நீர் | இரண்டாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு அறிவியல் - வினா விடை | 3rd Science : Term 2 Unit 2 : Water

   Posted On :  28.05.2022 04:21 am

3 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 2 : நீர்

வினா விடை

3 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 2 : நீர் : புத்தக வினாக்களுக்கான கேள்வி பதில்கள், கோடிட்ட இடங்களை நிரப்புக, சரியா? தவறா?, ஓரிரு வாக்கியங்களில் விடையளி, பொருத்துக, ஓரிரு வாக்கியங்களில் விடையளி , வரையறு, சிந்தித்து விடையளி, மாணவர்கள் செயல்பாடு, செயல் திட்டம்

நீர் (இரண்டாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு அறிவியல்)


மதிப்பீடு

அ. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.

1. நீரின் முதன்மை ஆதாரம் எது? 

அ) ஏரி

ஆ) கடல்

இ) மழை

விடை: இ) மழை 


2. பூமியில் உள்ள நீரின் அளவில் __________ அளவு நீரே பயன்படுத்தும் வகையில் உள்ளது. 

அ) 3%

ஆ) 0.3%

இ) 30%

விடை : அ) 3% 


3. நீரை __________ வைப்பதன் மூலம் அதில் உள்ள கிருமிகளை அழிக்கலாம். 

அ) கொதிக்க

ஆ) குளிர

இ) வடிகட்ட

விடை: அ) கொதிக்க 


4. கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் தவறானது எது? 

அ) தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் நீர் தேவை 

ஆ) நீரை எப்போதும் வீணாக்க வேண்டும் 

இ) நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.

விடை: ஆ) நீரை எப்போதும் வீணாக்க வேண்டும் 


5. மழை நின்றபின் மழை நீர் எங்கே செல்கிறது? 

1. நிலத்தினுள் ஊடுருவிச் செல்லும் 

2. தாவரங்கள் நீரை உறிஞ்சிக் கொள்ளும் 

3. கடல் மற்றும் பெருங்கடலோடு கலக்கும் 

4. ஏரி மற்றும் குளத்துடன் கலந்துவிடும் 

அ) 1 மற்றும் 2

ஆ) 1, 3 மற்றும் 4    

இ) 1, 2, 3 மற்றும் 4

விடை : இ) 1, 2, 3 மற்றும் 4



ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக. 

1. நாம் பருகும் நீரை __________ (பானை நீர் / குடிநீர்) என அழைப்பர். 

விடை: குடிநீர் 

2. குறைந்த, தாழ்வான பகுதியில் நீர் சேகரமாகும் இடத்தை __________ (கடல் / ஏரி) என அழைப்பர்.

விடை: ஏரி 

3. பொதுவாக நீர் ஆதாரங்களைத் தூய்மையாக வைத்துக்கொள்வது நமது __________ (கடமை / வேலை) ஆகும்.

விடை: கடமை 

4. பூமியின் மிகப்பெரிய நீர் ஆதாரம் __________ (ஆறு / கடல்). 

விடை: கடல்



இ. பொருந்தாததை வட்டமிடுக.

1. ஏரி     மலை     குளம்     கடல் 

2. அல்லி     தாமரை    ரோஜா     ஆகாயத்தாமரை

3. மீன்     குதிரை     புலி     மாடு

4. குளித்தல்     தலைவாருதல்     நீந்துதல்     துணி துவைத்தல்



ஈ. சரியா, தவறா என எழுதுக.

1. உயிரினங்களுக்கு நீர் தேவையில்லை.

விடை: தவறு

2. நீரைச் சேமிப்பது நமது கடமையாகும்.

விடை: சரி

3. பல் துலக்கும்போது குழாயை மூடி வைக்க வேண்டும். 

விடை: சரி

4. நீர்த்தேக்கத்தைவிட, நீர்த்தேக்கத் தொட்டிகளில் அதிக அளவு நீரைச் சேமித்து வைக்கலாம்.

விடை: தவறு



உ. ஓரிரு வரிகளில் விடையளி.

1. ஏதேனும் மூன்று நீர் ஆதாரங்களின் பெயர்களை எழுதுக.

