பருப்பொருள்களின் நிலைகள் | முதல் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 3rd Science : Term 1 Unit 2 : States of Matter

   Posted On :  27.05.2022 10:51 pm

3 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 2 : பருப்பொருள்களின் நிலைகள்

வினா விடை

3 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 2 : பருப்பொருள்களின் நிலைகள் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், கோடிட்ட இடங்களை நிரப்புக, சரியா? தவறா?, ஓரிரு வாக்கியங்களில் விடையளி, பொருத்துக, ஓரிரு வாக்கியங்களில் விடையளி , வரையறு, சிந்தித்து விடையளி, மாணவர்கள் செயல்பாடு, செயல் திட்டம்
பருப்பொருள்களின் நிலைகள் (முதல் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு அறிவியல்)


மதிப்பீடு

I. பின்வரும் கூற்றுகள் சரியா? தவறா? என கண்டுபிடி. 

1. திண்மப் பொருளுக்கு குறிப்பிட்ட கனஅளவு உண்டு.

விடை : சரி 

2. திரவங்கள் பாயாது.

விடை : தவறு 

3. பொருள்களைக் குளிர்விக்கும் போது உருகும்.

விடை : தவறு 

4. திரவங்கள் அவை உள்ள கலனின் வடிவத்தைப் பெறும். 

விடை : சரி 

5. வாயுக்களுக்கு குறிப்பிட்ட வடிவம் மற்றும் கனஅளவு உண்டு.

விடை : தவறு 

6. பருப்பொருள் வெப்பப்படுத்தும்போதோ அல்லது குளிர்விக்கும்போதோ அதன் நிலையிலிருந்து மாறும்.

விடை : சரி 

7. எரிக்கும் போது வெப்பம் தருவது எரிபொருள் ஆகும்.

விடை : சரி 


II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

(ஆவியாதல், நிறை, நீர், திடப்பொருள், கல், உறைதல்) 

1. ஒரு பொருளில் காணப்படும் துகள்களின் மொத்த எண்ணிக்கை __________ எனப்படும்.

விடை : நிறை 

2. திரவங்களை வெப்பப்படுத்தும்போது வாயுவாக மாறும் நிகழ்விற்கு __________ என்று பெயர்.

விடை : ஆவியாதல் 

3. திரவத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு __________

விடை : நீர் 

4. திரவத்தினை குளிர்வித்து திண்மப் பொருளாக மாற்றும் செயல் __________ எனப்படும்.

விடை : உறைதல் 

5. திண்மப் பொருளுக்கு ஒரு எடுத்துக்காட்டு __________ 

விடை : கல்



III. பொருளை அதன் சரியான நிலையுடன் கோடிட்டு பொருத்துக.




IV. ஓரிரு வாக்கியங்களில் விடையளி : 

1. பின்வருவனவற்றில் எது திடப்பொருள்? கட்டை / பழச்சாறு

கட்டை. 

2. எது கடினமானது? பஞ்சு / கண்ணாடி / துணி

கண்ணாடி. 

3. பருப்பொருள்களின் மூன்று நிலைகள் என்ன?

திண்மம், நீர்மம், வாயு. 

4. வெப்பப்படுத்தும்போது திரவமாக மாறும் மூன்று பொருள்களின் பெயர் கூறுக.

பனிக்கட்டி, பாலாடைக்கட்டி, வெல்லம். 

5. பருப்பொருளின் எந்த நிலையில் துகள்கள் நெருக்கமாக இருக்கும்?

திண்ம நிலை. 

6. மழை பருப்பொருளின் எந்த நிலை?

திரவ நிலை. 

7. பருப்பொருளின் எந்த நிலைக்கு குறிப்பிட்ட கன அளவு இருக்கும்? ஆனால் குறிப்பிட்ட வடிவம் இருக்காது? 

திரவ நிலை.

8. பின்வருவனவற்றில் எதில் திரவம், திண்மப் பொருளாக மாறும்?

