்ளியைப் புதுப்பித்தல் குறித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து கலந்துரையாடிய கூட்டத்தில் பங்கேற்றேன். அதன் பரிந்துரைகள் பின்வருவன.

• பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறையிலும் குடிநீர் வசதி இருக்க வேண்டும்.

• நான்கு வகுப்பறைகளுக்கு ஒரு கழிப்பறை இருக்க வேண்டும்.

• விளையாடுவதற்கு ஏதுவாக விளையாட்டு அறையில் சதுரங்கப் பலகைகள், பந்துகள், பூப்பந்து இறகுகள் இருக்க வேண்டும்

 

5. உரிமைகள் முக்கியமானவை. ஏன்?

• சுதந்திரமாக வாழ்வதற்கும்,

• கல்வி கற்கவும்,

• நல்ல கருத்துக்களை வெளியிடவும்,

• எல்லா நிகழ்வுகளிலும் பங்குபெறவும்,

• பாதுகாப்புடன் வாழ்வதற்கும்,

• ஒரு நாட்டின் குடிமகனாக வாழவும்,

• விதிமுறைகளைப் பின்பற்றவும்,

மேற்கண்ட காரணங்களினால் உரிமைகள் முக்கியமானதாகும்.

 

 

செயல்திட்டம்

இந்த பாடத்தில் விவாதிக்கப்பட்ட குழந்தைகளின் உரிமைகளில், தேவையை மையமாகக் கொண்ட ஏதேனும் ஓர் உரிமையை 5 நபர்கள் கொண்ட குழுக்களாக சேர்ந்து ஒரு சிறிய நாடகமாக நடித்துக் காட்டவும்.

Tags : Rights and Duties of Children | Term 3 Chapter 3 | 4th Social Science குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் | பருவம் 3 அலகு 3 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
4th Social Science : Term 3 Unit 3 : Rights and Duties of Children : Questions with Answers Rights and Duties of Children | Term 3 Chapter 3 | 4th Social Science in Tamil : 4th Standard Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 : அலகு 3 : குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் : வினா விடை - குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள் | பருவம் 3 அலகு 3 | 4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 4 ஆம் வகுப்பு புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
4 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 3 : அலகு 3 : குழந்தைகளின் உரிமைகள் மற்றும் கடமைகள்