மழைநீர், கிணறு, ஆறு, ஏரி மற்றும் ஓடை. 


2. டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் யாவை?

• கடுமையான தலைவலி 

• கை, கால்களில் தடிப்பு

• அதிக சோர்வு

• திடீர் காய்ச்சல் - 3 முதல் 7 நாள்களுக்கு மேல் நீடிக்கும். 


3. கொசுவினால் பரவும் ஏதேனும் இரண்டு நோய்களின் பெயர்களை எழுதுக.

மலேரியா, டெங்கு காய்ச்சல்.   



ஊ. பின்வருவனவற்றிற்கு விடையளி.

1. வாழ்வின் முதன்மை ஆதாரமாக நீர் கருதப்படுவது ஏன்?

நீர்பூமியில் உள்ள வளங்களுள் மிக முக்கியமான ஒன்றாகும். சிறு உயிரினங்கள், தாவரங்கள், விலங்குகள் போன்ற அனைத்து உயிரினங்களும் வாழ நீர் இன்றியமையாதாகும். மக்கள் பல்வேறு தேவைகளுக்கு நீரைப் பயன்படுத்துகின்றனர். நீரின் முக்கிய ஆதாரமாக மழை விளங்குகிறது. 


2. வீடுகளில் நீர் சேகரிப்பதற்கான சில வழிமுறைகளை எழுதுக.

• வாளியில் நீர் நிரம்பி வழிவதைத் தவிர்க்க வேண்டும். 

• பழங்களையும் காய்கறிகளையும் நேரடியாக குழாயைத் திறந்து கழுவாமல் பாத்திரத்தில் நீரைப் பிடித்து கழுவுதல் வேண்டும். 

• பல் துலக்கும்போது குழாயை மூடி வைக்க வேண்டும். 

• பள்ளி முடிந்து வீடு திரும்பும்போது உங்கள் நீர்ப்புட்டியில் மீதமுள்ள நீரை தாவரங்களுக்கு ஊற்ற வேண்டும். 

• ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் குடிநீர்க் குழாயை மூட வேண்டும்.

• தோட்டத்திற்கு நீர் பாய்ச்ச தெளிப்பானைப் பயன்படுத்த வேண்டும். 


3. நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளைப் பட்டியலிடுக.

• குளங்கள் மற்றும் ஏரிகளை ஆழமாக்குவது. 

• ஏரி மற்றும் குளத்தின் கரைகளில் மரங்களை நடுவது. 

• நீர் மாசுபடுவதைக் குறைப்பது. 

• ஒரே இடத்தில் அதிகமான கிணறுகளைத் தோண்டுவதைத் தவிர்ப்பது.



எ. சிந்தித்து விடையளி.

1. உங்களுடைய பள்ளியில் நீர் வீணாக்கப்படுவதை எவ்வாறு தடுப்பீர்? 

• குழாயில் நீர் கசிவதை நிறுத்த வேண்டும்.

• குழாயைப் பயன்படுத்தியபின் மூட வேண்டும்.

• கட்டுப்பாட்டு வால்வினைப் பயன்படுத்த வேண்டும். 


2. நீர் சேமிப்பு பற்றிய பொன்மொழிகள் சிலவற்றை எழுதுக. . 

• நீரைச் சேமிப்போம்! உலகைக் காப்போம்!

• சிறுதுளி பெரு வெள்ளம்!



ஏ. செயல்திட்டம்

1. பல்வேறு நீர்நிலைகளின் படங்களைச் சேகரித்து, படத்தொகுப்பு தயாரிக்க.




நிரப்புவோமா!

படத்தை உற்றுநோக்கி, கோடிட்ட இடங்களை நிரப்புக.

நம் முகத்தைக் கழுவ நீர் தேவை.

நம் பற்களைத் துலக்க நீர் தேவை.

உணவு சமைக்க நமக்கு நீர் தேவை.

நாம் பாத்திரங்களை சுத்தம் செய்ய நீர் தேவை.

நாம் குடிக்க நீர் தேவை.



பதிலளிப்போமா!