அ) கலனில் ஊற்றுதல் 

ஆ) கொதிக்கும் வரை சூடுபடுத்துதல் 

இ) உறையும் வரை குளிர்வித்தல் 

ஈ) ஒரே வெப்பநிலையில் வைத்திருத்தல்

விடை : இ) உறையும் வரை குளிர்வித்தல். 

9. பென்சிலின் சில பண்புகளைக் கூறுக.

• பென்சில் கடினமானது. 

• அதற்கு குறிப்பிட்ட வடிவம் உண்டு. 

• குறிப்பிட்ட கனஅளவு உண்டு. 



V. என்னைக் கண்டுபிடி.

(திரவம், நீர், கட்டை) 

1. நான் இரண்டெழுத்து வார்த்தை. நான் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதவன். மூன்று நிலைகளிலும் இருப்பேன். நான் யார்? 

விடை : நீர் 


2. நான் ஒரு திண்மப்பொருள். நான் மரத்திலிருந்து பிறந்தவன். நான் வெப்பப் படுத்துவதற்கு பயன்படுவேன். நான் யார்?

விடை : மரக்கட்டை 


3. நான் மூன்று நிலைகளில் ஒருவன். என்னுள் துகள்கள் மிகத் தளர்வாக அமைக்கப் பட்டிருக்கும். என்னை வெப்பப்படுத்தும் போது நான் ஆவியாவேன். நான் யார்?

விடை : திரவம் (நீர்)



VI. வரையறு. 

1. திண்மம் : குறிப்பிட்ட வடிவமும் கனஅளவும் கொண்ட பொருள் திண்மம் எனப்படும்.

எ.கா: கல், செங்கல். 


2. திரவம் : குறிப்பிட்ட கனஅளவைக் கொண்டதும் குறிப்பிட்ட வடிவம் மற்றும் எளிதில் பாயக்கூடியதுமான பொருட்கள் திரவம் எனப்படும்.

எ.கா: நீர், மண்ணெண்ணெய். 


3. உருகுதல் : திண்மப் பொருளை வெப்பப்படுத்தும் போது திரவமாக மாறும் செயல் உருகுதல் எனப்படும். 

எ.கா: பனிக்கட்டி நீராக மாறுதல்


4. ஆவியாதல் : திரவப்பொருளை வெப்பப்படுத்தும் போது வாயுவாக மாறும் நிகழ்வு ஆவியாதல் எனப்படும்.

எ.கா: நீர் நீராவியாக மாறுதல் 


5. உறைதல் : திரவப் பொருளை குளிர்விக்கும் போது திண்மமாக மாறும் நிகழ்வே உறைதல் எனப்படும்.

எ.கா: நீர் பனிக்கட்டியாக மாறுதல் 



VII. பின்வரும் நிலைகளின் மாற்றங்களுக்கு கீழ்கொடுக்கப்பட்டுள்ள சரியான சொல்லை எடுத்து எழுதவும். 

(உறைதல், ஆவியாதல், சுருங்குதல், உருகுதல்) 

அ) பனிக்கட்டி நீராக மாறுதல்.

விடை : உருகுதல் 

ஆ) நீர் குளிர்விக்கும் போது பனிக்கட்டியாக மாறுதல். 

விடை : உறைதல் 

இ) திரவம் வெப்பப்படுத்தும்போது வாயுவாக மாறுவது. 

விடை : ஆவியாதல் 

ஈ) குளியலறை கண்ணாடியில் நீர்த்திவளைகள் தெரிவது. 

விடை : சுருங்குதல்


நிரப்புவோமா 

பின்வருவனவற்றுள் எவையெல்லாம் திண்ம, திரவ, வாயு என எழுதுக.


படித்துப் பார்த்து அட்டவணையை பூர்த்தி செய்க 

இங்கு பருப்பொருள்களின் பண்புகள் சில கொடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பிட்ட வடிவம் உண்டு

குறிப்பிட்ட வடிவம் இல்லை

குறிப்பிட்ட கனஅளவு உண்டு

குறிப்பிட்ட கனஅளவு இல்லை

அனைத்து திசைகளிலும் பாயும்

கடினமானது

இதனை பின்வரும் அட்டவணையின் சரியான பகுதியில் அதன் பண்புகளை எழுதவும். சில பண்புகள் ஒன்றிற்கு மேற்பட்ட கட்டத்திற்குப் பொருந்தும். 


