விசை | முதல் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 3rd Science : Term 1 Unit 3 : Force
விசை (முதல் பருவம் அலகு 3 | 3 ஆம் வகுப்பு அறிவியல்)
மதிப்பீடு
I. கோடிட்ட இடங்களை நிரப்புக.
(தள்ளுதல், விசை, இழுத்தல், வேகம், புவிஈர்ப்பு விசை, திசை, தசைநார் விசை)
1. ஓய்வு நிலையில் உள்ள பொருளை நகர்த்த உதவுவது __________
விடை : விசை
2. உடல் உறுப்புகளின் இயக்கத்தால் நடைபெறும் விசை __________
விடை : தசைநார் விசை
3. __________ மற்றும் __________விசைகள் ஆகும்.
விடை : தள்ளுதல், இழுத்தல்
4. மரத்திலிருந்து பழம் கீழே விழக் காரணம் __________
விடை : புவிஈர்ப்பு விசை
5. விசை _________ ஐயும் __________ ஐயும் மாற்றும்.
விடை : வேகம், திசை
II. சொற்களை சரியான படத்துடன் பொருத்துக.
III. வினாக்களுக்கு விடையளி :
1. கதவைத் திறக்க எவ்வகை விசை பயன்படுகிறது?
• கதவைத் திறக்க தசைநார் விசை பயன்படுகிறது.
2. விசைகளின் வகைகள் யாவை?
• விசைகள் இரண்டு வகைப்படும்.
1. தொடு விசை
2. தொடா விசை
• தொடு விசை மூன்று வகைப்படும்.
1. தசைநார் விசை
2. எந்திர விசை
3. உராய்வு விசை.
• தொடா விசை இரண்டு வகைப்படும்.
1. புவிஈர்ப்பு விசை
2. காந்த விசை
3. கிணற்றில் நீர் இறைக்கும் போது எவ்வகை விசை பயன்படுகிறது?
• கிணற்றில் நீர் இறைக்கும் போது தசைநார் விசை பயன்படுகிறது.
4. இயக்கம் என்றால் என்ன?
• ஒரு பொருளானது ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்வதை இயக்கம் என்கிறோம்.
5. மண்பாண்டம் செய்ய எவ்வகை விசை பயன்படுகிறது?
• மண்பாண்டம் செய்ய தசைநார் விசை பயன்படுகிறது.
IV. கீழ்க்கண்ட பொருள்களின் அருகில் சுஜாதா காந்தத்தை கொண்டு வருகிறாள். அவற்றில் எவைஎவை காந்தத்தில் ஒட்டிக்கொள்ளும்?
புத்தகம், ஊசி, நாணயம், அழிப்பான், சட்டை, சீப்பு, குவளை, ஆனி.
விடை : ஊசி, நாணயம், ஆணி போன்றவை காந்தத்தில் ஒட்டிக் கொள்ளும்.
V. சிந்தித்து விடையளிக்க:
பந்து, கல், காகிதத்தாள், இலை ஆகியவற்றை ராஜா மேல்நோக்கி எறிகிறான். என்ன நிகழும்? இங்க எவ்வகை விசை செயல்படுகிறது?
• பந்து, காகிதத்தாள், இலை ஆகியவற்றை ராஜா மேல்நோக்கி எறிகிறான். அவை கீழே விழுகின்றன.
• இங்கு புவிஈர்ப்பு விசை செயல்படுகிறது.
கீழே உள்ள படத்தை உற்றுநோக்குவதன் மூலம் நாம் நகர்தல் என்பதை மேலும் தெளிவாக அறியலாம்.
மேலே உள்ள படங்களில் எது நகர்கிறது?
பந்து, சைக்கிள்
என்ன வேலை நடைபெறுகிறது?
பந்தை அடித்தல், மிதிவண்டியை இயக்குதல்.
கீழே உள்ள படங்களில் இயக்கம் இருந்தால் (✓) குறியிடுக.
கொடுக்கப்பட்டுள்ள செயல்களில் எவை இழுத்தல் அல்லது தள்ளுதல் என வகைப்படுத்துக.
செயல்பாடுகள் - இழுத்தல் / தள்ளுதல்
1. மிதிவண்டியை இயக்குதல் : தள்ளுதல்
2. மேசையை உன்னை நோக்கி இழுத்தல் : இழுத்தல்
3. நாற்காலியை இழுத்தல் : இழுத்தல்
4. மகிழுந்தைத் தள்ளுதல் : தள்ளுதல்
5. சன்னலைத் திறத்தல் : இழுத்தல்
6. ரப்பர் சுருளை இழுத்தல் : இழுத்தல்
7. ஷுவின் நாடவை கழற்றுதல் : இழுத்தல்
பொருத்துக.
படத்தைப் பார்த்து, எவ்வகை விசை செயல்படுகிறது என எழுதுக.
விசையைக் குறிக்கும் படங்களை (✓) குறியிடுக.
சிந்திக்க!
சுண்டாட்டம் விளையாடுவதற்கு முன் சுண்டாட்டப் பலகையின் மீது மென்பொடியைத் தூவுவது ஏன்?
சுண்டாட்டப் பலகைக்கும் நாணயங்களுக்கும் இடையேயுள்ள உராய்வைக் குறைப்பதற்கு மென்பொடி தூவப்படுகிறது.
வகைப்படுத்துக
தள்ளுதல் செயல்கள்
ஊஞ்சலாட்டம்,
கால்பந்து விளையாட்டு,
குழந்தை ஸ்கூட்டர்,
மிதிவண்டி இயங்குதல்.
இழுத்தல் செயல்கள்
வண்டி இழுத்தல்,
மரக்கட்டை இழுத்தல்,
பட்டம் விடுதல்.
உராய்வு செயல்கள்
சறுக்குதல்,
மண்ணில் விளையாடுதல்
சாய்ந்தாடி.