அ) நீர் தேவைப்படும் செயல்களுக்கு () குறியிடுக. 


விளையாட ( )

படகைச் செலுத்த (✓)

மின்விசிறி சுற்ற ( )

மரம் வளர்வதற்கு (✓) 

எழுதுவதற்கு ( )

படங்களுக்கு வண்ணம் தீட்ட ()      

பாடுவதற்கு ( )   

மாவு பிசைய ()

துணி துவைக்க ()

ஆ) நீரின்றி உங்களால் செய்யக்கூடிய ஏதேனும் நான்கு செயல்களை எழுதுக.

படித்தல், உறங்குதல், நடத்தல், குதித்தல்.


கலந்துரையாடுவோமா!

இப்படத்தில் விலங்குகள் நீர் நிலையின் அருகில் காணப்படுகின்றன. அவை ஏன் அங்கு கூடி உள்ளன?

இப்படத்தைப் பற்றி ஓரிரு வரிகள் எழுதுக. 

விலங்குகளுக்கு மனிதனைப் போல் நீர் தேவை. அவைகளுக்கு தாகம் ஏற்படும்போது நீர் குடிக்க, நீர்நிலையைத் தேடி வரும். 

உங்கள் ஆசிரியரிடம் கேட்க. 

காட்டு விலங்குகள் மனிதனின் வாழ்விடத்திற்குள் நுழைவது ஏன்? 

மனிதன் விலங்குகளின் இடத்தை ஆக்கிரமித்துள்ளான். அவைகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்போது மனிதர்கள் ஆக்கிரமித்த தங்களது பகுதியைத் தேடி வருகின்றன. எனவே காட்டு விலங்குகள் மனிதனின் வாழ்விடத்திற்குள் நுழைகிறது.


மாற்றியமைப்போமா!

மாறியுள்ள எழுத்துகளை முறைப்படுத்தி, பல்வேறு நீர் ஆதாரங்களைக் கண்டறிந்து எழுதுக. 

எ.கா: மழை (ழைம) 

ஏரி (ரி ஏ)

ஓடை (டை ஓ)

குளம் (ம் கு ள)

கிணறு (ண கி று)

கடல் (ல் ட க)

பெருங்கடல் (ரு பெ ல் ட் ட க)


கலந்துரையாடுவோமா!

பின்வரும் படங்களை உற்றுநோக்கி, அவற்றுள் எந்த நீர் பருக உகந்தது என்பதை () குறியிட்டு, அதைப்பற்றி நண்பர்களுடன் கலந்துரையாடுக.

(மாணவர்கள் நண்பர்களுடன் கலந்துரையாடவும்)



கண்டுபிடிப்போமா!

குளிர்ச்சியாய் இருக்கும்போது உறைவேன். பனிபோல் மென்மையாக விழுவேன் சூரிய வெப்பத்தால் உருகி, மலையில் இருந்து வழிந்து ஓடி வருவேன். நான் யார்? 

விடை : நீர்


செய்து மகிழ்வோமா!

எளிய குழாய் 

தேவைப்படும் பொருள்கள்; 

உலோகம் அல்லது நெகிழியால் ஆன ஒரு உள்ளீடற்ற குழாய் அல்லது பப்பாளிச் செடியின் நீளமான இலைக்காம்பு

செய்முறை: 

உள்ளீடற்ற குழாயை உங்களது இடது கையால் பிடித்துக்கொண்டு வாளியில் உள்ள நீரில் மேலும் கீழுமாக நகர்த்த வேண்டும். உங்களின் வலது உள்ளங்கையால் குழாயின் மேற்பகுதியை மூடியும் திறந்தும், நீரில் குழாயை மேலும் கீழும் அசைக்க வேண்டும். உடனே நீர் வெளியே வேகமாக வருவதைக் காணலாம். இங்கு இடது கையால் மேலும் கீழும் அசைப்பது நீர் இறைக்கும் செயலைச் செய்கிறது. வலது உள்ளங்கை அடைப்பானாகச் (வால்வு) செயல்படுகிறது. (மாணவர் செயல்பாடு)



பதிலளிப்போமா!