திடப்பொருளின் பண்புகள்

குறிப்பிட்ட வடிவம் உண்டு

குறிப்பிட்ட கனஅளவு உண்டு

கடினமானது.

திரவப்பொருளின் பண்புகள்

குறிப்பிட்ட வடிவம் இல்லை. 

குறிப்பிட்ட கன அளவு உண்டு.

அனைத்து திசைகளிலும் பரவும்.

வாயுப்பொருளின் பண்புகள் 

குறிப்பிட்ட வடிவம் இல்லை.

குறிப்பிட்ட கன அளவு இல்லை.  

அனைத்து திசைகளிலும் பரவும்.


சிந்திப்போமா! 

ஏன் குளிர்காலங்களில் தேங்காய் எண்ணெய் உறைந்துவிடுகிறது?

குளிர்காலங்களில் அறை வெப்பநிலை 20° C க்கு குறைகிறது. இது தேங்காய் எண்ணெயின் உறைநிலையை விடக் குறைவு. எனவே குளிர்காலங்களில் தேங்காய் எண்ணெய் உறைகிறது. 


அட்டவணையைப் பூர்த்தி செய்க



சிந்தித்து விடையளி 

இரண்டு பாட்டில்களில் ஒன்று குளிர்சாதனப் பெட்டியில் வைத்தது. மற்றொன்று குளிர்சாதனப் பெட்டியில் வைக்காதது. 

அ) படத்தில் உள்ள இரண்டில் எந்த பாட்டில் குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்தது?

பாட்டில் A

ஆ) எப்படி உனக்கு தெரியும்?

பாட்டிலின் வெளிப்புறத்தில் நீர்த்திவலைகள் உள்ளன.  

இ) நீர்த்திவலைகள் பாட்டில் 'அ'ல் எப்படி தோன்றியது?

ஆவி சுருங்குவதால் நீர்த்திவலைகள் தோன்றியது. 

ஈ) பாட்டில் ‘ஆ’ல் நீர்த்திவலைகள் காணவில்லை ஏன்?

பாட்டில் ‘ஆ’ குளிர்சாதனப்பெட்டியில் வைக்கப்படவில்லை.


கலந்துரையாடுவோமா! 

1. தரையில் வைக்கப்பட்ட கல் தானாக நகருமா?

நகராது. 

2. குவளையில் உள்ள நீரினை தரையில் ஊற்றும் போது ஏதேனும் ஒரு திசையில் மட்டும் பாயுமா? 

எல்லாத் திசைகளிலும் பாயும். 

3. காற்றடைக்கப்பட்ட பலூனை ஊசி கொண்டு குத்தும் போது காற்று மிக வேகமாக வெளியேறுமா? 

ஆம். 

4. பாத்திரம் முழுவதும் நீர் நிரப்பி அதன் மேற்பரப்பில் உங்களது கைகளைக் கொண்டு அழுத்த வேண்டும். நீ எப்படி உணர்கிறாய்? 

நீர் மேற்பரப்பின் வழியாக வழிந்தோடுவதைக் காணலாம். 


வெப்பப்படுத்துவதற்கு பயன்படும் அல்லது பயன்படாத பொருள்கள் 

படத்தை கவனித்து நீ என்ன காண்கிறாய் என எழுது. 

(மரக்கட்டை, இலைகள், காகிதம்)



பொருத்துக




Tags : States of Matter | Term 1 Chapter 2 | 3rd Science பருப்பொருள்களின் நிலைகள் | முதல் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு அறிவியல்.
3rd Science : Term 1 Unit 2 : States of Matter : Questions with Answers States of Matter | Term 1 Chapter 2 | 3rd Science in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 2 : பருப்பொருள்களின் நிலைகள் : வினா விடை - பருப்பொருள்களின் நிலைகள் | முதல் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு அறிவியல் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு அறிவியல் : முதல் பருவம் அலகு 2 : பருப்பொருள்களின் நிலைகள்