நீரைச் சேமிக்க உதவும் சில வழிமுறைகளை எழுதுக. 

• பயன்பாடு இல்லாதபோது குழாயை அடைக்க வேண்டும்.

• செடிகளுக்கு சொட்டு நீர்ப் பாசன முறையைப் பயன்படுத்த வேண்டும்.

• தண்ணீர் நிரம்பி வழிந்து செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 


முயற்சிப்போமா!

பின்வரும் வினாக்களுக்கு () குறியிடுக. உங்கள் பதில் கொடுக்கப்பட்டுள்ள படங்களிலிருந்து மாறுபட்டால் அருகிலுள்ள கட்டத்தில் அதன் பெயரை எழுதுக. 

1. நீர்  அருந்த பின்வருவனவற்றுள் எதைப் பயன்படுத்துவீர்கள்?

2. உங்கள் வீட்டில் எந்தப் பாத்திரத்தில் குடிநீர் சேமித்து வைக்கப்படுகிறது?

3. உங்களுக்கு குடிநீர் எங்கிருந்து கிடைக்கிறது?


புள்ளிகளை இணைத்து படத்திற்கு வண்ணம் தீட்டி, வாக்கியத்தை முழுமைப்படுத்துக.

ஒவ்வொரு சொட்டு நீரையும் சேமிக்க வேண்டும்.


காடுகளில் உள்ள மரங்கள் தாங்கள் வளர்வதற்குத் தேவையான தண்ணீரை எங்கிருந்து பெறுகின்றன.

• காடுபகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உயர்வாக இருக்கும். 

• வேர்கள் மழை நீரைத் தடுத்து சேமிக்க உதவுகிறது.

• காற்றில் கானகப் பகுதியில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்.

• எனவே, மரங்கள் எளிதாக வளரும். 


அசுத்தமான நீரைப் பருகுவதால் என்ன நிகழும் என்பதை உங்கள் நண்பர்களுடன் கலந்துரையாடி எழுதுக.

காலரா, வயிற்றுப்போக்கு, டைபாய்டு போன்ற நோய்கள் ஏற்படும்.



விடையளிப்போமா!

அ) கீழ்க்காண்பனவற்றுள் நீரைச் சேமிக்கும் சரியான செயல்களுக்கு () குறியும், தவறான செயல்களுக்கு (X) குறியும் இடுக. 

1. நாம் தினமும் நமது வாகனங்களைக் கழுவ வேண்டும்.  (X) 

2. அதிக மரங்களை நடுவது மழைப் பொழிவினை ஏற்படுத்தும்.  ()

3. நீர்த்தூவி குழாயில் குளித்தால் நீரைச் சேமிக்கலாம்.  (X)

4. மழைநீரைச் சேகரிப்பது அவசியம்.  ()


ஆ) படங்களைப் பார்த்து பின்வரும் வினாக்களுக்கு விடையளி.

நாம் இவற்றில் நீர் நிரப்பும்பொழுது, 

1. எது குறைந்த அளவு நீரைக் கொண்டிருக்கும்? 

டம்ளர்

2. எது அதிக அளவு நீரைக் கொண்டிருக்கும்? 

வாளி

3. எப்படி அவ்வாறு கூற முடியும்?

வாளியின் கன அளவு அதிகம்


செய்வோமா!

பல்வேறு செயல்களுக்குப் பயன்படும் நீர் ஆதாரங்களைப் பின்வரும் அட்டவணையில் () குறியிட்டு காட்டுக.

பொது வளங்கான நீர்நிலைகளைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.


Tags : Water | Term 2 Chapter 2 | 3rd Science நீர் | இரண்டாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு அறிவியல்.
3rd Science : Term 2 Unit 2 : Water : Questions with Answers Water | Term 2 Chapter 2 | 3rd Science in Tamil : 3rd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 3 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 2 : நீர் : வினா விடை - நீர் | இரண்டாம் பருவம் அலகு 2 | 3 ஆம் வகுப்பு அறிவியல் : 3 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
3 ஆம் வகுப்பு அறிவியல் : இரண்டாம் பருவம் அலகு 2 : நீர்